Topic started by Yatchani (@ 202.138.120.37) on Tue May 18 02:45:54 EDT 2004.
All times in EST +10:30 for IST.
விழிக்கும் ஆண்மை
-----------------
குனியும் போதெல்லாம்
நிமிர்ந்து பார்க்கிறது
உப்பிய சதைத்திட்டுகளை
சப்பிப் பார்க்கிறது கற்பனையில்
இயல்பாய் இயங்க முடியவில்லை
இமை கொட்டாமல் இருக்கிறது.
மறைத்தே இருந்தாலும்
விலக்கிப் பார்க்கவும்
மறைந்தே நிகழ்தாலும்
மறைந்திருந்து பார்க்கவும் செய்கிறது.
இவ்வளவுதானே என்று
சலிப்பதாயும் இல்லை
இன்னும் சிறப்பாயும்
இருக்குமோ எனவும்
சலித்துப் பார்க்கிறது.
ஆறாய் இருந்தாலும் சரி
யாராய் இருந்தாலும் சரி
ஆண்மையானது
ஆண்டாண்டு காலமாய்
பெண்ணை அப்படித்தான் பார்க்கிறது.
யாட்சனி.