Punithamaa? Asingamaa?
Topic started by yatchani (@ 202.138.120.37) on Wed May 12 02:56:16 EDT 2004.
All times in EST +10:30 for IST.
அன்பு தோழர்களே,
வணக்கம்.
புனிதம் என்று சில வார்த்தைகள்
அசிங்கம் என்று சில வார்த்தைகள்
தமிழர்களாகிய நாம் ஒதுக்கி வைத்து உள்ளோம்,
உடல் உறுப்புகளைக் குறிக்கும் வார்த்தைகள் கூட
அசிங்கமானவையாக ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது.
கை, கால் கண், மூக்கு , வாய் என்பது போலத்தான்
யோனி ( இது வடச் சொல் ), முலை போன்ற வார்ட்டைகளும்
இவற்றை பயன் படுத்த நாம் ஏன் தயங்க வேண்டும்?
''யோனி'' என்ற வார்த்தை பெண்ணின் பிறப்பு உறுப்பை குறிக்கிறது
ஆனால் அது தமிழ் சொல் அல்ல. தமிழ் சொல்லான '' அல்குல்'' மற்றும் கொச்சையாக நாம் கருதும்
''கூதி'' என்ற வார்த்தையை நாம் பயன் படுத்த தயங்குவது ஏன்? ஆணுறுப்பை '' தமிழ் அல்லாத வார்த்தையான ''லிங்கம்'' என்று குறிப்பிடுவது ஏன்? கொச்சையாகவும் வசவுச் சொல்லாகவும் கருதும் '' சுன்னி'' என்ற வார்த்தை ஏன் மறுக்கப் பட்டது? இவ்வார்த்தைகள் நாகரீகமாவை இல்லை என்றால் நாகரீகமான வார்த்தைகள் செய்யலாமே? இத்தனை ஆண்டுகளாய் என்ன புடுங்கினோம்?
ஏதோ ஒரு சில கவிஞர்கள் குறிப்பாய் பெண்கள் இவ்வாறான வார்த்தைகளை பயன் படுத்தியதால் அவர்களை சாலையில் நிற்க வைத்து எரிக்க வேண்டும் என்கிறார் ஒருவர். அவராவது கொடுக்கட்டுமே இதற்கான மாற்று வார்த்தைகளை ?
பதில் தாருங்கள் தோழர்களே>..............
யாட்சனி
Responses:
- Old responses
- From: Yatchani (@ 202.138.120.37)
on: Tue May 18 02:01:57 EDT 2004
அன்பு சொப்பன பாரதி அவர்களுக்கு,
வணக்கம். எனது விபரீதமான வினாக்களுக்கு மிக விளக்கமாக பதில் சொல்லியதற்கு மிக்க நன்றி. இலைமறைக்காயாகவே பழைய இலக்கியங்களில் பல வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள எடுத்துக்காட்டுகள் மிகப் பொருத்தமானது. 'ஒருவகை ஈக்கள் சேகரித்த இனிப்பு நீர் '' என்று குறிப்பிடுவதை விட ''தேன் '' என்று ஒற்றைச் சொல்லால் குறிப்பிடலாமே? என்றுதான் இந்த விவாதத்தை துவக்கினேன்.
பிறப்புறுப்பு, பாலுறுப்பு என்று விளக்கம் தருவதாக அமையும் வார்த்தைகளை விட்டு அதற்கான நாகரீக வார்த்தை என்ன எனப்தை ஆராயலாமே. குட்டி ரேவதி, சுகிர்தராணி, சல்மா மற்றும் மாலதி மைத்திரி போன்ற பெண்கள் இந்த சமூகம் நாசமாகப் போகவேண்டும் என்று எழுத வந்திருப்பவர்கள் போல தெரியவில்லை. அவர்கள் கூறும் பெண் மொழி நாகரீகமானது இல்லை என்று எதை வைத்துக் கூற முடியும் . இது வரை யாரும் ''எழுத்தில்'' பயன்படுத்தாத வார்த்தைகளை பயன் படுத்தி வருகிறார்களே அதனால் தான் அவர்கள் மொழி ஏற்றுக் கொள்ள முடியவில்லையா?
எண்ணம் பிழையாக இருப்பின் எந்த வார்த்தைகள் கொண்டு பாடினால் என்ன ? ''சின்ன வீடா வரட்டுமா...'' ''பொம்பளைக்கு சுழுக்கு எடுக்கும் வித்தைகளைக்...'' மற்றும் ''மன்மத ராசா....''போன்ற திரைப்படப் பாடல்கள் நீங்கள் குறிப்பிட இலைமறைக் காயாகத்தான் விரசங்களைக் கூறியுள்ளது. '' தண்ணீர் கேட்டியேப் பெண்ணே தாகம் தீர்ந்ததா?..( படம்: சகலகலா வல்லவன்) '' நான் பூ வெடுத்து வைக்கனும் பின்னால.. அத வைக்கிறப்ப சொக்கனும் தன்னால'' என்றும் இலைமறைக்காயாக எடுத்துக் கூறப் படுவதே சிறப்பு என்கிறீர்கள். சரி இவற்றை இலக்கியம் என்கிறோமா? என்ற விவாதம் வேண்டாம். எழுத்தப் படும் கவிதைகளாவது கவிதை வாசிக்கும் வட்டத்தைத்தான் பாதிக்கும் ஆனால் இவ்வாறான பாடல்கள் ? என்ன செய்யலாம் என்று அப்பாவித்தனமாகவும் கொஞ்சம் அக்கரையோடும் கேட்கும் என் போன்றவர்களை விளக்கம் சொல்லி விரட்டுவது இல்லையேல் மிரட்டுவது. ஆனால் எப்பொழுதும் தீர்வு சொல்வது கிடையாது.
பழம் இலக்கியங்களில் கூறப்பட்டது இருக்கட்டும். இன்று பத்து வயது சிறுவன் தனது சக சிறுவனைப் பார்த்து ''உங்கம்மாள ஓ.....'' என்று திட்டுகிறான். அவனுக்கு அவன் சொல்வது என்னவென்று தெரியுமா? அவ்வாரு செய்யத்தான் முடியுமா. அது அறியாமை என்று விட்டு விடலாம்.நல்ல வார்த்தை கெட்ட வார்த்தை என்று எப்படி ஆனது?''பின்னாலப் புண்ணு'' '' உட்கார்ர இடத்துல கட்டி '' இப்படித்தான் பேசி வருகிறோம். '' குண்டியில கட்டி'' என்று சொல்ல முடியாது தான். கால்ல அசிங்கத்த மிதிச்சிட்டான் என்று மட்டுமே சொல்லி வருகிறோம். கால்ல மலத்த மிதிச்சிட்டான் என்றோ கால்ல பீய மிதிச்சிட்டான் என்றோ சொல்ல முடியாது தான்.
தோழரே நீங்கள் சொல்லும் அனைத்தும் என் மனதில் உதித்தவைதான். உங்களுக்கு இச்சமுதாயத்தின் மேல் இருக்கும் அக்கரையைப் போல எனக்கும் உண்டு. என் சமுகத்தை பாழ்படுத்தும் சகலத்தையும் நான் வன்மையாக எதிர்ப்பவன் . இவ்வாறான வார்த்தைகள் மட்டுமல்ல. அவசியமற்ற பாடு பொருளும் கதைக் களமும், கருத்துகளும் தவிர்க்கப் பட வேண்டும் என்பதே என் அவா.
ஆனால் இன்று நான் கேட்கும் இதே வினாக்களை குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் வேறு யாரேனும் அக்கறையுடன் கேட்கக் கூடும் ,. அன்றும் இதே பதிலை கொடுக்கச் சம்மதமா? 200 ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடிக்கப் பட்ட பல பொருட்களுக்கு இன்னும் தமிழில் பெயர் வைக்கப் பட வில்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் இப்படித்தான் சொல்லி உள்ளார் என்றும். ஆன்டாள், அவ்வை என்றும் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
ஆண்டாள் போல் ஒரு பாடல் எழுத முடியுமா என்று கேட்டு பயமுறுத்தியே இளையத் தலைமுறையை அப்படி ஒன்றும் செய்ய விடாமல் ஆக்கி விட்டீர்கள். எங்களை ஊக்கப் படுத்துங்கள்.இன்னொரு ஆன்டாளாக உறுவாகிக் காட்டுகிறோம். சில தடுமாற்றங்கள் உள்ளதே என்ன செய்யலாம் என்று கேட்டால் இப்படி சாபம் விடுகிறீர்கள்.
வீட்டில் விளக்கம் கேட்டால் விரட்டி அடிக்கப் படும் குழந்தைகள் பக்கத்து வீட்டு மாமாக்களிடம் கேட்க பாலியல் பலாத்காரம் செய்யப் படுகின்றனர். அதைக் கூட அசிங்கம் என்று வெளியில் கூறாமல் மாமாக்களை காப்பாற்றி விடுறோம்.பலாத்க்காரப் பட்ட குழந்தையும் எப்படிச் சொல்லும். அவற்றை சொல்ல பயன்படும் சொற்களைத்தான் நாம் புனிதம் என்றும் அசிங்கம் என்றும் ஒதுக்கி வைத்து உள்ளோமே.
எதாவது செய்தாக வேண்டும். சொப்பன பாரதியும் யாட்சனியும் விவாதம் செய்து கொள்வதால் என்ன ஆகப் போகிறது. இருவருக்கும் கருத்து வேறுபாடு வரலாம் . நேரில் சந்திக்கையில் முறைத்துக் கொள்ளலாம்.
இன்னும் இது குறித்த விரிவான விவாதத்தினை விரும்புகிறேன். தைரிமாக வாருங்கள்.
அன்புடன்,
யாட்சனி.
- From: yatchani (@ 202.138.120.37)
on: Fri May 21 00:52:48 EDT 2004
¬¸¡ ! ÁÄõ ¦¾¡¼¡¾ Á¸¡§É......
Ţš¾õ ¦ºö ¾¢È¡É¢ þøÄ¡¾ º¢Ä÷ ÁÄõ ±ÉìÌô À¢Ê측Р±ýÚõ ¿¡ý ÁÄò¨¾ò ¦¾¡Îž¢ø¨Ä ±ýÚõ ÜÈ¢ì ¦¸¡ûŨ¾ ¿¡¸Ã£¸Á¡¸ ¸Õ¾Ä¡õ ¬É¡ø À¢ÃɸÙìÌ ¾£÷× ¸¡½ þÐ ºÃ¢Â¡É ÅÆ¢ÂøÄ.
ºÃ¢ Å¡Õí¸û ÃõÀ¡ ¦¾¡¨¼ ¦À⺡ «øÄÐ §ƒ¡¾¢¸¡ ¦¾¡¨¼ ¦À⺡ ±É Ţš¾õ ¦ºöÂÄ¡õ. ±ýÉ §¾¡Æ÷¸§Ç ¾¡Â¡Ã¡ö þÕí¸û . ÓÊó¾¡ø þ¨ÉÂò¾¢ø ±í¦¸øÄ¡õ ÓÊÔ§Á¡ «í¦¸øÄ¡õ ѨÆóÐ þó¾ þÕÅÕ¨¼Â Ò¨¸ô À¼í¸¨Çô À¡÷òÐì ¦¸¡ûÙí¸û.
²§¾ ¯í¸Çô §À¡¨Ä ¿¡Ö §À÷ ¸Å¢¨¾ ±Øи¢È ¦À¡õÀ¨Çí¸Ç §Ã¡ðÎÄ ¿¢ì¸ ÅîÍ ¦¸¡Øò¾ÛÓýÛ ¦º¡øÅ¡í¸ ¿¡í¸ À¡÷òÐ츢ðÎ ÍõÁ¡ þÕì¸Ûõ. ºÃ¢í¸ ¿¡ý À¢ý Å¡íì¸¢ì ¦¸¡û¸¢§Èý.
¸Îõ ±Ã¢îºÖ¼ý,
¡ðºÉ¢.
- From: kanna appan (@ 202.56.220.20)
on: Sat May 22 04:38:37 EDT 2004
rttt
Tell your friend about this topic
Want to post a response?
Back to the Forum