சன் டிவி சமையல் கலை நிபுணர் செஃப் ஜேக்கப் மரணம்



இந்தியாவில் தமிழ்நாட்டில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் "ஆஹா என்ன ருசி" சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜேக்கப் சகாயகுமார்(வயது 38) மாரடைப்பால் மரணமடைந்தார்.
தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த ஜேக்கப் சென்னையில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கின்னஸ் சாதனை
கடந்த 2010ம் ஆண்டு தொடர்ந்து 24 மணி நேரம் 485 விதமான உணவுகளை தயாரித்து ஜேக்கப் கின்னஸ் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
ஆஹா என்ன ருசி நிகழ்ச்சியில் சமையல் செய்வதை சமையலறையோடு நிறுத்தாமல் ஏரிக்கரை, குளம், அருவி என பல்வேறு இடங்களில் சமைத்து நிகழ்ச்சியை வித்தியாசப்படுத்திக்காட்டினார்.
ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்