Results 1,001 to 1,010 of 1127

Thread: TV Serial Songs

Threaded View

  1. #11
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இளவரசி --சன் தொலைக்காட்சி - பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது


    ஒலி வடிவில்
    பாடல் : சினேகன்
    பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்
    இசை: கிரண்
    இயக்கம்: என்.சந்தானம்


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர், `இளவரசி'.

    நடுத்தர வர்க்க குடும்பத்தினரின் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், சந்தோஷி, மனு, காத்தாடி ராமமூர்த்தி, ஜெயமணி, ரேவதி சங்கர், நந்தகுமார், சாந்தி கணேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே தொடர்களை தந்த `ரடான்' நிறுவனத்தின் அடுத்த படைப்பு `இளவரசி'. நடுத்தர வர்க்கத்து குடும்ப சூழ்நிலைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இளவரசி நடுத்தரக் குடும்பத்துப் பெண். சாதாரண சீட்டுக் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறாள். தகப்பனார் கதிரேசன் ஒரு கார்பென்டர். அவர் தனது மகள் இளவரசிக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். அவளை மணக்கப் போகும் கார்த்திகேயன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மணமகனின் பெற்றோர் பணத்திற்கு ஆசைப்பட்டு இளவரசி வீட்டில் அதிக வரதட்சணை கேட்கிறார்கள். தன் மகளின் திருமணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆசையில் தனது தகுதிக்கு மீறி பல இடங்களில் கடன் வாங்கியும், தன் இளைய மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தையும் கொடுத்து திருமணத்தை நடத்த முற்படுகிறார்.

    இதனால் ஏற்படுகின்ற பல்வேறு மன உளைச்சலில் அவர் தவியாய் தவித்துக் கொண்டிருந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதனால் திருமண ஆசைக் கனவுகளோடு காத்திருந்த இளவரசி அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்த நிலையில் இளவரசிக்கும், கார்த்திகேயனுக்கும் நிச்சயித்தபடி திருமணம் நடக்குமா? வரும் எபிசோடுகளில் அதிரடியான விடை கிடைக்கும்.'' என்கிறார், கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.



    கதை-திரைக்கதை எழுதி இயக்குபவர் என்.சந்தானம்.
    ஒளிப்பதிவு: பாலகுருநாதன்.
    வசனம் சுரேஷ் கிருஷ்.
    சினேகன் எழுதிய டைட்டில் பாடலை பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடியுள்ளார்.
    இசையமைத்திருப் பவர் கிரண்.
    கிரியேட்டிவ் ஹெட்: ராதிகா சரத்குமார்.
    தயாரிப்பு: ரடான் நிறுவனம்.


    ஒரு முறை ஒளி வடிவில் பார்த்து மகிழ:


    Last edited by aanaa; 27th December 2011 at 12:36 AM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Raja's unpicturized songs and Songs in unreleased movies
    By Sureshs65 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 38
    Last Post: 22nd January 2012, 01:54 PM
  2. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  3. Request of Sun Tv Serial songs
    By aarthikasturi in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 11th June 2007, 10:35 PM
  4. Creating a new website to watch and listen to Serial Songs
    By gta129 in forum TV,TV Serials and Radio
    Replies: 26
    Last Post: 13th March 2007, 02:34 AM
  5. songs in serial: Sahana
    By Poppoy in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 17th August 2006, 02:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •