கண்ணோட்டம்...!!!!!!!

Thread started by Madhu Sree on 15th November 2014 12:55 AMஅம்மா நான் சுகன்யா வீட்டுக்கு போறேன் Bye!
ஏய் இருடி எங்கடி போற ஏய்
போ மா!
போகாத சொல்லிட்டேன்!
அட போ மா Bye...!
சொன்னா கேக்கறியா இரு அப்பா வரட்டும் தோல உரிக்க சொல்றேன்!
ச்சீ பே! என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டாள் கீர்த்தனா

ஹாய் டீ!
ஹாய் ஹாய் ஹாய்! என்று குதித்தாள் சுகன்யா, கீர்த்தனாவின் உயிர் தோழி ! வா டீ எரும!
எனக்கு செம்ம போர் அடிக்குது வீட்ல இன்னும் 2 weeks ல நமக்கு mid-term ஆரம்பிக்குது, ஏன்தான் exams வைக்குறாங்கனு இருக்கு. அடிப்பாவி படிச்சிட்டு இருக்கியா! என்றாள் கீர்த்தனா
hello அதெல்லாம் இல்ல அப்பா வர நேரம் அதான் சும்மா இல்லாட்டி tension ஆகிடுவார், உங்க அப்பா கூட வர time ல?
என் அப்பா வர இன்னும் 2 மணிநேரம் ஆகும் சமாளிச்சுக்குவேன், என்றாள் கீர்த்தனா, bore அடித்தவள் போல் அப்பறம் ... என்றாள்
வெளிய போய் படிப்பமா என்றாள் சுகன்யா
ஏண்டி என்றாள் கீர்த்தனா
பத்ரீ and group வருவாங்க டீ
அதுக்கு?
ஹ்ம்ம் மக்கு சும்மா bore அடிக்குதுன்னு சொன்னல?
so?
வா டீ போகலாம் கேள்வி கேக்காத ... என்று இழுத்தாள் சுகன்யா
சரி வா என்று சம்மதித்தாள் கீர்த்தனா

கீழே ground இல் கோலி ஆடிக்கொண்டிருந்தனர் ஸ்ரீதர் and group
பத்ரீகோலியை சுண்டிவிட, தோழன் கலையரசன் டேய் மச்சான் வந்துட்டா டா! என்றான்
யாரு டா என்றான் பத்ரீ
அதான் சுக்கு காப்பி என்றான் கலை, சுகன்யாவுக்கு இவர்கள் வைத்த பெயர் 'சுக்கு காப்பி'
கூட அம்பாஸிடர் வேற வந்திருக்கு என்றான் ராக்கி என்கிற ராக்கேஷ்... விஷமமாய் சிரித்தனர் அனைவரும்...

முதல் மாடியில் படிப்பது போல் book-ஐ வைத்துக்கொண்டு நின்றாள் சுகன்யா...
கீர்த்தனா அவங்க ஏன் mid-termkku படிக்காம இப்படி விளையாட்டிருக்காங்க என்றாள் சுகன்யா... அவளுக்கு தெரியும் இந்த அசடு உடனே அங்கே கேட்க்கும் என்று

ஹாய் ஸ்ரீதர் கலை ராக்கி, எல்லாம் mid-termkku படிச்சாச்சா என்று கேட்டாள் கீர்த்தனா
இல்ல கீர்த்தனா எங்களுக்கு நெறைய புரியல, doubts இருக்கு ... என்றான் கலை

'is it? why dont we group study' என்றாள் கீர்த்தனா ...
விஷமமாய் சிரித்தனர் பத்ரீ and group...
முகம் குழப்பமாய் போனது கீர்த்தனாவுக்கு...

கலை என்ன doubts-னு சொல்லுங்க, கீர்த்தனா solve பண்ணுவா என்று கூறி சிரித்தாள் சுகன்யா...
ம்ம்ம்? what... வெளயாடுறியா என்றாள் கீர்த்தனா...

ok எப்போன்னு சொல்லு சுக்க்ஸ் வறோம் என்றான் கலை...
பத்ரீ கண்கள் சுகன்யா கண்களை சந்திக்க, ஒ ஹோ என்று கூவினர் பத்ரீ group..
இருவருடைய கண்களும் வேறு திசைக்கு செல்லவும், சுகன்யா அப்பா வரவும் சரியாக இருந்தது...

சுகன்யா உடனே உள்ளே சென்றாள்.. கீர்த்தனா அவள் வீட்டுக்கு செல்லவே இஷ்டம் இல்லாமல் சென்றாள் ...
உள்ளே செல்ல அப்பா வந்திருப்பது தெரிய கலவரமாய் இருந்தது கீர்த்தனாவுக்கு ...

எங்க போயிருந்த? என்றார் அப்பா...

அப்பா சுகன்யாவோட படிக்க போயிருந்தேன் என்றாள் கீர்த்தனா
கையில ஒரு book கூட இல்லாம என்ன கிழிக்க போன? என்று எழுந்தார் அப்பா...
அம்மா நன்றாய் போட்டு கொடுத்திருக்கிறாள் என்று புரிந்தது
அம்மாவை முறைத்தாள் கீர்த்தனா...
அங்க என்னடி முறைப்பு.... போ போய் வெளிய நில்லு, நான் சொல்ற வரைக்கும் உள்ள வராத என்று கடுமையாய் சொன்னார் அப்பா....
அப்பா please-ப்பா , sorry-ப்பா என்று குழைந்தாள் கீர்த்தனா...
நீயா போறியா இல்ல இழுத்து தள்ளி கதவ சாத்தட்டா என்றார் அப்பா...
முடியாது உன்னால என்ன பண்ண முடியும் என்று பிடிவாதம் பிடித்தாள் ...Responses:
Want to post a response?

(Hello Guest, you need to login to post a response. Are you a New User? Register first.)