Thread started by aanaa on 16th August 2008 09:08 AM
அவர் வேறு யாருமில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்தான். அவர் தமிழராகவும் இருக்கலாம். ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இது தான் யார் அவர் நிகழ்ச்சி.
மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நேயர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொகுப்பாளரிடம் கேள்விகள் கேட்கலாம்.
அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவரா? உயிருடன் இருக்கிறாரா? இப்படி ஆம், இல்லை என்று பதில் வரக் கூடிய 15 கேள்விகள் மட்டும் தான் தொகுப்பாளரிடம் கேட்கலாம். அதற்குள் போட்டியாளர் சரியான பதிலைக் கண்டு பிடித்து தொகுப்பாளரிடம் சொன்னால் பரிசு. இந்த நிகழ்ச்சியை சொல்விளையாட்டு கார்த்திகா தொகுத்து வழங்குகிறார்.
-
From: aanaa
on 10th May 2017 05:43 AM
[Full View]
விபத்தில் உயிரிழந்தது நானில்லை : நடிகை ரேகா விளக்கம்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகை ரீகா சிந்து மரணம். பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த பொழுது, விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தது தெய்வ மகள் சீரியல் அண்ணியார் நடிகை காயத்ரி ரேகா என தகவல் பரவியது. இதனால் சினி உலகம் பரபரப்பானது. இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தது தான் இல்லை என ரேகா விளக்கம் அளித்துள்ளார். <br><br>வாட்ஸ்ஆப் வீடியோ மூலம் காயத்ரி ரேகா அளித்துள்ள விளக்கத்தில், கடவுள் அருளால் நான் நலமுடன் உள்ளேன். விபத்தில் சிக்கி உயிரிழந்தது வேறு சிந்து ரேகாவாக இருக்கலாம். நான் எனது குடும்பத்துடன் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கார் விபத்தில் சின்னத்திரை நடிகை மர்ம மரணம்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரீகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காரில் அவருடன் வந்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.<br><br>பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் ரீகாவுடன் வந்த அவரது தோழி மற்றும் 2 ஆண் நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ரீகாவின் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
<hr>
அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரீகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம், சந்தீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரீகாவும் மர்மமான முறையில் இறந்துள்ளது சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி: தினதந்தி
-
From: aanaa
on 10th May 2017 05:57 AM
[Full View]
மீண்டும் சின்னத்திரையில் ரோகினி
நடிகை ரோகினி தென்னிந்திய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அதுமட்டுமல்ல ஆவணப்பட இயக்குனர், குறும்பட இயக்குனர், திரைப்பட இயக்குனர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சமூக ஆர்வலர் என பல முகங்களை கொண்டவர். கங்கா என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார். அதன்பிறகு கேள்விகள் ஆயிரம், அழகிய தமிழ் மகள், ரோகினியின் பாக்ஸ் ஆபீஸ், கேள்வி நேரம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
>தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வந்திருக்கிறார். லைட்ஸ் கேமரா ஆக்ஷ்ன் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இது சினிமா தொடர்பான நிகழ்ச்சி. சினிமா செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் பேட்டி என கலவையாக ஒளிபரப்பாகிறது. நேற்று (30ந்தேதி) ஒளிபரப்பை தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் மறு ஒளிபரப்பாகும்.
நன்றி: தினதந்தி
-
From: aanaa
on 10th May 2017 06:00 AM
[Full View]
ஆங்கிலத்தில் பேசவே ஆடியோ விழாவுக்கு அழைத்தனர் - பாவனா
சினிமா படங்களின் ஆடியோ விழாக்களுக்கு சின்னத்திரையில் இருந்து ரம்யா, அஞ்சனா போன்ற தொகுப்பாளினிகள்தான் சமீபகாலமாக பங்கேற்று வருகிறார்கள். ஆனால், சிலதினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஏன்டா தலையில எண்ண வைக்கல படத்தின் ஆடியோ விழாவுக்கு எதிர்பாராதவிதமாக விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் வந்திருந்தார்.
அப்போது அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதையடுத்து பேசிய பாவனா பாலகிருஷ்ணன், நான் இதுவரை எந்த சினிமா படங்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு திடீரென்று அழைத்தபோது என்னை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதனால் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்க வேண்டியுள்ளது. அதன்காரணமாகத்தான் உங்களை அழைத்தோம் என்று சொன்னார். நான் இந்த ஆடியோ விழாவிற்குள் வந்தது இப்படித்தான் என்று கூறிய பாவனா, தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி தொகுத்து வழங்கினார்.
நன்றி: தினதந்தி
-
From: aanaa
on 10th May 2017 06:04 AM
[Full View]
டிடிக்கு போட்டியாக சுஹாசினியை களம் இறக்குகிறது ஜீ தமிழ்
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சியான காப்பி வித்த டிடி ரொம்பவே பாப்புலர். திரைப்பட நட்சத்திரங்கள் டிடி நடத்தும் நிகழ்ச்சியென்றால் மறுப்பேதும் சொல்லாமல் செல்வார்கள். அந்த அளவிற்கு டிடி நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம். மற்றும் செல்லப்பிள்ளை. தற்போது புதிய பொலிவுடன் சில மாற்றங்களுடன் அதே நிகழ்ச்சி அன்புடன் டிடி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.<br>இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சேனல் வீக்கெண்ட் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை இன்று முதல் (ஏப்ரல் 30) ஒளிபரப்புகிறது. இது ஒவ்பொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணக்கு ஒளிபரப்பாகும். வார நாளில் மறு ஒளிபரப்பாகும். இதனை சுஹாசினி தொகுத்து வழங்குகிறார். திரைப்பட நட்சத்திரங்களை ஜாலியாக பேட்டி எடுக்கும் அதே நிகழ்ச்சிதான் இதுவும். எந்த மாதிரியான அம்சங்கள் புதிதாக இருக்கும் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது தெரியும்.
இந்த நிகழ்ச்சி குறித்து சுஹாசினி கூறியிருப்பதாவது: நிறைய சேனல்களில் நிறைய பேர் செலிபிரிட்டி சாட் ஷோ பண்றாங்க. அதையே நாமும் பண்ணணுமானுன்னு யோசித்தேன். ஆனால் அவர்கள் நம்முடன் பேசுகிற அந்த கொஞ்ச நேரத்தில் அவர்களோடு வாழ்க்கையையே திரும்பி பார்க்கிறது அற்புதமாக இருக்கும். அதனால் பண்ணலாமேன்னு தோணிச்ச்சு. பண்ண முடிவு பண்ணிட்டேன். எனக்கு எல்லா செலிபிரிட்டியும் தெரியும். ஆனால் அவுங்க பர்சனல் பற்றி தெரியாது. தெரிஞ்சுக்குவோம். அவுங்க என்னோட பேசுவாங்க. என்கிறார் சுஹாசினி.
நன்றி: தினதந்தி
-
From: aanaa
on 21st October 2017 01:51 AM
[Full View]
யப் டிவிக்கு விருது
பிரபல இணையதள டிவி சேனலான யப் டிவிக்கு., 2017-ம் ஆண்டுக்கான பிராஸ்ட் அண்ட் சல்லிவன் விருது கிடைத்திருக்கிறது. மும்பையில் நடந்த இதற்கான விழாவில், பிராஸ்ட் அண்ட் சல்லிவனின் சர்வதேச தலைவர் அரூப் ஜட்ஸி, யப் டிவியின் நிர்வாகியான உதய் ரெட்டிக்கு இந்த விருதை வழங்கினார்
இந்த விருது கிடைத்தது பற்றி யப் டிவியின் உதய் ரெட்டி கூறுகையில், யப் டிவியின் ஒட்டுமொத்த குழு சார்பாக இந்த விருதை நான் பெறுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்காக தேர்வுக்குழுவுக்கு எனது நன்றி என்று கூறியுள்ளார்.
இணையதள டிவி உலகில் யப் டிவி., 14 மொழிகளில் 250 சேனல்களை ஒளிபரப்பகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் ஒளிப்பரப்பாகும் பல சேனல்களை இந்த இணையதளத்தில் காணலாம். டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்றி பல பொழுதுபோக்கு அம்சம் தொடர்பான நிகழ்ச்சிகளையும் ஒளிப்பரபுகிறது. கிரிக்கெட் போன்ற விளையாட்டு போட்டிகளையும் நேரடியாக ஒளிப்பரப்பி வருகிறது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 21st October 2017 01:55 AM
[Full View]
கடந்த 2004ம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சாதரணமாக இருந்த ஜீ தமிழ், தற்போது புதிய புதிய சீரியல்கள், புதிய புதிய ரியாலிட்டி ஷோக்கள், புதிய திரைப்படங்கள் மூலம் வேமாக முன்னுக்கு வந்திருக்கிறது. தற்போது முன்னணி சேனல்களில் முக்கிய சேனல்.
யாரடி நீ மோகனி, பூவே பூச்சூடவா, தலையணை பூக்கள், லட்சுமி வந்தாச்சு, மெல்ல திறந்தது கதவு, மகாமயி, நாகராணி, இனிய இரு மலர்கள், டார்லிங் டார்லிங், உள்ளிட்ட பல தொடர்களை ஒளிபரப்புகிறது. அதிர்ஷ்டலட்சுமி, ஜூனியர் சீனியர், சொல்வதெல்லாம் உண்மை, நம்பினால் நம்புங்கள், டான்சிங் கில்லாடிகள், உளிட்ட பல ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறது.
13 வருடங்களை கடந்து வந்துள்ள ஜீ தமிழ் சேனல் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி உள்ளது. சாதாரண தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் இரண்டிலும் ஜீ தமிழ் சேனலை பார்க்கலாம். டிஜிட்டலுக்கு மாறியதன் அடையாளமாக தனது லோகோவையும் மாற்றி உள்ளது. அதோடு டிஜிட்டல் மாற்றத்தை அறிவிக்கும் வகையில் ஜோதிகா, ஆரி, துளசி நடித்த ஒரு புரமோவையும் வெளியிட்டுள்ளது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 5th November 2017 03:42 AM
[Full View]
தொகுப்பாளினியானார் பிக்பாஸ் ஜூலி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பங்கேற்று புகழ் பெற்றவர் ஜூலி. இதில் இவருக்கு கிடைத்த பெயரும், புகழும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அமுங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் எல்லோருடனும் சகஜமாய் இருந்த ஜூலில பின்னர் பொய் பேசுகிறார், நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் ஓவியா விஷயத்தில் இவரது பெயர் மேலும் மங்கியது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால், அவைகள் எல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை அந்த போட்டியில் நிலை நிறுத்தி கொள்ள சிலரோடு சேர்ந்து கொண்டு அப்படி அவர் செய்ய வேண்டியதாகி இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் தான் தன் மீதான தவறுகளை உணர்ந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதன்பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இப்போது தொகுப்பாளியாக களமிறங்கியுள்ளார்.
கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக வருகிறது. இதன் 6வது சீசன் தற்போது துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஜூலி தான் தொகுத்து வழங்க போகிறார். நடன இயக்குநர் கலா மற்றும் நடிகர் கோகுல் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாகப் பங்கேற்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 5th November 2017 03:51 AM
[Full View]
தமிழ் பெண்கள் அழகா? கேரள பெண்கள் அழகா?: நீயா நானா நிகழ்ச்சிக்கு தடை
விஜய் டி.வியின் நட்சத்திர நிகழ்ச்சி நீயா நானா. ஆண்டனி இயக்கத்தில், கோபிநாத் நடத்தி வரும் இந்த நிகழ்ச்சி பல்வேறு சமூக பிரச்சினைகள் பற்றி அலசி வருகிறது. துணிச்சலுடன் பல பிரச்சினைகளை பேசியுள்ளது. இதன் தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் புகழ் அடைந்தார். சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தார். என்றாலும் அவ்வப்போது சில பிரச்சினைகளையும் இந்த நிகழ்ச்சி சந்தித்து வந்திருக்கிறது.
கடந்த சில தினங்களாக இந்த நிகழ்ச்சியின் புரமோ ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. "யார் அழகு கேரளத்து பெண்களா? தமிழ் பெண்களா?" என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அந்த புரமோ கூறியது. 20க்கும் மேற்பட்ட கேரள பெண்களும், தமிழ்நாட்டு பெண்களும் இதில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். கேரள பெண்கள் மலையாள பாடல்களுக்கும், தமிழ் நாட்டு பெண்கள் தமிழ் பாடல்களுக்கும் ஆடியிருக்கிறார்கள். கோபிநாத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த புரமோசை ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளார்கள். நிகழ்ச்சிக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கூடாது என்று பல்வேறு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர், சில இடங்களில் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 22ந் தேதி மதியம் 3மணிக்கு ஒளிபரப்பாக இருந்த இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது விஜய் டி.வி. "நிகழ்ச்சி எந்த மாதிரி உருவாகி உள்ளது என்பதை பார்க்காமலேயே அதை நிறுத்தச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று சேனல் தரப்பு கூறுகிறது
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 10th December 2017 06:36 AM
[Full View]
பாடகியாகும் உஷா எலிசபெத்
கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் உஷா எலிசெபத். அதன் பிறகு அனுபல்லவி, ஒரு மனிதனின் கதை, கலாட்டா குடும்பம், வாணி ராணி உள்பட பல சீரியல்களில் நடித்தார். இடையில் திரைப்படங்களிலும் நடித்தார். நவீன சரஸ்வதி சபதம், வென்று வருவான் படங்கள் குறிப்பிடத்தக்கது. கடைசியாக பிரியமானவள் தொடரில் நடித்து வந்தார். தற்போது அதிலிருந்து விலகி விட்டார்.
தற்போது சில படங்களில் நடித்து வரும் உஷா, தன்னை ஒரு பாடகியாக நிலைநிறுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறார். முறைப்படி இசை கற்ற உஷா தானே சொந்தமாக இசை அமைத்து பாடிய பாடல்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உருவாகி வருகிறது.
விரைவில் திரைப்படத்திலும் பாட இருக்கிறார். நடிகையாக மட்டுமே இல்லாமல் வேறு திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக பாடி அதனை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறேன். பிரியமானவள் சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் எதுவும் இல்லை. என்கிறார் உஷா.
நன்றி: தினமலர்
-
From: aanaa
on 10th December 2017 06:38 AM
[Full View]
மீண்டும் சீரியல் நடிகை ஆனார் ஊர்வசி'
தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி. கடைசியாக மகளிர் மட்டும் படத்தில் நடித்தார். அடுத்து அவர் நடித்த இட்லி படம் வெளிவர இருக்கிறது.
ஊர்வசிக்கு சின்னத்திரை புதிதில்லை டேக் இட் ஊர்வசி, பாக்யலட்சுமி, உள்பட பல நிகழ்ச்சிகளை நடத்தினார், பல நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 5 வருடங்களுக்கு முன்பு பைரவி தொடரில் நடித்தார். இப்போது மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் நடித்து, தயாரிக்கும் வம்சம் சீரியிலில் சுந்தரி என்ற புதிய கதாபாத்திரத்தின் மூலம் என்ட்ரியாகியிருக்கிறார்.
வம்சம் தொடரில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். பாகுபலி படத்திற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் பெருகி வருவதால் சீரியலில் நடிப்பதை குறைத்து வருகிறார். இருந்தாலும் வம்சம் சீரியலில் அவர் முக்கிய கேரக்டர் என்பதால் உடனடியாக வெளியேறிவிட முடியாது. இதனால் ஊர்வசியை, ரம்யா கிருஷ்ணனின் தோழி கேரக்டரில் சீரியலுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான முக்கியத்துவம் ஊர்வசிக்கு இருக்கும் என்றும், போகப்போக ஊர்வசியை முக்கிய கேரக்டராக்கி ரம்யா கிருஷ்ணன் வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நன்றி: தினமலர்