நந்தினியில் கலக்கும் மாளவிகா


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் என்ன சத்தம் இந்த நேரம். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா வேலஸ். இதில் இயக்குனர் ராஜா, நிதின் சத்யா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மாளவிகாவுக்கு இது முதல் தமிழ் படம் என்றாலும், மலையாளத்தில் ஏராளமான படத்தில் நடித்துள்ளார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், மகரமஞ்சு, ஆட்டகதா முக்கிய படங்கள். இதுதவிர சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அழகு மகன், அறுசுவை அரசன் என்ற தமிழ் படங்ளிலும் நடித்தார்.


அதன்பிறகு சின்னத்திரைக்கு வந்தார். அமிர்தா டி.வியிலில் சூப்பர் ஸ்டார் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தியவர். அதன்பிறகு பொன்னம்பில்லி என்ற மலையாள தொடரில் நடித்தார். அதன் மூலம் இப்போது தமிழ் நந்தினிக்கு வந்திருக்கிறார். நந்தினியில் அவர் ஜானகி கேரக்டரில் நடித்து வருகிறார். அவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் உற்சாகமாக நடித்து வருகிறார். இதன் மூலம் தமிழ் சினிமா பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் தமிழ் படங்களில் அக்கா, அண்ணி போன்ற குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.


நன்றி: தினமலர்