விபத்தில் உயிரிழந்தது நானில்லை : நடிகை ரேகா விளக்கம்


வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை ரீகா சிந்து மரணம். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பொழுது, விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.


இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தது தெய்வ மகள் சீரியல் அண்ணியார் நடிகை காயத்ரி ரேகா என தகவல் பரவியது. இதனால் சினி உலகம் பரபரப்பானது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தது தான் இல்லை என ரேகா விளக்கம் அளித்துள்ளார். <br><br>வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் காயத்ரி ரேகா அளித்துள்ள விளக்கத்தில், கடவுள் அருளால் நான் நலமுடன் உள்ளேன். விபத்தில் சிக்கி உயிரிழந்தது வேறு சிந்து ரேகாவாக இருக்கலாம். நான் எனது குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கார் விபத்தில் சின்னத்திரை நடிகை மர்ம மரணம்


வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரீகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.<br><br>பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் ரீகாவுடன் வந்த அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ரீகாவின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
<hr>
அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரீகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், சந்தீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரீகாவும் மர்மமான முறையில் இறந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




நன்றி: தினதந்தி