Makkal Thilagam MGR Part -19
http://i65.tinypic.com/2vwfibd.jpg
நூற்றாண்டு விழா நாயகர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
சினிமா, அரசியல் என்ற இரண்டு துறைகளிலும் அசைக்க முடியாத சாதனை சக்தியாக இன்றளவும் நிலைத்து நிற்பவர்.
தனிஒருவனாக ... ஆம் தன்னந்தனியனாக இரு துறைகளிலும் போராடியவர்.
ஆம். கலைத்துறையிலே இவர்போல கொள்கைகளை வலியுறுத்தி, எந்த ஒரு தீய பழக்கத்திற்கும் வித்திடாத , நல்ல கருத்துகளை நம் மனத்தில் விதைக்கும் விவசாயியாக, அதை செயல்படுத்திக்காட்டும் தலைவனாக, நம்மில் ஒருவனாய் நம்மோடு இருந்து நம்மைக் காக்கும் எங்க வீட்டுப் பிள்ளையாக , தர்மத்தைக் காக்கும் காவல்காரனாக, அன்றும் இன்றும் என்றும் இயல்பான நடிப்பால் அவர் நிலைத்து நிற்கிறார்.
அரசியலிலும் அவர் ஓர் அசைக்க இயலாத சக்தி. இன்றும் அவர் பெயரைச் சொல்லித்தான் அத்தனை கட்சிகளும் அரசியல் நடத்துகின்றன. அவர் காட்டிய வழியை பின்பற்றுவதாகச் சொல்லித்தான் ஓட்டு கேட்க வேண்டியுள்ளது. (அதை பின்பற்றுகிறார்களா என்பது வேறு விஷயம்).ஆனால் இவைகள் மட்டும் தானா அவரது நீடித்த புகழுக்குக் காரணம்.
நல்ல நடிகர்கள் ஆயிரம் தோன்றலாம். நல்ல அரசியல்வாதிகளும் ஆயிரம் தோன்றலாம். ஆனால் ஏழைப்பங்காளனாக, மக்களின் காவலனாக நிஜ வாழ்வில் அவர் திகழ்ந்ததனால் தான் இன்றும் இதய தெய்வமாய் திகழ்கிறார். என்றும் நம் வாழ்வில் ஒளிவிளக்காய் பிரகாசிப்பார். அந்த தெய்வத்தை வணங்கி அவரது ஆசியுடனும் , இந்தத் திரியை வழிநடத்தும் நண்பர்கள் திருவாளர்கள். வினோத், ரவிச்சந்திரன், பேராசிரியர்செல்வகுமார்,கலியபெருமாள்விநாயகம், எம்.ஜி.ஆர்.ராமமூர்த்தி, ரூப்குமார், யுகேஷ்பாபு, கலைவேந்தன், லோகநாதன், முத்தையன் அம்மு, தெனாலிராஜன், சி.எஸ்.குமார், சத்யா,சுகராம், பிரதீப் பாலு, ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.பாஸ்கரன், சைலேஷ்பாசு, ராஜ்குமார் உள்ளிட்ட அனைவருடைய பங்களிப்பிலும் (பெயர் விடுபட்டவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்) இந்தத் திரியை இந்த நூற்றாண்டு விழா தொடக்கத்தின் போது தொடங்கி வைக்கும் வாய்ப்பளித்த அத்தனை நல்உள்ளங்களுக்கும் நன்றிகூறி தொடங்கி வைக்கிறேன்.