கவிதை எழுதுவோம் வாருங்கள்.

Thread started by kalnayak on 28th January 2015 04:50 PMநண்பர்களே, நண்பர்களே!!!

தமிழ் இலக்கிய வரிசையில் கவிதை எழுத ஆர்வம் கொள்பவர்களுக்காக ஒரு புதிய திரி இது. இது போன்ற திரியை (அதாவது கவிதையை மட்டுமே எழுதுவதற்கான திரியை) நான் காணவில்லை இங்கே. அதணால் இந்த புதிய திரி. பல திரிகளிலும் பலரும் கவிதை எழுதுகிறார்கள். அவைகளை, அவர்களை ஒருங்கிணைப்பதற்கே*இத்திரி. உங்கள் கவிதை எழுதும் திறனை இங்கே பறை சாற்றுங்கள். என்ன வழக்கம் போல் ஒரே ஒரு வேண்டுகோள் எல்லோரும் இணக்கமாக சென்றிட மாறுபட்ட கருத்துககளை வலிந்து திணிக்காதீர்கள். நல்ல தலைப்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்படுவதே.

இதோ எனது முதற்கவிதை, கணித வார்த்தைகளை கொண்டு:

சதுரங்க போட்டியில் பலவிதமாய் காய்களை பெருக்கி
அவைகளை கட்டங்களில் முன்னேற்றிச்செல்லும் விதி வகுத்து
எதிரியின் காய்களை வகைவகையாய் பின்னாமாக்கும் முறைசாற்றி
நீட்டிய வேளையுடன் நிறுத்தாமல் இழுத்தடிக்கும் போதினிலே
அகல மறுக்கின்றார் அவனியுலோர் முடிவு தெரிவதற்கு
காய்களை கழித்தாயிற்று, கூட்டமாய் கட்டங்களை இழந்துமாயிற்று
திறங்களை கனமாய் பெறவேதம் சிப்பாயை முன்னேற்றுகிறார்
எக்கணமும் ஒருவர் வெல்லக்கூடுமில்லையேல் இருவரும் சமமாவர்
எவர் வெல்வர் என அறிய காத்திருப்போம், முடிவிலி எவருமிலர்.

நீங்களும் உங்கள் கற்பனை குதிரையின் சிறகை தட்டுங்களேன்.Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)