-
மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் பற்றி பல கதைகள் நீங்கள் கேட்டிருப்பீர்கள்...
ஆனால்,அவரைப்பற்றி அதிகம் வெளியே தெரியாத ஒரு ரகசியம் இருக்கிறது. அவர் ஒரு சாப்பாட்டு ரசிகர்.தமிழகமெங்கும் தனக்குப் பிடித்த ஹோட்டல்கள் என்று ஒரு லிஸ்டே வைத்திருந்தார்.
நடிகராக இருந்தபோதும் முதல்வராக இருந்தபோதும் அந்த ஹோட்டல்களில் இருந்துதான் அவருக்கு உணவு வரவேண்டும்.அப்படி ஒரு உணவகத்தைத்தான் பற்றித்தான் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
எம்.ஜி.ஆர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடித்த காலத்தில் அவருக்குப் பிடித்த ஹோட்டல் அது. சேலம் ஆத்தூரை அடுத்த நரசிங்கபுரத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய உணவகம் அது.அந்த ஹோட்டலை இப்போது காந்தி என்கிற இளைஞர் நடத்திக்கொண்டு இருக்கிறார்.அவருடைய தந்தை பழனிச்சாமி துவங்கிய ஹோட்டல் இது.
mgr
ஏதோ ஒரு முறை கடந்து போகிற வழியில் இங்கே டீ குடித்த எம்.ஜி.ஆருக்கு அதன் சுவை பிடித்துப்போக,அதற்காகவே அந்த உணவகம் வழியாகப் போவாராம் எம்.ஜி.ஆர்! அப்படி அவர் அடிக்கடி வந்து போனதால் உள்ளூர் மக்கள் பெயர்பலகைகூட இல்லாத அந்த ஹோட்டலை ‘அட,எம்.ஜி.யார் கோட வந்து டீ குடிப்பாரல்லோ,அந்த ஓடலு.’ ‘அந்த ஆலமரம் இருக்குதல்லோ அவத்தால போங்க எம்.ஜி.ஆர் ஓட்டலிருக்குதுங்’ என்றும் ஊர் மக்கள் சொல்லிச் சொல்லிதான் அந்த ஹோட்டலுக்கு இந்த பெயரே வந்தது.
காந்திக்கே இதெல்லாம் செவிவழிச் செய்திதான்.ஆனால் அரை நூற்றாண்டு கடந்தும் அன்று எம்ஜியாரை அசத்திய சுவையை அப்படியே தக்கவைத்து இருக்கிறார்கள்.பதினைந்துக்கு இருபது சைஸில் ஒரு குட்டி ஹால்தான் அது.சுவற்றை ஒட்டி ஒரு பெஞ்ச் போட்டு எதிரில் டேபிள் போட்டிருக்கிறார்கள். காலை ஏழுமணிக்கெல்லாம் உணவகம் களைகட்டி விடுகிறது.
mgr
எங்கும் கிடைக்கும் இட்லி தோசைதான் இங்கும் தருகிறார்கள்.ஆனால் அதற்கு கிடைக்கும் சைட் டிஷ்தான் ஆச்சரியம்.அந்த காலை நேரத்திலேயே சுடச்சுட ரத்தப்பொரியல்,குடல் குழம்பு, தலைக்கறி ,சிக்கன் என்று விதவிதமான நான்வெஜ் வெரைட்டிகள் அணிவகுக்கின்றன.
உங்களால் இதில் ஒரே ஒரு சைட்டிஷோடு போதும் என்று சொல்லிவிட முடியாது,அத்தனை சுவை.இது காலை நேரத்து கதை,மதிய உணவு இன்னும் சிறப்பானது .அப்போது ஆடு கோழியுடன் மீன்களும் சேர்ந்து கொள்ளும்.எல்லா குழம்பு வகைகளும் வீட்டில் உள்ள பெண்களால் தயாரிக்கப் படுபவை.அவர்கள் கடைகளில் விற்கும் எந்த பிராண்டட் மசாலாப் பொடிகளையும் வாங்குவதில்லை.வாரச்சந்தைக்கு போய் மிளகாய்,மல்லி,மஞ்சள்,மிளகு,சீரகம் முதல் அவர்களே தேடித்தேடி வாங்குகிறார்கள்.அதை வறுத்து பொடித்து தங்களுக்குத் தேவையான மசாலாக்களை தாங்களே தயாரித்துக் கொள்கிறார்கள்.
நம் முன்னோர்கள் எந்த காயை,அல்லது கறியை என்ன பக்குவத்தில் சாப்பிட்டார்களோ அதே பக்குவத்தில் அதே சுவையுடன் தருகிறார்கள் இந்த எம்ஜிஆர் ஹோட்டலில்.அடுத்த முறை சேலம் போனால் ஊரை நெருங்கும் முன்பே நரசிங்கபுரம் போய் இந்த உணவகத்தில் ஒருமுறை ருசித்து பாருங்கள்.அப்புறம் விடவே மாட்டீர்கள்.
கடைசியா ஒரு தகவல்;ராமாவரம் தோட்டத்தில் பணம் வாங்க மாட்டார்கள். இங்கே கொடுத்துதான் ஆகவேண்டும்.ஆனால்,நம்ப முடியாத விலையில் கொடுக்கிறது இன்னொரு ஆச்சரியம்..........DRN
-
அபாரமான இசை ஞானம் உள்ளவர் எம்.ஜி.ஆர்.!.
இசையமைப்பாளர்களுக்கே சொல்லித் தரும் அளவுக்கு இசையில் புலமை உண்டு. மெல்லிசை மட்டுமின்றி கர்னாடக இசையிலும் அவருக்கு சிறந்த ஞானம் உண்டு.
‘நவரத்தினம்’ படத்தில் கர்னாடக இசையின் பெருமையை உணர்த்தும் வகையில் ஒரு பாடல் உண்டு. மேற்கத்திய, இந்துஸ்தானி, கர்னாடக இசை எல்லாம் கலந்து அந்தப் பாடல் இருக்கும். எம்.ஜி.ஆருக்காக பாலமுரளி கிருஷ்ணா பாடியிருப்பார். படத்தின் இசையமைப்பாளர் பிரபல வயலின் இசைக் கலைஞர் மறைந்த குன்னக்குடி வைத்தியநாதன். கர்னாடக இசையின் சிறப்பை விளக்கும் அந்தப் பாடல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்டதே எம்.ஜி.ஆர்தான்!
பெங்களூரில் படப்பிடிப்பு நடந்தபோது குன்னக்குடி வைத்தியநாதனிடம், ‘‘மற்ற சங்கீதங்களுக்கு எல்லாம் அடிப்படையே நமது பாரம்பரியமான கர்னாடக இசைதான் என்பதை விளக்கும் வகையில் பாடல் அமைய வேண்டும்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். ‘‘புகழ் பெற்ற ஆங்கில இசைப் பாடலுக்குத் தகுந்த அல்லது அதோடு ஒத்திருக்கும் வகையில் ஒரு கீர்த்தனையை ஒப்பிட்டு காட்டினால் கர்னாடக சங்கீதத்தின் மதிப்பு புரியும்’’ என்றும் சொல்லியிருக்கிறார்.
‘ஒருதாய் மக்கள்’ படத்தில் எம்.ஜி.ஆர்.
இவை கூட பெரிதல்ல, ஒரு ஆலோசனைதான். அடுத்து எம்.ஜி.ஆர். கூறியவை குன்னக்குடியை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. ‘மை ஃபேர் லேடி’, ‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ ஆகிய ஆங்கிலப் படங்களில் இருந்து புகழ் பெற்ற பாடகர்கள் பாடிய பாடல்களைக் கூறி, அவற்றோடு ஒத்துப்போகும் தெலுங்கு கீர்த்தனைகளையும் எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். அவரது இசையறிவைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டார் குன்னக்குடி வைத்திய நாதன். எம்.ஜி.ஆர். கூறிய பாடல்களும் கீர்த்தனைகளுமே படத்தில் இடம் பெற்றன. மேலும், ‘ ‘ படத்தில் அந்தக் காட்சியில் மிகவும் இயல்பாக தேர்ந்த கலைஞ ரைப் போல எம்.ஜி.ஆர். வீணை வாசித்தார்” என்று குன்னக்குடி அளித்த பேட்டியில் பாராட்டினார்.
வீணை என்றில்லை, எம்.ஜி.ஆருக்கு இருந்த இசையறிவு காரணமாக ‘பணம் படைத்தவன்’ படத்தில் அகார்டியன், ‘கண்ணன் என் காதலன்’ படத்தில் பியானோ, ‘ஒருதாய் மக்கள்’ படத்தில் கிடார் என்று பல படங்களில் பல வாத்தியங்களை எம்.ஜி.ஆர். மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார். ‘எங்கள் தங்கம்’ படத்தில் பாகவதரைப் போல வேடமிட்டு கதாகாலட்சேபமே செய்வார். பாடுவது போல நடிப்பதைவிட பாடகரின் பேச்சுக்கு வாயசைத்து நடிப்பது மிகவும் கடினம். இப்போது போல தொழில்நுட்பம் முன்னேறாத அந்தக் காலத்தில் கதாகாலட்சேப காட்சியில், டி.எம்.சவுந்தரராஜனின் பேச்சுக்கு எம்.ஜி.ஆரின் வாயசைப்பு இம்மியும் பிசகாது.
கர்னாடக இசை மீது கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக இசைக் கலைஞர்களை எம்.ஜி.ஆர். மிகவும் மதிப்பார். அவர்களுக்கு உரிய மரியாதை அளித்து கவுரவிப்பார். கர்னாடக இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். முதல்வராக இருந்த போது ஒருமுறை எம்.எஸ். கச்சேரியை முழுவதும் இருந்து ரசித்து கேட்டார். பல கலைஞர்களின் கச்சேரிகளை எம்.ஜி.ஆர். இதுபோல கேட்டிருக்கிறார்.
‘மன்னாதி மன்னன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆடாத மனமும் உண்டோ?...’ பாடல் தேவகானமாய் ஒலிக் கும். கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதனின் குருவும் நடிகை ஸ்ரீவித்யாவின் தாயாருமான மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்தகுமாரியும், டி.எம்.சவுந்தரராஜனும் பாடிய ‘லதாங்கி’ ராகத்தில் அமைந்த அற்புதமான பாடல். ஒரு இடத்தில் தனக்கு முன்னே அரைவட்டமாக சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ‘தபேலா தரங்’கை சுருதிக்கு ஏற்ப எம்.ஜி.ஆர். வாசித்து, கடைசியில் வலது கையை மடக்கி இடது தோள் உயரத்துக்கு சிரித்தபடியே ஸ்டைலாக உயர்த்துவது கண்கொள்ளாக் காட்சி.
வயலின் இசைக் கலைஞர் லால்குடி ஜெயராமனுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். விருது வழங்குகிறார்.
நாட்டியப் பேரொளி பத்மினியின் ஆடலுக்கு ஏற்ப, சிறிய வடிவில் இருக்கும் ஜால்ராவை (இதை ‘தாளம்’ என்று கூறுவார்கள்) எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும் தேவை யான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு. இன் னொரு இடத்தில் ‘தபேலா தரங்’கை வாசித்துவிட்டு ஷாட்டை கட் செய்யா மல், ‘வாடாத மலர் போலும் விழிப் பார்வையில்…’ என்ற வரிகளை மிகச் சரியாக ‘டைமிங்’ தவறாமல் ஆரம்பித்து எம்.ஜி.ஆர். வாயசைப்பார்.
‘இதழ் கொஞ்சும் கனிய முதை மிஞ்சும் குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே…’’ என்ற வரி களில் கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ.. என்பதில் டி.எம்.எஸ். குரல் மேல் ஸ்தாயியிலும் கீழ் ஸ்தாயியிலும் ஒலிக்கும்போது அதற்கேற்றபடி, முகத்தை உயர்த்தியும் தாழ்த்தியும் பாடுவது போல எம்.ஜி.ஆர். நடிப்பது அற்புதம்! இந்தப் பாடலை இப்போது பார்த்தாலும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். ‘லாங் ஷாட்’டில் காட்டும்போது எம்.ஜி.ஆரின் பாதம் தரையில் தாளமிடும். என்ன ஒரு ஈடுபாடு இருந்தால் இப்படி செய்திருப்பார் என்று நினைக்கும்போது பிரமிக்காமல் இருக்கவே முடியாது.
பாடலில்தான் இப்படி அருமையாக நடித்திருக்கிறார் என்றால், பாடல் காட்சி முடிந்த பின்னும் தனக்கே உரிய நுணுக்கமான நடிப்பை எம்.ஜி.ஆர். வெளிப்படுத்தியிருப்பார். நாமே கூட, காலையில் ஒரு பாடலைக் கேட்டு அது மனதில் பதிந்துவிட்டால் அன்று முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். இதை ஆங்கிலத்தில் ‘earworm’ என்று சொல்வார்கள். பாடல் காட்சி முடிந்த பின் அடுத்து வரும் காட்சியில் நடந்து வரும்போது, ‘ஆடாத மனமும் உண்டோ?...’ என்று சன்னமான குரலில் எம்.ஜி.ஆர். பாடிக்கொண்டே வருவார். பாடல் எப்படி தன்னை ஈர்த்துள்ளது என்பதை இதன் மூலம் காட்டியிருப்பார். படத்தில் மட்டுமல்ல; இசை ஞானத்திலும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர்.!
இந்தப் பாடலில் எம்.ஜி.ஆருக்கென்றே கவிஞர் மருதகாசியால் வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள் இவை:
‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்…’
‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ?....BSM...
-
மக்கள்திலகம்ரசிகன்....
படித்ததில் பிடித்தது
மக்கள்திலகத்தின்.உரிமைக்குரல் படத்தின் வெற்றியைப் பார்க்கும்போது ஒட்டு மொத்த மக்களும் திரண்டெழுந்து கொடுத்த வெற்றி அது.
இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி பேசுவதற்கு முன்பாக அதன் கதை என்னவென்று பார்த்துவிடலாம்.ஸ்ரீதரின் வழக்கமான சிம்ப்பிள் கதை தான்.இதன் மூலம் ஆந்திரத்தில் இருந்தாலும் அதன் திரைக்கதை ஸ்ரீதரிடம் இருந்தது.அவர் அந்தக் கதையை சொன்ன விதத்தில் தான் படத்திற்கு ஒரு விறுவிறுப்புக் கிடைத்தது.அந்த விறுவிறுப்பு தான் படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
பொன்மேடு கிராமத்து பஞ்சாயத்துப் பிரஸிடெண்ட் சுந்தரம் பிள்ளை தனது மனைவி குழந்தையோடு தனது தம்பியையும் இணைத்து வாழ்ந்துவருகிறார்.முன்னோர்கள் சொத்தான விவசாய நிலமும் ஒரு வீடும் அந்த சகோதரர்களுக்குச் சொந்தம்.அவரது அடுத்த வீட்டு நண்பர் சபாபதி தனது மனைவியோடும் வயது வந்த மகளான ராதாவோடும் வாழ்ந்து வருகிறார்.சிறு வயது முதலே கோபிக்கு ராதா தான் என பழகி வருகிறது இந்தக் குடும்பம்.அதனால் எந்தவித எதிர்ப்புமின்றி இந்த காதல் ஜோடி வலம் வர அந்த கிராமத்துப் பெரிய மனிதர் கோதண்டம் பிள்ளை மற்றும் அம்புஜத்தின் மகனான துரைசாமி ஒரு அடாவடிப் பேர்வழியாக கிராமத்தில் வலம் வருகிறார்.
கிராமத்தில் நின்று போன பள்ளிக் கட்டிடத்தைக் கட்ட ஊர்ப் பெரியவர்கள் நிதி திரட்ட பஞ்சாயத்து பிரஸிடெண்டான சுந்தரம் பிள்ளை அந்த நிதியை வங்கியில் கட்டப்போகும்போது துரைசாமி ஆட்களால் களவாடப்படுகிறது.ஏற்கனவே அம்புஜத்திடம் கடன் பெற்றிருந்த சுந்தரம் களவு போன இந்தப் பணத்திற்காகவும் சேர்த்து பதினெட்டாயிரம் ரூபாய் கடன்காரனாகிறார்.இந்தத் தொகைக்கு ஈடாக அண்ணனும் தம்பியும் தங்களது நிலக்களைப் பணயம் வைக்க ராதா மீது கண் வைத்த துரைசாமி இப்போது காய் நகர்த்த பணக்கார அம்புஜம் தனது மகனுக்காக சபாபதியிடம் பெண் கேட்க சொத்தை இழந்து நிற்கும் கோபியை மறந்து துரைசாமிக்கு தனது மகளை தர சம்மதிக்கிறார்.கோபியின் காதல் அந்தரத்தில் நிற்க துரைசாமி கனவு பலித்ததா?. காதல் ஜோடிகளின் கதி என்ன?. சுந்தரம் சபாபதி குடும்பம் என்னவானது?. என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விறுவிறுப்பாக விடை தந்தார் ஸ்ரீதர்.
இரு பெரும் ஆளுமைகள் இணைய இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.நாயகனாக எம்.ஜி.ஆர்.அவருக்கென்று ஒரு மாஸ்.இயக்குநர்களின் அடையாளமாக ஸ்ரீதர்.அவருக்கென்று ஒரு கூட்டம்.இருவரும் ஆற அமர உட்கார்ந்து செதுக்கிய படம் உரிமைக்குரல்.இருவரது இமேஜூம் கெடாமல் இருவருமே பார்த்துக்கொண்டதால் தான் இந்த வெற்றியைச் சுவைக்க முடிந்தது.ஸ்ரீதர் இதுவரை தான் கட்டிக்காத்து வந்த தனித் தன்மையை எம்.ஜி.ஆருக்காக விட்டுத் தந்தார்.அவர் இயக்கிய எந்த ஹீரோவையும் ஓப்பனிங்கில் இப்படிக் காட்டியதில்லை.
பொன் மேடு கிராமத்துப் பெண்ணொருத்தி ஆற்றில் நீரெடுக்க வருவதில் தொடங்குகிறது படம்.துரையின் ஆட்களால் அந்தப் பெண் கடத்தப்பட அவளது அலறல் கேட்டு இரண்டு கால்கள் ஓடி வர ஓடிய கால்கள் தாவிச் சென்று ரேக்ளாவில் ஏறித் துரத்த அந்த வண்டிக்குச் சொந்தக்காரர் யார் என்பதை ஸ்ரீதர் காட்டுவதற்கு முன்பே விசில் பறப்பதில் ஓப்பனிங் களைகட்டுகிறது.இந்த பரபரப்பை ஸ்ரீதர் இறுதிக் காட்சி வரை கொண்டு போனதில் தான் அவரது திறமை அடங்கியிருக்கிறது.
ஸ்ரீதர் இந்தப் படத்தை இரண்டாகப் பிரித்தார்.முதல் பகுதி முழுக்க முழுக்க இளைஞர்களுக்கானது.இரண்டாவது பகுதி ஒட்டு மொத்த ஆடியன்ஸூக்கானது.இரு பகுதிகளும் பட்டையைக் கிளப்ப படம் முடிந்து வெளியேறியவர்கள் திருப்தியாக வெளியேறினார்கள்.எந்தப் பக்கம் திரும்பினாலும் ஃப்ரேம் பை ஃப்ரேம் எம்.ஜி.ஆரும் இருந்தார் ஸ்ரீதரும் இருந்தார்.
எம்.ஜி.ஆர். பேசும் முதல் வசனமே ஜாதிக்கு எதிராக இருந்தது.ஐயா நீங்க மேல் ஜாதி நானோ கீழ் ஜாதி எப்படிங்க என அமர மறுக்கும் அந்தப் பெண்ணிடம் அம்மா இந்த மேல் ஜாதி கீழ் ஜாதி எல்லாம் இந்தக் கேடுகெட்ட சமுதாயம் உருவாக்கி வெச்சது தான்.எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒரே ஜாதி.அது மனித ஜாதி தான்.யாருக்கும் வளையாத ஸ்ரீதரின் பேனா எம்.ஜி.ஆருக்காக வளைந்தது.அது மட்டுமல்ல படம் முழுவதும் எம்.ஜி.ஆர்.சொல்படி தான் அந்தப் பேனா ஆடியது.
இந்த மாதிரி அக்கிரமங்கள் எல்லாம் பல நாள் நீடிக்காது.அவங்கள நான் கவனிச்சுக்கறேன்.நீங்க பத்திரமா இருங்க.இந்த வசனங்கள் அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்றார்போல் இருந்தன.
எடுத்த எடுப்பிலேயே டேய் துரைசாமி என்று அழைக்க நம்பியார் மட்டுமல்ல ஸ்ரீதரும் திகைத்தார்.ஸ்ரீதரை அழைத்து தன் விருப்பப்படி வசனங்களை எழுத வைக்க அந்த வசனம் இன்று கூட ஃபேமஸாக இருக்கக் காரணம் அவரது கடும் கோபம் தான்.
டேய் துரைசாமி எங்க பரம்பரைக்கே சோறு போட்டு வளர்த்த பூமி இது.மானம் மரியாதை உள்ள எவனும் தன் உயிர் போனாலும் தன் நிலத்தை மத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டான்.என் தாய் எனக்கு பாலூட்டி வளத்தாங்க.இந்த நிலத்தாய் எனக்கு சோறூட்டி வளர்க்கிறாங்கடா.இந்தத் தாயை விட்டுக் கொடுக்கிற அளவுக்கு நான் கோழையில்லடா.ஒரு பிடி மண்ணுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யும் பரம்பரையில வந்தவன்டா.நூறு என்ன ஆயிரம் லட்சம் பேரை கூட்டி வந்து படையெடுத்தாலும் இந்த மண்ணில இருந்து என்னைப் பிரிக்கமுடியாதுடா.என் ரத்தம் வடிஞ்சா இந்த மண்ணிலதான்டா கலக்கும்.என் உடல் கீழே விழுந்தா இந்த மண்ணைத்தான்டா அணைக்கும்.என் உயிர் போனாலும் இந்த மண்ணில தான்டா போகும்.ஆனா அந்த நேரத்தில நான் எழுப்பிற உரிமைக்குரல் இந்த மண்ணு மட்டுமல்ல எங்கெங்கே உழைக்கிறவன் இருக்கிறானோ எந்தெந்த மண்ணில் அவன் வியர்வைத் துளி விழுதோ அங்கெல்லாம் என் உரிமைக்குரல் ஒலிச்சிக்கிட்டுதான்டா இருக்கும்.அவர் பேசப் பேச புரிந்துகொண்ட அன்றைய ரசிகர்கள் போட்ட ஆரவாரத்தில் திரை அரங்குகளேஅதிர்ந்து உண்மை.
அவரது வாயிலிருந்து புறப்பட்ட வசனங்கள் அன்றைய அரசியல் அரங்கை மேலும் சூடேற்றியது.அதைத் தணிக்கும் விதமாக ஸ்ரீதர் ஊற்றிய தண்ணீர் தான் கோபியும் ராதாவும் அடித்த கொட்டங்கள்.மற்ற படங்களை விட இந்தக் கொட்டம் இந்தப் படத்தில் கொஞ்சம் அதிகமானது அதனால் தான்.ஸ்ரீதர் எங்கே தன் படம் ஒரு அரசியல் படமாக மாறிவிடுமோ என்ற பயத்தில் காதல் காட்சிகளை கிளுகிளுப்பாக்கினார்.அதற்குத் தகுந்தார் போல் வாலியும் தன் பங்கிற்கு கிளுகிளுப்பூட்ட படத்தின் முதல் பகுதி கொஞ்சம் ஓவராகத் தான் போனது.
முதல் சண்டை முடிந்த உடனே ஹாய் ஹாய் என ஒரு ஈவ் டீஸிங் கொடுத்தார் ஸ்ரீதர்.நேத்துப் பூத்தாளே ரோஜா மொட்டு பறிக்கக் கூடாதோ லேசாத் தொட்டு.தத்தித் தள்ளாடும் தங்கக் குடம் வந்து சேராதோ அந்தப்புறம்.டி.எம்.எஸ்.ஐயாவின் அலம்பரையை அப்படியே தந்தார் எம்.ஜி.ஆர்.மெல்லிசை மன்னரின் விளையாட்டை மிஞ்சி அவர் அந்தப் பெண்களிடம் விளையாடினார்.
இவர் இப்படி என்றால் அந்தப் பெண்களை இதை விட வம்பிழுத்தார்கள்.ஸ்ரீதரின் கற்பனை எம்.ஜி.ஆருக்காக குழி பறிக்க அந்தக் கண்டாங்கி சேலைகள் அவரை ஒருவழியாக்கின.மாட்டிக்கிட்டாரடி மயிலைக் காளை கட்டிப் போட்டதடி கண்டாங்கிச் சேலை தங்கம்தான்டி பொம்பளைண்ணு சிங்கம்தான்டி என ஈஸ்வரி குழு போட்டுத் தாக்க பின்னால் நின்று அடித்துத் தீர்த்தது எம்.எஸ்.வி.கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு வீரத்தை எங்ககிட்ட காட்டினாரு.வாலியின் வார்த்தை விளையாட்டில் கடைசியில் வென்றதென்னவோ அந்த வாத்தியார் தான்.இரண்டே வரிகளுக்காக மெனக்கெட்டது கோவை சௌந்தரராஜன்.தங்கந்தான்டி ஆம்பளை சிங்கம்தான்டி என சேலையை உருவிப் போட்டு குதிரையில் பறந்தார் மக்கள் திலகம்.
பாடல் எல்லாம் முடிந்து பெண்கள் கிளம்ப எல்லாரும் இருங்க என்றார் எம்.ஜி.ஆர்.இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது மைசூரில்.படத்தின் டான்ஸ் மாஸ்டர் சலீம் இதற்காக நடனப் பெண்களை சென்னையில் இருந்து வரவழைத்திருந்தார்.நினைத்தபடி ஸ்ரீதர் படமாக்கிய திருப்தியில் ஓகே நீங்க கிளம்பலாம் என உத்தரவு தர...முற்றும்..
நன்றி...............Pdmn
-
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஹண்டே முதன்மையானவர்.
எம்ஜிஆருடனான தனது அரசியல் பயணம் பற்றி உற்சாகத்துடன் ஹண்டேபகிர்ந்து கொண்டார்.
தமிழகத்தில் 1980 மே மாதம் சட்டமன்ற தேர்தல். 27, 31 என இரண்டு கட்டமாக நடக்கிறது. அண்ணா நகரில் கலைஞர் போட்டியிடுகிறார்.
எம்ஜிஆரிடம் இருந்து எனக்கு போன் வருகிறது.
“அண்ணா நகரில் கலைஞர் போட்டியிடுகிறார்…
நீங்கள் எதிர்த்து நின்றால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?” என கேட்டார்.
“50:50” என்றேன். அதை 51 சதமாக்க முடியுமா என்றார். “நீங்கள் மனது வைத்தால் முடியும்” என்றேன். என்னை போட்டியிட ஆணையிட்டார் எம்ஜிஆர்.
கலைஞர் இல்லா சட்டசபை எனக்கெதுக்கு? எம்ஜிஆர்
இரண்டாவது கட்டத்தில் அதாவது (31.5.1980) தான் அண்ணா நகர் தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது. கலைஞர் நிற்பதால், முதலாவது கட்டத்தில் (21.5.1980) போட்டியிட்ட திமுகவின் மாவட்ட செயலாளர்கள், முக்கிய தலைவர்கள் அண்ணா நகரில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்த திமுவினர் தான்.
வாக்கு எண்ணப்படுகிறது. ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் நான் இருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரியில் ஓட்டு எண்ணப்படுகிறது. திடீரென்று லைட் ஆப் செய்யப்படுகிறது. கடைசியில் 699 ஓட்டு வித்தியாசத்தில் கலைஞர் வெற்றி பெற்றார்.
எனக்கு எம்ஜிஆரிடமிருந்து போன் வருகிறது. கவலைப்பட வேண்டம் ஹண்டே. எனக்கு கலைஞர் சட்டமன்றத்துக்கு வரணும். அவருடன் சும்மா “பைட்” செய்வதற்காகத்தான் உங்களை நிறுத்தினேன்.
எதிர்க்கட்சி தலைவராக கலைஞர் இருந்தால் தான், சட்டசபை சோபிக்கும். அவர் இல்லாத சட்டசபை எனக்கு என்னதுக்கு… உங்களை நான் மந்திரியாக்குகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் என்றார்.
ஜூன் 9ந் தேதி கலைவாணர் அரங்கத்தில் பதவியேற்பு விழா. நல்வாழ்வு துறை அமைச்சர் பதவிக்கு என் பெயரை அறிவித்தவுடன் பயங்கர கைத்தட்டல்..........vrh
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
ஆசியோடு நண்பர்கள் அனைவருக்கும்
இனிய சனிக்கிழமை காலை வணக்கம்..
புரட்சி தலைவர் நடித்த படங்கள் பற்றிய இந்த தொடர் பதிவில் இன்று நாம் காண போவது புரட்சி தலைவர் இயக்கி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைக்காவியம் தான் "நாடோடி மன்னன்"...
இது புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 41வது திரைப்படமாகும்.. வாருங்கள் படத்தை பற்றி பல தகவல்கள் பற்றி காண்போம்...
ரத்னாபுரி என்ற நாட்டில் உள்ள மன்னர் இறந்த பிறகு அவரின் மருமகன் மார்த்தாண்டன் பெரும்பான்மையினரால் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இருப்பினும் இராஜ்ஜியத்தின் ராஜகுருவான விஜயவர்மன்
(பி. எஸ். வீரப்பா) மார்த்தாண்டத்தை கொன்று அவனது கைப்பாவையாக உள்ள பிங்கலனை அரசராக்கி தான் சொல்வது தான் அரசன் செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதற்கிடையில் மறைந்த மன்னரின் விசுவாசமான மெய்க்காப்பாளர் வீரபாஹுவும், அவரது மகன் பூபதி மற்றும் மகள் மதானா ஆகியோர் மார்த்தாண்டத்தை ஒரு அரசராக பார்க்க விரும்பவில்லை.
ரத்னாபுரியின் மக்களின்
நிலைமையால் வருத்தப்படுகிறார்கள். மார்த்தாண்டத்தின் அனுமதி இல்லாமல் விஜயவர்மன் விதித்த வரிகளினால் ரத்னாபுரியில் உணவு பற்றாக்குறை மற்றும் அதிக வேலையின்மை ஆகியவை ஏற்படுகிறது. இதன் விளைவாக மார்த்தாண்டனின்ஒரே தோற்றத்தை ஒத்த வீரங்கன் தலைமையில், அவர் நண்பர் சகாயமின் ஆதரவோடு, மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். முடியாட்சியை கண்டித்து, ஜனநாயகத்தை கோரி அவர்கள் அரண்மனைக்கு அணிவகுக்கிறார்கள். வீரங்கனின் செயல்களுக்காக கைது செய்து அருகிலுள்ள நாகநாதபுரத்தில் சிறையில் அடைக்கப்படுகிறார். இதே குற்றச்சாட்டில் மதனாவும் அதே சிறையில் அடைக்கப்படுகிறார்.
மார்த்தாண்டத்தின் முடிச்சூட்டு விழாவை முன்னிட்டு கைதிகள் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்கள். அவர்கள் ரத்னபுரிக்கு ஒன்றாக பயணம் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே இலட்சியங்களையும், புரட்சிகரமான எண்ணங்களையும் கொண்டு, இருப்பதால் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள்.
இதற்கிடையில், மார்த்தாண்டம் மன்னராக பதவியேர்க்க ரத்னாபுரிக்கு வருகிறார். விஜயவர்மன் அவரை புறநகரில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அரண்மனையில் தங்கச் சொல்லி, முடிசூட்டு விழா நடக்கும் வரை அவர் தனது மனைவி மனோகாரியை சந்திக்கக் கூடாது என்று கூறுகிறார்,
ஏனெனில் தற்போதைய தருணம் மனைவியை சந்தித்தால் தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறுகிறார்.
அதே சமயம் ரத்னாபுரியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் வீரங்கனும் சகாயமும் சாப்பிட செல்லும்போது விஜயவர்மனால் பணியமர்த்தப்பட்ட ஆட்கள் வீரங்கனை மார்த்தாண்டம் என்று தவறாக நினைக்கிறார்கள் அதனால் அவரை கொல்ல எண்ணுகிறார்கள். வீராங்கன் அரண்மனை காவலர்களால் துரத்தப்பட்டு, இறுதியில் மார்த்தாண்டத்தின் அறையில் நுழைகிறார்...
அப்போது தளபதியும் முதன்மை மந்திரியும் வீராங்கனை மன்னர் என்று எண்ணி அவரிடம் உரையாடுகின்றனர் அந்த நேரத்தில் மன்னர் மார்த்தாண்டமும் வர வீராங்கன் ஒருவருக்கொருவர் சந்திக்கிறார்கள் நண்பராக மாறி விடுகின்றனர்... ரத்னாபுரியில் மக்களின் பரிதாப நிலைமை பற்றி வீராங்கன் மார்த்தாண்டத்திடம் கூறுகிறார். மேலும் மார்த்தாண்டம் தான் பொறுப்பேற்றவுடன் எல்லாவற்றையும் சரி செய்வதாக ஒப்புக்கொள்கிறார்.
முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக, விஜயவர்மன் மார்த்தாண்டத்துக்கு விஷம் கொடுக்க ஏற்பாடு செய்கிறார். அரச ஆலோசகரான கார்மேகத்தின் உதவியுடன், அவர் தனது திட்டத்தை நிறைவேற்றுகிறார். நச்சுதன்மையுள்ள பானத்தை மார்த்தாண்டம் குடித்தபிறகு மயங்கினான். ஆனால் அவர் வீராங்கன் மற்றும் ரத்னாபுரியின் தளபதி மந்திரி ஆகியோரால் காப்பற்றப்படுகிறார். இருப்பினும் மார்த்தாண்டம் இன்னும் இரண்டு நாட்கள் மயக்க நிலையில் இருப்பார் என்று கூறி விட்டு சென்று விடுகிறார் .
தளபதியும், அமைச்சரரும் வீராங்கனை மார்த்தாண்டன் போல் இரண்டு நாட்கள் வரை நடிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறார்கள்.. இல்லை என்றால் ராஜகுருவின் திட்டப்படி பின்கலன் மன்னராக முடிசூட்டி கொள்வான் அதன் பின் நாடு மிகவும் மோசம் ஆகிவிடும் என்று கூறி சம்மதிக்க வற்புறுத்துகிறார்கள்.
தயக்கம் கட்டிய வீரங்கன், அரசின் நலனுக்காக அதை ஒப்புக்கொள்கிறார் மற்றும் முடிசூட்டும் நேரத்தில் வந்து மன்னராக முடிசூட்டி கொள்கிறார். வீராங்கன், மார்தாண்டமாக ரத்னாபுரியின் புதிய அரசராகிறார். விஜயவர்மன் மற்றும் பிங்கலன் இதனால் அதிர்ச்சியடைந்து, மர்த்தாண்டன் விசாரிக்க தனது ஆட்களை அனுப்புகிறார்கள். அவர்கள் மயக்க நிலையில் உள்ள மார்த்தாண்டத்தை கண்டுபிடித்து அவரை கடத்துகிறார்கள்.
மார்த்தாண்டம் திடீரென காணாமல் போனதால், ஆரம்பத்தில் பேரம் பேசியதை விட வீரங்கன் இப்போது ராஜாவின் இடத்தில் அதிக நாட்களை சோகமாக செலவழிக்கிறான். இந்த பின்னடைவு அவரை தடுக்க விடாமல் இருக்க, பல சீர்திருத்தங்களைத் தொடங்குவதன் மூலமும், ஏழைகளை மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளைச் செய்வதன் மூலமும் நல்ல பயன்பாட்டுக்கான வாய்ப்பை அளிக்கிறார். இந்த நடவடிக்கைகள் மக்களால் ஆதரிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் உயரடுக்கினரிடையே அரசியல் எழுச்சியை ஏற்படுத்துகின்றன. இருப்பினும், அவர் மார்த்தண்டன் என்று நம்பும் மனோகரியை ஏமாற்றுவதால் அவர் சற்று கலங்குகிறார். அவளிடம் ரகசியத்தை வைத்திருக்க முடியாமல், உண்மையை சொல்கிறான். அவரது உன்னத குணத்தை உணர்ந்த மனோகரி அவரை தனது சகோதரராக ஏற்றுக்கொள்கிறார். பிங்கலனின் ஆட்களால் மதானா கொல்லப்படுகிறாள், துக்கமடைந்த வீரங்கன் அவளது மரணத்திற்குப் பழிவாங்க சபதம் செய்கிறான். முந்தைய ராஜாவின் மகள் ரத்னா மற்றும் ரத்னாபுரியின் சிம்மாசனத்தின் அசல் வாரிசான மார்த்தாண்டன் இருவரும் கடத்தப்பட்டு கன்னி தீவு என்ற தீவில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் வீரபாஹு மூலம் கண்டுபிடிக்கிறார். வீரங்கன் தீவுக்குச் சென்று ரத்னாவைக் காண்கிறான், அவள் அவனை காதலிக்கிறாள்.
தீவின் தலைவன் விஜயவர்மன் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக பிங்கலனும் கார்மேகமும் அங்கு வருகிறார்கள், ரத்னா பிறந்த பிறகு ரத்னாவைக் கடத்தியுள்ளார். விஜயவர்மன் ரத்னாவை திருமணம் செய்து கொள்ளவும், பிங்கலனிலிருந்து விடுபடவும், தன்னை ரத்னாபுரியின் ஆட்சியாளராக அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். ரத்னாவை திரும்ப அழைத்துச் சென்று திருமணம் செய்து தான் கொள்வதன் மூலம் தன்னை சட்டப்பூர்வமாக ராஜாவாக்க பிங்கலன் முடிவு செய்கிறார். ரத்னா அதை ஏற்கவில்லை. பிங்கலன் அவளை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான். வீரங்கன் பிங்கலனின் பிடியிலிருந்து அவளைக் காப்பாற்றுகிறான்.
விஜயவர்மனால் பிடிக்கப்பட்டு சிறையில் இருந்த மார்த்தாண்டன் மற்றும் கார்மேகம் ஆகிய இருவரையும் விடுவிக்கிறார். மார்த்தாண்டன் மற்றும் வீரங்கன் இருவரும் விஜயவர்மனை தோற்கடிக்கின்றனர். வீரங்கன் ரத்னாவை மணக்கிறான், மார்த்தாண்டன் ரத்னாபுரி ஒரு ஜனநாயகம் என்று ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.
மார்த்தாண்டன் & வீரங்கன் -எம்.ஜி.ராமச்சந்திரன்
விஜயவர்மன் (ரத்னாபுரியின் ராஜகுரு) -பி.எஸ்.வீரப்பா
பிங்கலன் -எம்.என்.நம்பியார்
கார்மேகம் -எம்.ஜி.சக்ரபாணி
பூபதி -டி.கே.பாலச்சந்திரன்
சகாயம் -ஜே.பி.சந்திரப்பாபு
வீரபாஹு -கே.ஆர்.ராம்சிங்
ரத்னாபுரியின் தளபதி -ஈ.ஆர்.சகாதேவன்
மதானா -பானுமதி ராமகிருஷ்ணா
மனோகரி -எம்.என்.ராஜம்
ரத்னா -பி.சரோஜா தேவி
நந்தினி -ஜி.சகுந்தலா
நாகம்மா -டி.பி.முத்துலட்சுமி
பாப்பா -கே.எஸ்.அங்கமுத்து
நாம் (1953) படம் வெளியான பிறகு, எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி ஆகியோர் அதன் இணை தயாரிப்பாளர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருந்தனர், தங்கள் சொந்த தயாரிப்பு பதாகையின் கீழ் ஒரு திரைப்படத்தை உருவாக்க ஆர்வமாக இருந்தனர். எனவே, அவர்கள் எம்.ஜி.யார் புரொடக்ஷன்ஸை நிறுவி, எம்.கருணாநிதியை தங்கள் நிறுவனத்தின் முதல் படமான விடிவெள்ளி என்ற பெயரில் ஒரு ஸ்கிரிப்டை உருவாக்க நியமித்தனர். ஜூலை 1953 இல் கள்ளக்குடி போராட்டங்களில் பங்கேற்றதற்காக கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் படம் நிறுத்தப்பட்டது. ராமச்சந்திரனும் சக்ரபானியும் பின்னர் எம்.ஜி.யார் புரொடக்ஷன்ஸைக் கலைத்து, அதற்கு பதிலாக எம்.ஜி.யார் நாடகக் குழுவை நிறுவினர், ஆனால் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கும் எண்ணம் ராமச்சந்திரனின் மனதில் இருந்தது. படத்தின் வளர்ச்சியை, ராமச்சந்திரன் நினைவு கூர்ந்தார்:
அந்த நாட்களில், வறுமை மற்றும் மக்களின் நிலைமை பற்றி நான் நினைத்தேன். 'சிந்தனை' என்று சொல்வதை விட, நான் அதை அனுபவித்தேன் என்று சொல்வது சரியானது. எப்போதாவது, இந்த பிரச்சினைகள் ஏன் உள்ளன என்று நான் நினைப்பேன். எனக்கு கிடைத்த பதில், 'இது வெளிநாட்டவரின் ஆட்சியின் காரணமாக இருந்தது.' ஆனால் வெளிநாட்டவரின் ஆட்சி என்றென்றும் இருக்கும் என்பதை நான் உணரவில்லை. எனவே, வெளிநாட்டவரின் ஆட்சி மறைந்தாலும், ஆட்சியாளர்கள் நல்ல மனதுடன் இருக்க வேண்டும். பின்னர், மக்கள் பயனடைவார்கள். அதனால்தான் நான் வாகபாண்ட் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். பின்னர், நான் ராஜாவின் நிலைமை பற்றி யோசித்தேன். இப்போது எங்களை ஆளுகிறவர்கள், எங்கள் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் எங்களுடன் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் சிந்தனையும் திறமையும் வெளிநாட்டினரால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு, நான் கற்பனை செய்தேன், அவர்கள் பொதுவானவர்களுடன் சேர்ந்தால் இது ராஜா பாத்திரத்தின் மையமாக இருந்தது.
கல்கத்தாவில் ரொனால்ட் கோல்மன் நடித்த ஃபிராங்க் லாயிட்டின் வரலாற்று நாடகமான இஃப் ஐ வேர் கிங் (1938) திரையிடலில் கலந்து கொண்டதிலிருந்து ராமச்சந்திரன் தனது சொந்த திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார். அவர் மாயா மச்சிந்திராவில் (1939) ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தபோது இது நிகழ்ந்தது. தனது அரசியல் கருத்துக்களையும் நலன்களையும் தமிழக மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்க அவர் விரும்பினார். இதற்காக, ஆர்.எம்.வீரப்பன், வி.லட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவை அவர் சேர்த்தார். கதையின் அவுட்லைன் குறித்து அவர் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார், மேலும் ஐ வேர் கிங் மற்றும் இன்னும் இரண்டு படங்களை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்: மற்றொரு கோல்மன் படமான தி ப்ரிசனர் ஆஃப் ஜெண்டா (1937), மற்றும் எலியா கசானின் விவா ஜபாடா (1952). பல சிந்தனைகளுக்கு பிறகு, குழு மூன்று படங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையை கொண்டு வந்து நாடோடி மன்னன் என்ற தலைப்பில் முடிவு செய்தது.
நாடோடி மன்னன் 1.8 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது, இது அந்த நேரத்தில் தயாரிக்கப்பட்ட சராசரி தமிழ் திரைப்படத்தை விட சுமார் இரண்டரை மடங்கு அதிக விலை என்று கருதப்பட்டது. முன் தயாரிப்பு மற்றும் நடிப்பிற்காக கிட்டத்தட்ட ஒரு வருடம் செலவிடப்பட்டது. கே.ராம்நோத் ஆரம்பத்தில் இந்த படத்தை இயக்குவதற்காக நியமிக்கப்பட்டார், ஆனால் தயாரிப்பு தொடங்குவதற்கு முன்பே இறந்தார், இதன் விளைவாக ராமச்சந்திரன் அதை தானே ஏற்றுக்கொண்டார், இதன் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இது ராமச்சந்திரன் தயாரித்த இரண்டாவது படம், மற்றும் எம்.ஜீ யார் பிக்சர்ஸ் தயாரிப்பு பதாகையின் கீழ் உருவான முதல் படம். இது ராமச்சந்திரன், சக்ரபாணி மற்றும் வீரப்பன் ஆகியோரால் கையாளப்பட்டது. கதையுடன் வீரப்பன், லட்சுமணன் மற்றும் சாமிக்கு உதவிய கண்ணதாசன் மற்றும் ரவீந்தர் உரையாடல்களை எழுதினர். சி.குப்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் பி.நீலகண்டன் ஆகிய மூவரும் திரைக்கதையை எழுதியுள்ளனர். ஜி.கே.ராமு, கே.நாகேஸ்வர் ராவ் மற்றும் ஆர்.என்.நாகராஜ ராவ் ஆகியோர் ஒளிப்பதிவு, கலை இயக்கம் மற்றும் ஸ்டில்களின் பொறுப்பில் இருந்தனர். கே.பி.ராமகிருஷ்ணன் மற்றும் அருணாச்சலம் ஆகியோர் ராமச்சந்திரனுக்கு ஸ்டண்ட் இரட்டையராக நடித்தனர்.
திரைப்பட வரலாற்றாசிரியர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், வீரப்பனின் அலுவலக மேசையில் நாடோடி மன்னனின் விளம்பர ஸ்டில்களை எம்.ஜி.யார் பிக்சர்ஸ் அலுவலகத்திற்குச் சென்றபோது கவனித்தார். பின்னர் அவற்றை பத்திரிகைகளுக்கு விநியோகிக்க முன்வந்தார். ஆனந்தன் அப்போது தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்பதை அறிந்து வீரப்பன் ஒப்புக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, படத்தின் ஸ்டில்கள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன. ராமச்சந்திரன் ஆனந்தனின் படைப்புகளில் ஈர்க்கப்பட்டார், வீரப்பனின் ஆலோசனையின் பேரில், அவரை படத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியமர்த்தினார். பி.ஆர்.ஓ வாக ஆனந்தனின் முதல் படம் இது.
அலிபாபாவும் 40 திருடர்களும் (1956) படப்பிடிப்பின் போது, நாடோடி மன்னனின் விளம்பரம் தி ப்ரிசனர் ஆஃப் ஜெண்டாவின் தழுவல் என்று விவரிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பி.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் பானுமதி ராமகிருஷ்ணா இணைந்து நிறுவிய தயாரிப்பு நிறுவனமான பரணி பிக்சர்ஸ் ராவ் , தி ப்ரிசனர் ஆஃப் ஜெண்டாவைப் போன்ற ஒரு படத்திற்கான விளம்பரத்தை வெளியிட்டனர். ராமச்சந்திரனும் பானுமதியும் தங்கள் படங்கள் ஒத்தவை என்று கேள்விப்பட்டபோது, அவர்கள் தங்கள் படத்தின் கதைக்களத்தை மாற்ற ஒருவருக்கொருவர் சமாதானப்படுத்த முயன்றனர். பல விவாதங்களுக்குப் பிறகு, ராமச்சந்திரன் பானுமதியிடம், ஒரு சாமானியரின் பகுதி மட்டுமே ராஜாவிற்கு மாறியது என்று அசலில் வைத்திருப்பதாகவும், மீதமுள்ள படங்கள் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறினார். அடுத்து என்ன செய்வது என்று அவர்கள் இருவரும் குழப்பத்தில் இருப்பதை ராமச்சந்திரன் ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, அறியப்படாத காரணங்களுக்காக, பரணி பிக்சர்ஸ் திட்டமிட்ட படம் நிறுத்தப்பட்டது. பானுமதி ராமச்சந்திரனுக்கு தகவல் கொடுத்து, தனது படத்துடன் முன்னேறலாம் என்று கூறினார். ஏ.கே.வேலன் தான் எழுதிய ஸ்கிரிப்டை ராமச்சந்திரனுக்கு வழங்கினார், மேலும் அதை நாடோடி மன்னனுக்கு பயன்படுத்தும்படி கேட்டார். ராமச்சந்திரன் அவரது தாராள மனப்பான்மைக்கு நன்றி தெரிவித்ததோடு, மதானா வேடத்தையும் அவருக்கு வழங்கினார். பானுமதி படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார்.
எம்ஜிஆரின் திரைப்பட வாழ்க்கை ஏறு வரிசையில் நகரத் தொடங்கியிருந்தது. அவர் நடித்த படங்கள் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும். அருமையான பாடல்கள், விறுவிறுப்பான திரைக்கதை, நல்ல நகைச்சுவை, எண்ணற்ற நடிகர்கள், நாகரிகமான கருத்துகள் என்று அவற்றின் உள்ளடக்கம் மக்களுக்குப் பிடிக்கத் தொடங்கிவிட்டது.
ஐந்தாறு ஆண்டுகளுக்குள் எம்ஜிஆரின் பட வணிகம் சூடு பிடித்தது. அந்த ஏற்றத்தைத் தக்கவைத்துக்கொள்ள மேலும் மேலும் பெரும்பொருட்செலவுப் படங்களில் அவர் நடித்தாக வேண்டிய தேவையும் ஏற்பட்டது. அந்நிலையில் கண்ணதாசன் கதை எழுதிய 'மகாதேவி' என்ற திரைப்படம் வெளியானது. மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட அப்படம் சிறிய வெற்றியைத்தான் பெற்றது. இதற்கிடையில் ராஜா தேசிங்கு, விக்கிரமாதித்யன் ஆகிய படங்களும் கைக்கடங்காத பொருட்செலவில் தயாராகிக்கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக எம்ஜிஆரே ஒரு பெரும்பொருட்செலவுப் படத்தைத் தயாரித்து இயக்கத் தொடங்கியிருந்தார். அப்படம்தான் நாடோடி மன்னன். அத்தறுவாயில் மேற்சொன்ன மூன்று படங்களுமே செலவு காரணமாக அரைகுறையாய்த் தொடர்ந்து இழுத்துக்கொண்டிருந்தன என்றால் மிகையில்லை.
எம்ஜிஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சக்கரபாணியையும் எம்ஜிஆரையும் பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனம். அது பிற்பாடு எம்ஜிஆர் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் என்று மாற்றப்பட்டது. இதற்குப் பல்வேறு வருமான வரிக் காரணங்களும் இருந்தன. இவ்விரு நிறுவனத்திற்கும் ஆர் எம் வீரப்பனே நிர்வாகி. இரண்டாவது நிறுவனத்தில் வீரப்பனுக்குப் பத்துப் பங்குகளையும் கொடுத்திருந்தார். இதனால் நிறுவனத்தின் ஆவணங்களில் அவரும் கையெழுத்திடும் உரிமை பெறுகிறார். நாடோடி மன்னனுக்கு வேண்டிய பணத்திற்கான ஏற்பாடுகளை வீரப்பனே முழுமையாய்ச் செய்தார் என்று சொல்லலாம். பணத்திற்கான ஏற்பாடுகளைக் குறித்த எத்தகைய கவலையும் எம்ஜிஆருக்கு ஏற்படாதபடி அவர் பார்த்துக்கொண்டார். அதனால்தான் எம்ஜிஆரால் முழு மூச்சுடன் படவேலைகளில் ஈடுபட முடிந்தது.
நாடோடி மன்னனுக்குப் பல்வேறு வெளியீட்டு நாள்கள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நாள்களில் அப்படத்தை வெளியிடவே முடியவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வேறு படங்கள் அனைத்தையும் எம்ஜிஆர் ஒத்தி வைத்திருந்தார். அப்போது படச்சுருளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஒரு சுருளின் உண்மை விலை எழுபத்தைந்து உரூபாய் என்றாலும் அது கறுப்புச் சந்தையில் நானூற்றைம்பது வரை விற்பனையாயிற்றாம். இப்படிப் பல்வேறு முனைகளில் செலவு கூடிக்கொண்டே போனது. அதனால் படத்தயாரிப்புக்குப் போதிய பணத்தைப் புரட்டவே முடியவில்லை. படச்சேர்ப்பனை முறைகளில் பல்வேறு வணிக உத்திகளைக் கையாண்டு நிலைமையை ஓரளவுக்குச் சமாளித்தார் வீரப்பன். ஒரு கட்டத்திற்கு மேல் ஏவியெம் மெய்யப்பச் செட்டியாரிடமே சென்று கடன்வாங்க வேண்டிய சூழ்நிலை. நாடோடி மன்னனைப் போன்ற கதையமைப்பிலேயே அங்கே 'உத்தமபுத்திரன்' தயாராகிக்கொண்டிருந்தது. ஆனாலும், வீரப்பனால் தம் படத்திற்குப் பணம் கேட்க அங்கே செல்ல இயல்கிறது என்றால் அப்போது திரை வணிகத்தில் நிலவிய நலமான போக்கை எண்ணி வியக்கலாம். இன்று தமது படத்தைப் போன்றே ஒரு படம் உருவாகிறது என்றால் அதற்கு என்னென்ன முட்டுக்கட்டைகளைப் போட இயலுமோ அத்தனையையும் போடுவார்கள்.
தலைமைக் கணக்காளர் எம்.கே. சீனிவாசன் என்பவர் தலையசைத்தால் மட்டுமே மெய்யப்பன் பணம் கொடுப்பார். சீனிவாசனோ எம்ஜிஆரின் கையெழுத்து வேண்டுமென்கின்றார். படத்தயாரிப்பு நிறுவனத்தின் எல்லாக் கடிதங்களும் வீரப்பனின் கையொப்பத்திலேயே நடந்திருக்கின்றன என்று அவற்றை வீரப்பன் காண்பிக்க அவர் வீரப்பனின் மதிநுட்பத்தை வியந்து பாராட்டிவிட்டார். அப்போது வீரப்பனுக்கு வயது முப்பத்தொன்று. அடுத்த அறையில் இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மெய்யப்பன் எழுந்து வந்தார். இளம் அகவையிலேயே இவ்வளவு மதிநுட்பத்தோடு தம் முதலாளிக்கு உண்மையாய் இருக்கும் அவரைப் பார்த்து மெய்யப்பன் பாராட்டினாராம். பிறகு ஏவியெம்மின் கடனுதவி பெறப்படுகிறது.
நாடோடி மன்னன் தயாரிப்பில் காலந்தாழ்ந்தபடியே போக, இதற்கிடையில் உத்தமபுத்திரன் வெளியாகிவிட்டது. எம்ஜிஆரும் வீரப்பனும் முதல்நாள் முதற்காட்சியே பார்த்தார்கள். படம் அருமையாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், செலவிட்ட தொகைக்கு நிகரான வரவேற்பு இருக்கவில்லை. இது எம்ஜிஆரைக் கவலை கொள்ளச் செய்துவிட்டது. தம் படத்திற்கும் அவ்வாறு நேர்ந்தால் என்ன செய்வது என்று முதன்முறையாக அஞ்சினார். அதனால் பிறத்தியாரின் ஆலோசனைகளை ஏற்கும் மனநிலைக்கு எம்ஜிஆர் வந்தார். நாடோடி மன்னனில் இரண்டு எம்ஜிஆர்களும் சண்டையிட்டுக் கொள்ளும் காட்சி எடுக்கப்படவிருந்தது. அக்காட்சிக்கு அளவிற் பெரிய அரண்மனை அரங்கு வேண்டும். குதிரையிலமர்ந்தபடி சண்டையிட்டவாறே படிகளில் ஏறி இறங்க வேண்டும். அது சரியாகவும் வராது, தேவையற்ற செலவும்கூட என்று வீரப்பன் கருதினார். ஆனால், எம்ஜிஆர் அக்காட்சியை எடுப்பதில் உறுதியாக இருந்தார். "எம்ஜிஆரும் எம்ஜிஆரும் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்வையாளர்கள் விரும்பமாட்டார்கள். எம்ஜிஆர் தீயவர்களோடு மோதுவதைத்தான் விரும்புவார்கள்..." என்று வீரப்பன் கூற அதை ஏற்றுக்கொண்டார். அதன்படி நம்பியாரோடு சண்டையிடும் காட்சியாக அது மாற்றப்பட்டது.
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தை எம்ஜிஆரிடம் அழைத்து வந்தவரும் வீரப்பன்தான். மூத்த இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தரையிலமர்ந்து பட்டுக்கோட்டையார் ஒரு பாடலைப் பாடிக்காட்டிக் கொண்டிருந்தாராம். "வீரப்பா... இவரை நல்லாப் பார்த்துக்க... அருமையாகப் பாட்டெழுதுகிறார்," என்று அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கே பட்டுக்கோட்டையார் பாடிக்காட்டிய "காடு வெளஞ்சென்ன மச்சான்..." என்ற பாடல் வீரப்பனுக்குப் பிடித்துப் போயிற்று. அவரை அழைத்து வந்து எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்தி வைக்க, அப்பாடல் நாடோடி மன்னனில் இடம் பெற்றது.
இப்படிப் பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22ஆம் நாள் நாடோடி மன்னன் வெளியானது. திரையிட்ட இடமெங்கும் கூட்டம் குவிந்தது. படம் வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இன்னொரு படம் இதுகாறும் பெறவில்லை என்பதே உண்மை.
’...சொன்னாலும் புரிவதில்லை மண்ணாளும் வித்தைகள்...சாதிக்கமுடியாத சாதனைகளெல்லாம் சோகத்தால் துவண்டு போனவர்கள் செய்துமுடித்தவைதான் ..சிறைக்கு சென்றுமா உனக்கு புத்திவரவில்லை..இந்த வசனங்களெல்லாம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘தர்பார்’பட வசனங்களோ என்று கன்ஃபியூஸ் ஆகவேண்டாம்.கண்ணதாசனின் வசனத்தில் 1958ம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆரின்’நாடோடி மன்னன்’பட வசனங்கள்.
58 வது ஆண்டில் ஆகஸ்ட் 22ல் வெளியான ‘நாடோடி மன்னனை’எம்.ஜி.ஆரின் வாழ்வா சாவா படம் என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது படம் வென்றால் எம்.ஜி.ஆர்.மன்னன் தோற்றாக் நாடோடி என்று சொல்லுமளவுக்கு தனது அத்தனை உழைப்பையும், செல்வத்தையும் இப்படத்தில் கொட்டியிருந்தார் எம்.ஜி.ஆர்.திமுக கொடியை ஆணும் பெண்ணும் தாங்கும் இலச்சினையை கொண்டு எம்ஜிஆர் பிக்சர்ஸ் என ஆரம்பமாகும் படம், திராவிட இயக்க சிந்தனைகளை பட்டியெல்லாம் மக்களிடம் அதிகம் பேசிய மாபெரும் வெற்றித் திரைப்படம்..
இந்த படம் பேசாத விஷயமே கிடையாது.. புரட்சி, மன்னர் காலத்து அரண்மனை சூழ்ச்சிகள், மக்கள் ஆட்சி, ஆட்சி முறை, பட்ஜெட் தீண்டாமை கொடுமை என பெரிய பட்டியலே போடலாம் .கண்ணதாசன்-ரவீந்தர் கூட்டணி வசனம் தெறிக்கும்.
புரட்சியாளனாக வரும் வீராங்கன் பாத்திரம் அண்ணாவையும், வில்லன்கள் அத்தனைபேரும் காங்கிரஸ் பண்ணையார் பார்ட்டிகளாகவும் சித்தரிப்பார் எம்ஜிஆர் என்று இன்று படம் பார்த்தாலும் தோன்றும் வண்ணம் அத்தனை புதுமையாகத் திரைக்கதை அமைத்திருப்பார் எம்.ஜி.ஆர். விளம்பரங்களில் இப்போதுதான் அஜீத்தும் விஜயும் அடித்துக்கொள்கிறார்கள் என்று நினைக்கிறோம். அன்று 1958லும் இதே பஞ்சாயத்து இருந்திருக்கவே செய்கிறது. ...போலிகளுக்கு புத்தி புகட்டும் புள்ளி விபரங்கள்...இரண்டே வாரங்களில் தியேட்டர்களில் கண்டு களித்தவர்கள் விபரங்கள்...ஓஹோ என்று ஊர் முழுவதும் சொல்லுகிறார்கள். நல்லவர்களால் பாராட்டப்படும் படம்’... இத்தனையும் தனது அன்றைய சினிமா எதிரிகளுக்காக எம்ஜிஆர் போஸ்டரில் பொறித்திருக்கும் வாசகங்கள்..
தமிழ் சினிமாவின் ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தான். புதிய படங்களே இரண்டாவது வாரத்தை கடக்க தவிக்கும்போது 60 வருடங்களுக்கு பிறகு மறு வெளியீடு செய்யப்பட்ட நாடோடி மன்னன் 25வது நாளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
1958ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “நாடோடி மன்னன்”. அந்தக் காலகட்டத்தைப் பொறுத்த வரையில் வசூலில் இமாலய சாதனை செய்த திரைப்படமாக பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை இயக்கியவரும் எம்.ஜி.ஆர் தான்.
இப்படத்திற்கான கதையை ஆர்.எம்.வீரப்பன், வி.லெட்சுமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரும்.. திரைக்கதையை சி.கருப்புசாமி, கே.ஸ்ரீனிவாசன் மற்றும் ப.நீலகண்டன் ஆகியோரும் இணைந்து எழுதினார்கள்.
எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், பானுமதி, சரோஜாதேவி மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்தார்கள். அப்போதைய காலகட்டத்திற்கு மிகப்பெரிய தொகையான ரூபாய் 1 கோடியே 80 லட்சம் பட்ஜெட்டில், எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படம் எம்.ஜி.ஆருக்கு 11 கோடி வசூலைக் குவித்தது மட்டுமல்லாமல், அவரது அரசியல் எழுச்சிக்கும் மாபெரும் துணை புரிந்தது.
இவ்வளவு பெருமைகளை உள்ளடக்கிய இத்திரைப்படம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பித்து வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர் ரசிகர்களின் ஆதரவோடு 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை.துரைசாமி கலந்துகொண்டார். ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.
அன்புடன்
படப்பை
ஆர்.டி. பாபு.........skt
-
"நல்ல நேரம்" 1972 ன் பிளாக்பஸ்டர் திரைப்படம். "நல்ல நேர"த்தின் மகத்தான வெற்றியை மறைக்க அய்யனின் கைஸ்கள் ஒன்றிரண்டு ஊர்களில் வடக்கயிறு மற்றும் கிழி விளையாடல் நடத்தி ஓட்டிய "பட்டிக்காடா" வையும் "வ.மாளிகை"யையும் வைத்து லாலி பாடுகின்றனர்.
இதோ உங்களுக்காக தென்னகத்தின் நெல் விளையும் பூமியிலே வசூல் யாருக்கு அதிகம் வந்தது என்பதை பார்க்கலாம். "நல்ல நேரம்" 42 நாட்களில் பெற்ற வசூல்
ரூ 113476.91. அதே நேரம் அதே ஆண்டு நெல்லை பார்வதியில்
"பட்டிக்காடா பட்டணமா" 42 நாட்களில்
பெற்ற வசூல் ரூ 85617.10 ( அவர்கள் பெருமையாக கொடுத்த விளம்பரப்படி). மூக்கையனின் வீரம் இவ்வளவுதானா? இதை வைத்தா இவ்வளவு வீரம் காட்டினார்கள்.
சரி, "நல்ல நேரம்" 84 நாட்கள் வசூலை பார்க்கலாம். மொத்த வசூல் 84 நாட்களில் ரூ161711.35. அதேநேரம் "பட்டிக்காடா பட்டணமா" 100 நாட்கள்
வசூலை பார்க்கலாம். 100 நாட்களில்
"ப.பட்டணமா" வசூல் ரூ159982.65.
"நல்ல நேரம்" 84 நாட்களில் பெற்ற வசூலை 100 நாட்கள் வடக்கயிறு போட்டும் முறியடிக்க முடியவில்லை.
இதுதான் மூக்கையனின் நெல்லைச் சீமை வீரம்.
சரி, அதை விடுவோம். ஒரு சில ஊர்களில் 200 நாட்கள் வடக்கயிறு போட்ட "மாளிகை"யின் வடக்கயிறை அகற்ற மறந்து விட 200 நாட்கள் போன பிறகுதான் நினைவு வந்து வடக்கயிறை அகற்றினார்கள்.
நெல்லையில் "வ.மாளிகை" 50 நாட்கள் வசூல் ரூ 112102.71. ஆனால் 42 நாட்களில் "நல்ல நேரம்"
அதை எளிதில் தாண்டி விட்டது.
42 நாட்கள் வசூல் ரூ 113476.91
84 நாட்களில் ரூ161711.35 வசூலாக பெற்று "வ.மாளிகை"யை வடை சுடும் மாளிகையாக மாற்றியது. நெல்லையில் "வ.மாளிகை" மொத்தமே 69 நாட்கள் தான் ஓடியது. "ப.பொன்னையா"வும் 69 நாட்கள் தான் ஓடியது.
உண்மையான வெற்றி "நல்ல நேர"த்துக்குத்தான். மாற்று நடிகரின் படங்கள் வடக்கயிறு மாட்டினால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள் கைஸ்களே!. போலி சிவனடியார்களும் புரிந்து கொள்ள வேண்டும்..........ksr.........
-
ஹண்டே மலரும் நினைவுகள் (பகுதி 2)
எம்ஜிஆர் எப்போதும் மத்திய அரசை பகைத்து கொள்ளமாட்டார். டெல்லியில், ஹெல்த் மினிஸ்டர்களின் கருத்தரங்கம் நடக்கிறது. அதற்காக நான் டெல்லி சென்று இருந்தேன்.
எனக்கு எம்ஜிஆரிடமிருந்து போன். நாளை காலை இந்திராகாந்தியை சந்தியுங்கள் என்று… எனக்கு இக்கட்டாக இருந்தது. காரணம் அந்த நாள்…
சஞ்சய் காந்தி இறந்து, அமேதி தொகுதியில் ராஜீவ்காந்தி அமோகமாக வெற்றி பெற்று, அந்த ரிசல்ட் வந்த நாள் அது. எப்படி பிரதமர் இந்திராகாந்தியை சந்திக்க முடியும்?
எனக்கு ஒரு யோசனை தோன்றிது. மூப்பனாருக்கு போன் செய்தேன். “இந்திராகாந்தியை சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்து தர முடியுமா”, என்றேன். காரணம் மூப்பனார் மீது இந்திராகாந்திக்கு நிறைய மரியாதை உண்டு. “நான் அங்கு இருப்பேன் காலையில் வாருங்கள்” என்றார் மூப்பனார்.
கடும் கோபத்தில் இந்திரா
நான் இந்திராகாந்தியை பார்க்க சென்றேன். ஒரு சிறு அறையில் இந்திராகாந்தியால் ஆட்சி கலைக்கப்பட்ட மாநில முதல்வர்கள், தலைவர்கள் என நிறைய பேர் அமர்ந்து இருக்கிறார்கள். உட்கார கூட இடமில்லை.
இந்திராகாந்தியின் பர்சனல் பிஏ பொட்டேடாரிடம் மூப்பானர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். இந்திராகாந்தி என்னை அழைத்தார்.
அவர் முன் நான் போய் அமர்ந்தபோது, அவர் முகத்தில் அவ்வளவு கோபம்.
போனவுடன், “முதலில் எம்ஜிஆர் எனக்கு நண்பரா? எதிரியா? என்று தெரிந்தாக வேண்டும்” என்று கோபத்துடன் இந்திரா கேட்டார்.
“பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்”… எம்ஜிஆர் உங்கள் நண்பர் என்பதை சொல்ல சொன்னார். எம்ஜிஆர் உங்களுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்பார்” என்றேன். ஒருவழியாக இந்திரா அமைதியானார்.
“உங்களை நான் எப்படி தொடர்பு கொள்வது” என்று இந்திராவிடம் கேட்டேன். பிஏவை அழைத்து அவர் நம்பரை எனக்கு கொடுக்க சொன்னார். எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம் என்றார்.
சென்னைக்கு சென்று, எம்ஜிஆரை சந்தித்து சொன்னேன். எம்ஜிஆருக்கு சந்தோஷம்.
இந்திராவை அசத்திய புத்தகம்
மதுரையில் உலகத்தமிழ் மாநாடு. இந்திராகாந்தி அதில் பங்கேற்க டெல்லியிலிருந்து மதுரை வருகிறார். சென்னையில் அவரை வரவேற்க எம்ஜிஆர் என்னை அனுப்பி வைத்தார்.
சென்னையில் இந்திராவை வரவேற்றோம். அதற்கு அடுத்த நாள் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்ட தனிவிமானத்திலேயே நானும் மதுரைக்கு பயணம் செய்தேன்.
டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மெடிக்கல் கல்லூரியில் இந்திரா காந்தி அற்புதமாக பேசியிருந்தார். ஹெல்த் டிபார்ட்மென்ட் எப்படி இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் அந்த பேச்சின் நகலை, நாடுமுழுவதும் இருக்கும் மாநில நல்வாழ்வு துறை அமைச்சர்களுக்கு அனுப்பித்தந்தார்கள். படித்து அசந்து போனேன். இதை ஒரு புத்தகமாக போட்டுவிட்டேன்.
அட்டைப்படத்தில் இந்திராகாந்தி படம், எம்ஜிஆர் படம், என்னுடைய படம். தமிழக அரசு முத்திரையுடன் புத்தகம்.
அடுத்த நாள் காலை விமானத்தில் போகும்போது, நான் இந்த புத்தகத்தையும் உடன் எடுத்துக்கொண்டு போய் இருந்தேன்.
விமானத்தில், ஆர்.வெங்கட்ராமன், மூப்பனார், ஆர்.வி.சாமிநாதன் இருக்கிறார்கள்.
விமானத்தில், இந்திராகாந்தி அம்மையாருக்கு தனி ரூம். நான் அவரது ரூம் கதவை தட்டினேன். யெஸ் கம்… உட்காருங்கள் என்றார். புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இருக்கிறோம் என்றேன். இந்திரா அசந்து போய்விட்டார். பிரதமர் அறையில் 5 நிமிடத்துக்கு மேல் இருக்க முடியாது. செக்யூரிட்டிகள் வந்து கதவை தட்டுகிறார்கள். இந்திராகாந்தி அவர்களை பார்த்து ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்… என்று சொன்னார்.
பின்பு நான் வந்து என் சீட்டில் அமர்ந்து கொண்டேன். ஆர்.வி.சாமிநாதன் கிண்டல் அடித்தார். என்ன ஹண்டே … என்ன சொக்குப்பொடி போட்டாயா… நீ ஏதாவது செய்துருப்பயா என்றார்.
நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே, இந்திரா மீண்டும் என்னிடம் வந்து அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு போனார். புத்தகத்தை படித்து விட்டு அவரே வந்து திருப்பி கொடுத்துவிட்டு போனார். விமானத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. இந்த சம்பவம் இந்திராகாந்தியை மகிழ்ச்சிப்படுத்தியது.
எம்ஜிஆருக்கு மயக்கம்
1984 செப்டம்பர் 15ம் தேதி. அண்ணா பிறந்த நாள். தஞ்சை ராஜராஜ சோழன் சிலை வெளியிலிருந்து அகற்றிவிட்டு கற்பகிரகத்துக்குள் கொண்டு செல்லும் நிகழ்ச்சி.
இந்திராகாந்தி அம்மையார் அதில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்ஜிஆருக்கு மயக்கம் ஏற்பட்டது. சமாளித்துவிட்டார். ரத்தத்தில் யூரியாவும், கிரியாட்டிணும் மிக அதிகமாக இருந்தது. டாக்டர் பி.ஆர்.சுப்ரமணியம் எம்ஜிஆருக்கு ரத்த பரிசோதனை செய்தார்.
இந்திராகாந்தியின் மனிதாபிமானம்
அக்டோபர் 5ம் தேதி வீட்டில் எம்ஜிஆருக்கு உடல்நிலை மோசமடைகிறது. கிட்னி செயலிழந்து விட்டது. அப்பல்லோவில் அனுமதிக்கப்படுகிறார். அக்டோபர் 13ந் தேதி மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அக்டோபர் 17ந் தேதி எம்ஜிஆரை பார்க்க பிதமர் இந்திராகாந்தி வருகிறார்.
ராஜ்பவனில் இந்திராவை நாங்கள் சந்திக்கிறோம். நாவலரிடம், “என்ன ஏற்பாடு செய்து இருக்கிறீர்கள்” என்று இந்திரா கேட்கிறார்.
ஹண்டே மாலை டெல்லி சென்று, அங்கு வரும் நியூயார்க் மருத்துவர் ப்ரீட்மேனை அழைத்து வர இருக்கிறார் என்றார்.
“ஹண்டே டெல்லிக்கு எப்படி செல்வார்” என்று இந்திரா கேட்டார். தனி விமானத்தில் என்று சொன்னவுடன், “ஏன் தனி விமானத்தில் செல்கிறார். என்னுடன் வரட்டுமே” என்றார்.
ட்ரையல் பார்த்தோம்; நூலிழையில் தப்பித்தோம்
இந்திராவின் பர்சனல் செக்ரட்டரி பி.சி.அலெக்சாண்டர். அவர் எனக்கு மிகவும் நெருக்கம்.
பி.சி.அலெக்சாண்டர் உதவியுடன் எம்ஜிஆரை அழைத்து செல்வதற்கான
விமானம், ஒரு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அந்த விமானத்தை ஓட்டியவர் என் தம்பிக்கு பழக்கமானவர்.அதனால் அவரிடம் நான் ஒரு கோரிக்கை வைத்தேன்.
“எம்ஜிஆரை இந்த விமானத்தில் ஏற்றுவதற்கு முன், எம்ஜிஆருக்கான படுக்கையில் செக்யூரிட்டி ஆபிசர் ஒருவரை படுக்க வைத்து ஒரு ரவுண்ட் போய் பரிசோதனை செய்வோம்” என்றேன்.
விமானம் ஒரு சுற்று சுற்றி வந்து தரையில் இறங்கியபோது, அந்த படுக்கையில் இருந்தவர் கீழே விழுந்து விட்டார். நாம் சோதனை செய்யாமல் எம்ஜிஆரை படுக்க வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும். அருகில் இருந்த பொன்னையன் ஆச்சரியப்பட்டுவிட்டார். “எப்படி இந்த ஐடியா உங்களுக்கு தோன்றியது. நம் அதிர்ஷ்டம்” என்றார்.
அமெரிக்காவும், ஆண்டிப்பட்டியும்…
அக்டோபர் 31ல் இந்திராகாந்தி கொல்லப்படுகிறார். எம்ஜிஆரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கான உதவிகளை ராஜீவ்காந்தி அரசு செய்தது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருக்கும்போதே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, தமிழகத்திலும் தேர்தல் வருகிறது. காங்கிரஸ், அண்ணா திமுக கூட்டணி. ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் போட்டியிட்டார்.
எம்ஜிஆரின் வேட்பு மனுவுக்காக வாஷிங்டனில் தூதரை சந்தித்து, நியூயார்க் துணை தூதரக அதிகாரியை சந்தித்து, எம்ஜிஆரின் கைரேகை உறுதிப்படுத்தப்பட்டது.
பல்வேறு கஷ்டங்களுக்கு பின், எம்ஜிஆரின் வேட்புமனுவை ஆர்.எம்.வீரப்பன், நெடுஞ்செழியன் குழுவிடம் கொண்டு வந்து சேர்த்தேன்.
அமெரிக்காவில் படுத்துக்கொண்டே ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார். என்னை மீண்டும் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார்.
ஆர்.எம்.வீரப்பன் விருப்பம்
1986ல் சட்டமேலவையை, எம்ஜிஆர் கலைக்க முடிவு செய்தார். இதனால் நானும், ஆர்.எம்.வீரப்பனும் பதவி இழக்கிறோம்.
இதற்கு பின் திருநெல்வலியில் இடைத்தேர்தல் வருகிறது.
திருநெல்வேலியில் ஆர்.எம்.வீரப்பன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். எம்ஜிஆர் சம்மதித்தார். அந்த தொகுதியில் சுத்தமல்லி பகுதியில் மட்டும் தேவர் சமூகத்தவர்கள் அதிகம்.
ராஜாஜி ஒரு முறை பேசும்போது, “யாருடைய அரசியல் தலைவர் படங்களை வீட்டில் எந்த அறையில் வேண்டுமானாலும் வைக்கலாம். பசும்பொன்முத்துராமலிங்க தேவர் படத்தை மட்டும் பூஜை அறையில் வைக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜாஜியும், பசும்பொன் முத்துராமலிங்கமும் பங்கேற்றார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கம் பேசும்போது, அரசியலில் வீரமும் விவேகமும் வேண்டும் என்று பேசினார்.
வீரம் தேவர், விவேகம் ராஜாஜி என்பதை குறிப்பிட்டு பசும்பொன்முத்துராமலிங்க தேவர் அவ்வாறு பேசினார்.
பசும்பொன்முத்துராமலிங்க தேவரும், ராஜாஜியும் நெருங்கிய நண்பர்கள் என்ற தகவலை யாரோ எம்ஜிஆரிடம் சொல்லியிருக்கிறார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வாரிசு மூக்கையாத்தேவர். சுதந்திரா கட்சியில் இருக்கும் போது மூக்கையாத்தேவர் தலைவர், நான் செயலாளர்.
எம்ஜிஆர் காதுக்கு இது போனது.
போன் செய்த பொன்னையன்
எம்ஜிஆர் வீட்டிலிருந்து பொன்னையன் திடீரென போன் செய்தார்.
“தலைவர் உங்களிடம் சொல்ல சொன்னார்…
நெல்லை மாவட்டத்துக்கு போங்க.
அங்கு சுத்தமல்லி பகுதியில் 14 பூத்துக்கு
நீங்க தான் இன்சார்ஜ்” என்று சொன்னார்.
நான் அங்கு போய்விட்டேன்.
முரசொலிக்கு ஓர் முற்றுப்புள்ளி
எம்ஜிஆர் மூகாம்பிகை கோயிலுக்கு போனார்.
முரசொலியில், “அண்ணா பகுத்தறிவு பாதையில் பயணம் செய்யும் எம்ஜிஆர் கோயிலுக்கு போகலாமா?” என்று செய்தி போட்டிருந்தார்கள்.
“அந்த கோயிலுக்கு என்னுடைய தாயார் அடிக்கடி போவதுண்டு. என்னுடைய தாயை இழந்து பல ஆண்டுகளாகிவிட்டது. எனக்கு ஒரே ஒரு கடவுள் என் தாய், நான் மூகாம்பிகை கோயிலுக்கு செல்வது அங்கே என்னுடைய தாயை பார்ப்பதற்காக. அந்த தாயை பார்ப்பதற்காக நான் சென்றது தவறு என்றால் அந்த தவறை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார். அதற்கப்புறம் கோயில் மேட்டர் ஓவர்.
உடல்நிலை சரியில்லாத போதும்…
பிரச்சாரத்துக்காக எம்ஜிஆர் வருகிறார். கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வந்த நேரம். உடல்நிலை சரியில்லா நேரத்திலும் வந்தார். கெஸ்ட்ஹவுஸில் தங்கி இருந்தார்.
எங்களை அழைத்தார். “இந்த தொகுதியில் என்ன பிரச்சினை?” என்றார். யாரும் வாய் திறக்கவில்லை.
நான் சொன்னேன்… “ஒரு பிரச்சினை இருக்கு சார் என்றேன். திமுக சார்பில் சுப்ரமணி நிற்கிறார். அண்ணாதிமுக நாம் நிற்கிறோம். நம் வேட்பாளர் சிவகங்கை மாவட்டம்.
உள்ளூர் வெளியூர் பிரச்சனை தான் இங்கு” என்று சொன்னேன்.
“அவ்வளவு தானே” என்றார். சரி நீங்க போங்க என்றார்.
“நெல்லை என்னை கைவிட்டதில்லை: எம்ஜிஆர்”
அவரால் அப்போது அதிகம் பேச முடியாது. அதனால், பத்திரிக்கைகளில் கொடுப்பதற்காக பேப்பரில் டைப் செய்து வைக்கப்பட்டது.
முதல் நாள் செய்தி,
“இந்த தேர்தல் சுப்ரமணிய பிள்ளைக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் நடைபெறுகின்ற தேர்தல் அல்ல.
இந்த தேர்தல் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் கலைஞர் கருணாநிதிக்கு நடைபெறுகின்ற அறப்போர்” என்று பேசினார்.
இந்த இரண்டு வரியில் தேர்தல் நிலவரத்தையே எம்ஜிஆர் மாற்றிவிட்டார்.
அடுத்த நாள் பத்திரிக்கைகள் அனைத்திலும்
“திருநெல்வலி தேர்தல் எம்ஜிஆருக்கும்–கலைஞர் கருணாநிதிக்கும் நடக்கும் அறப்போர்” என்று தலைப்பு இருந்தது.
இரண்டாவது நாள் செய்தி…
“நான் இன்று நெல்லைவிட்டு சென்னைக்கு திரும்புகிறேன். நெல்லை என்னை எப்பொழுதும் கைவிட்டது இல்லை என்று எனக்கு தெரியும்.
அடுத்த நாள் பத்திரிக்கைகளில், “நெல்லை என்னை கைவிட்டதில்லை”: எம்ஜிஆர்” என்று தலைப்பு வந்தது.
மக்கள் மனதில் ஆர்.எம்.வீரப்பன் வெளியூர் நபர் என்ற எண்ணத்தையே எம்ஜிஆர் எடுத்துவிட்டார். இது தான் எம்ஜிஆரின் திறமை.
அந்த தேர்தலில் ஆர்.எம்.வீரப்பன் 19 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எம்ஜிஆருக்கு இது தான் கடைசி இடைத்தேர்தல்.
எனக்கு ஒரு மனக்குறை
1950ல் கிளினிக்கை ஆரம்பித்தேன். 70 ஆண்டுகள் முடிந்துவிட்டது. மருத்துவ சிகிச்சை அளிப்பதில் இருந்த ஓய்வு பெற்று இருக்கிறேன்.
என்னிடம் வரும் நோயாளிகளிடம் பணம் எவ்வளவு கொண்டு வந்திருக்கிறீர்கள் என நான் கேட்டது கிடையாது. பணம் இல்லை என்று சொல்லி சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல் 70 ஆண்டுகளில் ஒருவர் கூட திரும்பி சென்றதில்லை.
தாழ்த்தப்பட்ட குடிசை வாழ்மக்களுக்கு வைட்டமின் டானிக் வாங்கி வைத்துக்கொள்வேன். பலகீனமான குழந்தைகளுக்கு வழங்குவேன்.
நான் இன்னும் செய்து இருக்கலாம் என்ற வருத்தம் இருக்கிறது. நான் இன்னும் செஞ்சிருக்கணும்… நான் செய்தது போதாது என்ற குறை இன்றும் என் மனதில் இருக்கிறது.
10 அமைச்சர்கள் பதவி இழந்தோம்
சட்டமேலவையை கலைத்ததால் 10 அமைச்சர்கள் பதவி இழக்க நேரிட்டது. அதில் நானும் ஒருவன்.
1986ல், எம்ஜிஆர் முதலமைச்சர். திடீரென செயற்குழு கூட்டம் கூட்டுகிறார். 1986 அக்டோபர் 6ந் தேதி கூட்டம் நடக்கிறது.
முதலமைச்சர் பதவியுடன் கழகத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறேன் என்றார். எல்லாம் கைத்தட்டினார்கள்.
நான் அங்கு ஓரத்தில் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்து கைக்காட்டி கூப்பிட்டார். என் முதுகை தட்டி, “ஹண்டெ துணை பொதுச்செயலாளராக இருப்பார்” என்றார்.
யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.
எம்ஜிஆரின் ஆட்சியில்…
எம்ஜிஆரின் ஆட்சியில் தமிழகம் அமைதிபூங்காவாக இருந்ததால் பல தொழிற்சாலைகள் வந்தன. பொருளாதார ரீதியாக தமிழகம் அமோகமான முறையில் முன்னேற்றம் அடைந்தது.
உலகத்திலேயே தமிழகத்தில், என்ஜினீயர் கல்லூரிகள் இத்தனை இருக்கின்றன என்றால் அதற்கு எம்ஜிஆர் தான் காரணம்.
தான் வளர வேண்டும் என்று நினைக்காமல் மற்றவர்களை வளர்த்து அவர்களால் சேவை செய்வதற்கு அஸ்திவாரம் போட்டு விட்டுத்தான் எம்ஜிஆர் அமரர் ஆகியிருக்கிறார்.
பேட்டி: ஷீலா பாலச்சந்திரன். ...........