Ilamai Rathathil from Ninaikka Therintha Maname (1987)
https://www.youtube.com/watch?v=QDxbxo2GkIU
Printable View
Ilamai Rathathil from Ninaikka Therintha Maname (1987)
https://www.youtube.com/watch?v=QDxbxo2GkIU
Maalai Mudhal Kaalai Manmathanin Leelai from Unnai Thedi Varuven (1985)
(Single not available on YouTube; the song starts at 12m30s in the below album)
https://youtu.be/_0a7y6IWSCA
நன்றி MAPPI ..
இளமை ரதத்தை முதல் முறை கேட்கிறேன்.. தெளிவான இசை.
உன்னை தேடி வருவேன் : ஒரு நாளில் வளர்ந்தேனே மற்றும் என் அன்பே அன்பே அப்போதே பாப்புலர்..
ஏண்டி அம்மா, ஒரிய ஒரிய ஒரியா, மாலை முதல் பாடல்கள் பிரமாதம். இப்போது தான் முதல் முறை கேட்கிறேன், , பிடித்து போய் விட்டது :-)
இந்த படத்தின் சூப்பர் டைட்டில் ஸ்கோர்: https://soundcloud.com/navin-mozart/...ck-title-score
Puzhayorathil from Adhavaram (1989)
https://www.youtube.com/watch?v=DL1N60bPkrA
Kanpaarum Devi from Kokkarakko (1983)
https://www.youtube.com/watch?v=udS8vK9IeJY
Alaigale Vaa from Kavithai Malar (1982)
https://www.youtube.com/watch?v=VTa9zEenWlU
Got to find that violin and exhibit it in the museum inside the gallery named Sultan of Strings.
https://www.youtube.com/watch?v=5pWIoNwpLcA
Vaali/Ilaiyaraja/Charukesi raagam/Jayachandran/Sushila/Vijayakanth/Radhika
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்
தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ...
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக் காலமும்
நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும் தான் பூச் சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுது தான் இனிய பொழுது தான்
உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வு தான் ஏனோ
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே...
நண்பர்களே.. எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? இங்கு ராகதேவன் அருள் புரிந்து இரண்டரை வருடமாகி விட்டது. யாரும் இங்கு வருகிறார்களா என தெரியவில்லை. இருந்தாலும் ஒரு குசலம் விசாரித்து விட்டு, நேற்று நான் கிழித்ததை பீத்தி கொள்ளலாமென வந்தேன்.
நேற்று ஞாயிற்று கிழமை.. கொரோனா கொடுமையால், உடற்பயிற்சிக்காக ஒரு முறை செல்லலாம் என்கிற சலுகையை காலையிலேயே 15 மைல் சைக்கிள் ஒட்டி கழித்து விட்டேன். கார்டனில் புல் வெட்டியாகி விட்டது. மதியம் மீன் குழம்பு சாப்பாட்டில் அதிகம் நாட்டமில்லை, வேண்டா வெறுப்பாக மாலையில் தான் அதை சாப்பிட்டேன். காலை முதல் கை அரிக்கிறது என்று தலையை சொரிந்து கொண்டே இருக்கும் குடிமகன் போல நானும் அங்கும் இங்குமாக இருந்தேன். மனம் ஒருநிலை படவில்லை.
நான் கேட்டிராத ராஜா சாரின் ஒரு பாடலை தேடி கண்டு பிடிக்கலாமே என எழுந்தேன். பாடல் எண்பதுகளில் வந்திருக்க வேண்டும். வழக்கமான டூயட்டாக இருக்க கூடாது. அதில் ஜானகியும், பாலுவும், ராஜா சாரும் மாறி மாறி உரையாடி கொண்டிருக்க வேண்டும். நான் இது வரை இந்த பாடலை கேட்டிருக்க கூடாது. கேட்டதும் என் மனதில் நச்சென்று பதிய வேண்டும். பின்னணியில் வாத்தியங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு வேகமெடுக்க வேண்டும். கேட்க கேட்க . ஹாப்பி ஹார்மோன்ஸ் ததும்ப வேண்டும். -- இது தான் கண்டிஷன்ஸ்.
3 மணி நேர தேடலுக்கு பின்என் கையில் சிக்கிய இந்த செம தெலுகு பாடல், 24 மணி நேரமாய் என் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது.
படம்: வம்சியின் ஸ்ரீ கனக மஹாலக்ஷ்மி ரிக்கார்டிங் டான்ஸ் ட்ரூப். வெளியான வருடம்: 1988
https://www.youtube.com/watch?v=2fvrWBi9VE4