ஏன் பொது அறிவு அரிதாகவே காணப்படுகிறது?

Topic started by http://amalasingh.blogspot.com/ (@ cvx-213-48-65-178-wol.cableinet.co.uk) on Tue Nov 18 17:07:26 EST 2003.
All times in EST +10:30 for IST.

ஏன் பொது அறிவு அரிதாகவே காணப்படுகிறது?

- இதற்கான அடிப்படைக்காரணம்
இரட்டையியல்(Dithiesm) - அது
இரண்டு ஒன்றுக்கொன்று முரணான
சக்திகளின் மீதான செயற்கையான
நம்பிக்கை.

மனிதர்கள் இயற்கை மற்றும் இயற்கை
யான வாழ்வு என்பதிலிருந்து வெகு
வாக விலகி வந்துவிட்டனர். இந்த
இரட்டையியல் இந்த உலகை
இது அல்லது இதற்கு எதிரானது
என்ற கொள்கையை வளர்த்து
விட்டு விட்டது.

இந்த எடுத்துக்காட்டுகளைக்
காணுங்கள்.

ஒளி இருளுக்கு எதிரானதா?
அல்லது அதற்கு நிரவியா?(complementary)

இருள் இல்லையென்றால்
கதிரவனின் பயன் என்ன?

ஆண்கள் பெண்களுக்கு
எதிரானவர்களா? இல்லை
அவர்களின் நிரவியா?

மின் பொருத்திகள் துளைகளுக்கு
எதிரா? இல்லை அவற்றின்
நிரவியா?
அழகும் கரடு முரடான தன்மையும்
முரண்பட்டவையா?

உலகின் எல்லாத்தோட்டத்துப்
பூக்களும் ரோஜாக்கள் என்றால்
ரோஜாவை யாராவது விரும்புவரா?

தோட்டங்களின் பல்வேறு பூக்கள்
இல்லையென்றால் ரோஜாவிற்கு
தனியிடம் கிடைக்குமா?

நல்லது-வாய்ப்புக்கள் என்பன
கெட்டது-ஏமாற்றம்/சிக்கல்கள்
இவற்றிற்கு நிரப்புக்கணம் தானே!

சிக்கல்கள்=வாய்ப்புக்கள்
உலகில் சிக்கல்களே இல்லையென்றால்
வாய்ப்புக்கள் எங்கிருந்து வரும்.

போர் அமைதிக்கு எதிரியா?
நிரவியா?
அமைதிக்காகப்போராடும் ஆற்றல்
போரினால் ஏற்படும் களைப்பிலிருந்து
தானே வருகிறது!!

நீண்ட அமைதி ஒரு விதமான மந்தநிலை
மற்றும் மறுப்பு இவற்றை ஏற்படுத்தி,
அதன் பின் விளைவாக சமூகத்தில்
கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது தானே?
அல்லது மார்ட்டின் லூதர் கிங் சொன்னது
மாதிரி "கலவரங்கள் கேட்கப்படாமையின்
மொழி", ஜான் எஃப் கென்னடி சொன்ன
மாதிரி "அமைதியான மாற்றங்களை
ஏற்படுத்த முடியாதவர்கள், வன்முறை
யிலான மாற்றங்களைத்தவிர்க்க
இயலாது" நிகழ்வுகளை ஏற்படுத்து
கின்றன தானே? போர் என்பது குழப்ப
நிலையின் உச்சக்கட்டமே.

எந்த ஒரு எதிரானது என்று கருதக்
கூடிய இரட்டையை எடுத்துக்
கொள்ளுங்கள் நீங்கள் வாழ்க்கைச்
சுழற்சியின் நிரவிகளைக்காணவியலும்.

கண்ணை மூடிக்கொண்டு
எதிரெதிர் என்று கருதுவதால்
அதன் பின் விளைவுகளை
நாம் காணமுடியும்.

யாராவது "ஓ அது மிக விலை
உயர்வாக இருக்கிறது" என்று
சொனனால் "அது எதனோடு
ஒப்பிடும்போது?", "இது
இல்லாமல் என்னால் சமாளிக்க
முடியுமா? இதை வாங்கவில்லை
என்றால் அதன் பின் விளைவுகள்
இதன் விலையைவிட அதிகமாக
தெண்டம் கட்டவைக்குமா?"
இதற்கு விடை முக்கியமுடிவுக
ளோடு அதன் பின்னணியையும்
ஆராய்ந்து அதனையும் முக்கிய
முடிவோடு சமப்படுத்துவதில்தான்
இருக்கிறது.

மற்றொரு பின்விளைவு, கோழைத்தனம்
மற்றும் நேர்மையற்ற தன்மை. இது
எதனால் என்றால் நம்முடைய கவனம்
சரியான வார்த்தைகளைவிட,
சற்றே அலங்கரிக்கப்பட்ட வார்த்தை
களின் மீது இருப்பதே.

உதாரணமாக ஆங்கிலத்திலே, 'ஹௌ
ஓல்ட் ஆர் யூ'. இதற்கு தமிழிலிலே
நீ எவ்வளவு முதியவன் என்று பொருள்.
உனக்கு எவ்வளவு வயது என்று
கேட்டால் அது தகவலைப்பெறுவதற்கான
சரியான கேள்வி. அதையே நீ எவ்வளவு
முதியவன் எனக்கேட்டால் விடை
அளிப்பவனை மிரட்டும் கேள்வியாக
தகவல் சரிவரக்கிடைக்காமல் போய்
விடக்கூடும். மொழி என்பது
பல கோடி ரூபாய் பெருமானமுள்ள
குழப்பங்களை உருவாக்கும் சாதனமா
என்ன?

இந்த உலகை எதிரெதிர் பொருட்
களாகக்காண்பது சிந்தனையில்
பெரும் தடையை ஏற்படுத்துகிறது.
பயத்துடன் கலந்த கோழைத்தனம்,
இந்த இரட்டையியல் இவை இரண்டும்
விதி விலக்குகளை மிகைப்படுத்தி,
விதிகளை அலட்சியப்படுத்துகின்றன.
இது சற்றே கடினமான மறுப்புகளை
ஏற்பதைத்தடை செய்கிறது. இது
இரட்டையியலின் மோசமான
விளைவு. இது உண்மையை மங்க
வைக்கிறது. இது இரண்டையும்
ஆராய்ந்து செயல்படுவதைத்தடுக்கிறது.

ஒரு சமூகம் கவனிப்பவற்றை ஏற்றுக்
கொள்ளமுடியாதபோது, அவர்கள்
புவி தட்டையானது என்று சொன்ன
வர்களோடு உடன்பாடானவர்கள் போல
நடிக்கும்போது, புவி உருண்டை
என்பதை ஏற்றுக்கொள்வது சற்றே
கடினமாக இருப்பதால் அதை
ஏற்றுக்கொள்ள முடியவில்லை
என்கிறபோது, அவர்களால் விபரம்
தெரிந்தவர்களாக முடியாது. அவர்கள்
கூட்டத்தோடு கூட்டமாக மந்தையாகிப்
போகிவிடுகின்றனர். அய்ரோப்பாவின்
இருண்ட காலம்போல, இதை எந்த
ஒரு அறிவைப்பெருக்கும் கருவியாலும்
மாற்றமுடியாது.

இதற்கு என்ன தீர்வு? இந்த உலகை
ஏழு நாட்களுக்கு இயற்கையாகப்
பாருங்கள் - பின் விளைவுகளைச்
சிந்தியுங்கள். சதுரங்களில் உள்ள
வளைவுகளை உணருங்கள். திரவ
நிலையை உணருங்கள். வட்டார
மொழி வழக்குகளைக்கேளுங்கள்.
நிலவின் நாம் பார்க்க முடியாத
பக்கத்தைப்பாருங்கள். இந்த உலகை
நிறைவு/மாற்றுப்பொருட்களாக,
உண்மையோ பொய்யோ பாருங்கள்.
எடுத்துக்காட்டாக, யாராவது
உங்களுடைய நாள் எப்படி
இருக்கிறது என்று கேட்டால்,
ரோஜாக்கள், முட்கள், இடைப்பட்ட
நிலை இப்படி பதிலளியுங்கள்.
இந்த விடை நல்லா இருக்கு, நல்லா
இல்லை என்பதை விட சிறந்ததாக
இருக்கக்கூடும், உங்களுடைய
இரண்டுவிதமான நிலைப்பாட்டை
அது வெளிப்படுத்தும்பட்சத்தில்.

-பாலா பிள்ளை
http://www.ryze.com/go/bala


Responses:


  Tell your friend about this topic

Want to post a response?

Post a response:

Name:

E-mail:


Please Reload to see your response


Back to the Forum