இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் 2.0. ரஜினிகாந்த், அக்*ஷய்குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு 95% முடிந்துவிட்டதாம், இன்னும் ஒரு சில காட்சிகள், ஒரு பாடல் மட்டுமே எடுக்கப்படவுள்ளது.

இப்படம் இந்த வருடம் தீபாவளிக்கு 3டி தொழில்நுட்பத்தில் வெளிவருகின்றது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவுள்ளனர்.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி இப்படத்தை Zee Tv நிறுவனம் ரூ. 110 கோடிக்கு சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கியுள்ளதாம்.

இதுவரை வந்த இந்திய படங்களிலேயே இது தான் அதிகம் என கூறப்படுகின்றது.