கவிதைகள் பலவிதம்! ("kavithaikaL palavitham")
Topic started by ஜீனோ(geno) (@ 61.1.201.47) on Sun Aug 1 14:35:05 EDT 2004.
All times in EST +10:30 for IST.
நாம் படிதததில் விரும்பி ரசித்த கவிதைகளை இங்கு உள்ளிடலாம் என எண்ணி இந்தத் திரியைத் துவக்கினேன். நண்பர்கள் தாங்கள் விரும்பிய கவிகளை இங்கு மற்றையோருக்குப் பரிமாறி மகிழலாம் :=)
{{ To be able to read the UNICODE posts - you need to set your browser(IE)=> "view" => encoding to => "Unicode(UTF)". For detailed help for reading & writing/posting in UNICODE - refer this page :
http://forumhub.com/poems/2947.19.38.32.html#last }}
- ஜீனோ(geno)
Responses:
- From: ஜீனோ (@ 61.1.201.47)
on: Sun Aug 1 14:42:48 EDT 2004
எதிரெதிர் உலகங்கள் - கவிஞர் ஞானக்கூத்தன்
=================================================
கண்ணிமையாக் கால்தோயாத் தேவர் நாட்டில்
திரிசங்கைப் போகவிட மாட்டேன் என்று
ஒருமுட்டாள் சொன்னது பேராபத்தாச்சு
தன்னாளைத் திருப்பியதும் விஸ்வாமித்ரன்
கொதித்தெழுந்தான். பிரம்மாவுக் கெதிர்ப்படைப்புத்
தான் செய்வே னென்று சொல்லி ஆரம்பித்தான்
..தொடரும்..
- From: ஜீனோ (@ 61.1.201.47)
on: Sun Aug 1 14:45:34 EDT 2004
கண்ணிமையாக் கால்தோயாத் தேவரெல்லாம்
ஓடிவந்தார் கடவுளுடன். வேண்டாமென்று
முனிவர்களில் மாமணியைக் கெஞ்சிக் கேட்டார்
சினம்தணிந்தான் தவஞானி, ஆனால் அந்தக்
கணம்மட்டும் படைத்தவைகள் உலகில் என்றும்
இருந்துவர வேண்டுமென்றான். வரமும் பெற்றான்
அன்றுமுதல் பிரம்மாவும் விஸ்வாமித்ர
மாமுனியும் படைத்தவைகள் அடுத்தடுத்து
வாழ்ந்துவரல் வழக்காச்சு. எடுத்துக்காட்டு
(.....)
- From: ஜீனோ (@ 61.1.201.47)
on: Sun Aug 1 14:46:57 EDT 2004
மயிலுக்கு வான்கோழி புலிக்குப் பூனை
குதிரைக்குக் கழுதை குயிலுக்குக் காக்கை
கவிஞர்களுக் கெந்நாளும் பண்டிட்ஜீக்கள்.
- கவிஞர் ஞானக்கூத்தன்
- From: geno (@ 61.2.32.55)
on: Mon Aug 2 05:39:11 EDT 2004
yArukkum unicde padikka mudiyaliyA?!! hmmm..pEsAma idhai TSCII-liyE post panniyirukkalAm! :=))))
Tell your friend about this topic
Want to post a response?
Back to the Forum