| View previous topic :: View next topic |
| Author |
Message |
Murali Srinivas Seasoned Hubber
Joined: 18 Mar 2006 Posts: 1425
|
Posted: Wed Oct 01, 2008 4:14 pm Post subject: NT BIRTHDY FUNCTION |
|
|
[tscii]NT - 80 th BIRTHDAY FUNCTION
DATE : 01.10.2008
VENUE : KALAINGAR ARANGAM, ANNA ARIVAALAYAM, CHENNAI
TIME : 6.30 PM
I have been attending the Birthday functions of NT for the last 3 years. But never have I seen such a huge crowd like the one that thronged the venue today. The Kalaingar Arangam at Anna Arivaalayam wore a festive look adorned by banners and posters on either side of the entrance and throughout the way to the auditorium. In fact the banners, posters and Sivaji Mandra Flags had been put up from Kamarajar Arangam till Arivaalayam. As I mentioned earlier the crowds coming from as far as Nagerkoil, Bangalore, Andhra, Pazhani, Madurai, Vellore had come for the birthday function and even by 5.30 pm, the auditorium was full. The heartening aspect of the crowd was women numbered up to 40% of the crowd. Again youngsters comprised 35- 40% of the crowd.
The stage was decorated with the banner which had NT on the left and Kalaingar on the right. It read நடிகர் திலகத்தின் 80 -வது பிறந்த நாள் விழா, 01.10.2008. Two portraits of NT were placed on either side if the stage. All the dignitaries were seated by 6.15 pm and CM arrived by 6.20 pm and function started by 6.30 pm. By the time the function started the hall and the balcony were over flowing and it looked that an equal number of people were standing. But in spite of knowing that they had to stand, people still were coming in, not to mention a big crowd (without invitations) pleading with the police to allow them in.
Thamizh Thaai vaazhthu was rendered to mark the beginning. One of the MCs of the evening Y.Gee Mahendra came to the mike and announced that Ram Kumar would do the welcome address. The mood of the crowd was evident by the deafening applause one heard when Y.Gee mentioned NT’s name. Ram welcomed everybody in his usual manner making it short and sweet. The next item was honouring the CM and the other speakers and Ram and Prabhu presented shawls and memento to Kalaingar, Sivakumar, Vairamuthu and Post Master General Mrs. Indira Krishnakumar on behalf of the trust. The act was repeated on behalf of Akila Indhiya Sivaji Mandram with its President Bhoominathan doing the honours. The next function was releasing of Postal cover in memory of Travancore sisters. Mohanram came to the mike and he gave a brief background to the whole exercise being done every year by the Sivaji – Prabhu Trust. Mohanram recalled that in the year 2000, when he suggested about the idea of bringing out the postal covers on cine personalities, NT not only responded favourably but also sponsored the entire programme and made an announcement that it would be done on an annual basis. Though he was not there for the next year’s function, Ram and Prabhu have been carrying out the event with the same involvement as NT desired. Mohanram went on to list the names of legends of Tamil cinema in whose memory the postal covers have been brought out and the list included AV.Meiyappan, K.Subramaniam, MKT, PUC, MR.Radha, Chandrababu, Bheemsingh and MK.Radha to name a few. With this recap he said this time the trust has decided to bring out a special postal cover on Travanacore sisters namely Lalitha, Padmini and Raagini. In order to highlight their contribution, clippings from the films in which they acted with NT were shown. It started with Lalitha. A scene from Thooku Thooki was shown. It was Lalitha and NT conversing with each other and crowd was reacting aggressively. For Ragini it was her song sequence in Uthhama Puthiran but since there is no NT in the scene, the reaction was little mild. Next was Padmini and her thillanaa was shown followed by Nalamthaana song. When NT winks his eyes, the crowd went berserk. It was a little disappointment that more clippings were not shown.
Past Master General Indira Krishnakumar released the postal covers and Kalaingar received it. Mohanram asked Lalitha’s daughter Sethu Lakshmi and her son Krishna, Raagini’s daughter Mahalakshmi and actor Vineeth to come to the stage for receiving the postal covers on behalf of Lalitha, Raagini and Padmini respectively. They came to the stage and received the covers. After this the Mrs. Indira spoke. She talked about Postal Department’s initiative in honouring artists and said that the artists are great ambassadors who could bring diverse people into their fold that bodes well for the country. [Sorry could not reproduce her speech in full. Even otherwise it was low in volume. Because of security reasons, the mobile jammer was put in use and this was in a way affecting the performance of the mike].
After this the Sivaji Virudhu vazhangum programme started. The first one to receive was Mellisai Mannar T.K.Ramamurthy. Clippings from Thanga Surangam, the only film TKR had worked for NT was shown. It was Naan Pirandha Nattukku endha Naadu periyadhu song sequence. Seeing NT in a young and charming avatar, the crowd went wild and especially when NT briskly walks down the steps in his usual majestic manner, cheers become louder. Then the clipping for Chachhu was shown. It was the scene from Sumathi En Sundari where NT for the sake of Nagesh bluffs about Nagesh killing the man-eater Tiger and getting caught. Then it was the turn of Aroordas and the clipping was from Deiva Magan showing Kannan coming to meet his Father and handing over the blank cheque [my day was made]. There were claps, whistle and sounds for each and every reaction. K.R.Vijaya was the next and Saraswathy Sabatham scene starting with Deivam Iruppadhu Enge song ending and the subsequent war of words between NT and KRV were shown. Now people started reacting more aggressively and especially when NT retorts [selvakku solvakkai adakkalaama] the cheers were huge. Following this Nallathoru Kudumbam song started and crowd was on their feet. When SP Choudry after singing Annai ennum kadal thandhadhu, started his stylish light dance movements all hell broke loose. The crowd was dancing with deafening sounds. Saroja Devi’s turn came and when people saw Gopal saying please followed by Unnai Ondru ketpen, there was no stopping the fans. Aalayamani starting scene was shown followed by Nadhi Enge Pogirathu from Iruvar Ullam. With the sound so deafening and fans seem to be on a high, police had to move in and take positions along the entire stretch to control the crowd. This brought some control and when Once More was shown, the cheers again started but were within limits. With this clippings came to an end.
All the dignitaries then were called up and presented the Sivaji Virudhu. TKR, Aroordas and Film News Anandan required help to walk and after all the six received the awards, a photo session was arranged for the dignitaries with the CM. With this the first part of the function came to an end. After this the session belonged to special speakers about which I would come back.
Regards |
|
| Back to top |
|
 |
complicateur Senior Hubber

Joined: 12 Sep 2007 Posts: 907
|
Posted: Wed Oct 01, 2008 6:47 pm Post subject: |
|
|
| joe wrote: | | mohanraman wrote: | | In fact I have forwarded that post to NT's family , to show the impact he continues to make even now. |
 |
நன்றி திரு.மோகன் ராம். நேரில் நன்றி சொல்ல முடியாத குறை ஒரு அளவிற்கு தீர்ந்தது.
Joe அவர்களே - அந்த படத்தை பதிவு செய்து என்னை எழுத வைத்தமைக்கு நன்றி.
திரு.முரளி ஸ்ரீநிவாஸ் - ஊக்கத்திற்கு நன்றி. இன்னும் எழுத முயற்ச்சிக்கிறேன்.
பிரபு ராம் - நல்ல படைப்புகளை பற்றியும், இதை எழுதுவதற்கு முன் இருந்த ஒரு தயக்கம் குறித்தும் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஒரு வித "maudlin reflection/emotionally exploitative piece ஆகி விட கூடாதே!" என்று நான் பயந்து தான் இருந்தேன். உங்கள் மறுபடிக்கு மிக்க நன்றி. _________________ "Fiction is not the enemy of reality. On the contrary fiction reaches another level of the same reality" - Jean Claude Carriere.
Music |
|
| Back to top |
|
 |
joe Diamond Hubber

Joined: 21 Oct 2004 Posts: 8222 Location: Singapore
|
Posted: Wed Oct 01, 2008 9:23 pm Post subject: |
|
|
| complicateur wrote: |
Joe அவர்களே - அந்த படத்தை பதிவு செய்து என்னை எழுத வைத்தமைக்கு நன்றி. |
எல்லா புகழும் நடிகர் திலகத்துக்கே!  _________________ செம்மொழி  |
|
| Back to top |
|
 |
joe Diamond Hubber

Joined: 21 Oct 2004 Posts: 8222 Location: Singapore
|
|
| Back to top |
|
 |
joe Diamond Hubber

Joined: 21 Oct 2004 Posts: 8222 Location: Singapore
|
|
| Back to top |
|
 |
joe Diamond Hubber

Joined: 21 Oct 2004 Posts: 8222 Location: Singapore
|
Posted: Thu Oct 02, 2008 2:21 am Post subject: |
|
|
Murali Sir,
Thanks for the coverage ..Waiting for rest of the part.  _________________ செம்மொழி  |
|
| Back to top |
|
 |
saradhaa_sn Seasoned Hubber

Joined: 13 Jul 2005 Posts: 1748 Location: Chennai
|
Posted: Thu Oct 02, 2008 4:46 am Post subject: |
|
|
எண்பதாவது பிறந்த நாள் காணும் கலைத்தாயின் தலைமகனே.
தலைமுறைகள் பல தாண்டியும் உன் பெருமையும் புகழும் பல்லாண்டுகள் நிலைத்திருக்கும். நீ தந்த படைப்புகள் அத்தகையது, நீ படைத்த சாதனைகள் அத்தகையது.
எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்திருப்பாய்… உறைந்திருப்பாய். _________________ Anbudan….. Saradha Prakash |
|
| Back to top |
|
 |
joe Diamond Hubber

Joined: 21 Oct 2004 Posts: 8222 Location: Singapore
|
|
| Back to top |
|
 |
Murali Srinivas Seasoned Hubber
Joined: 18 Mar 2006 Posts: 1425
|
Posted: Thu Oct 02, 2008 6:51 am Post subject: |
|
|
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தொடர்ச்சி.
அடுத்து பேச வந்தவர் மார்கண்டேயன். இவருக்கு மகேந்திரா கொடுத்த முன்னுரை " மோதிர கையால் குட்டுப்பட்டவர்களை தெரியும். ஆனால் இவர் உயர்ந்த மனிதனின் மோதிர கையால் அடி வாங்கியவர் ". சிவகுமார் மைக் முன்னால் வந்தார். விழாவிற்கு தலைமை ஏற்றவரை வாழ்த்தி விட்டு அதிரடியாக "என் தலையின் குடும்பத்தினரே " என்று ஆரம்பித்தார். உரத்த குரலில் "சிவாஜியின் ரத்த துளிகளே" என்ற போது ரத்த துளிகள் எழுப்பிய ஆரவாரம் அறிவாலயத்தை தாண்டி கேட்டிருக்கும். தன்னுடைய பத்தாவது வயதில் பராசக்தி தனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்தார். குறிப்பாக ஒ! ரசிக சீமானே பாடலுக்கு பின் பணத்தை எல்லாம் இழந்து விட்டு மதுரைக்கு போக முடியாமல் சென்னை தெருவிலே நின்று நடிகர் திலகம் பேசும் வசனத்தை அப்படியே பேசி காண்பித்தார். தமிழ் திரையுலகை புரட்டி போட்ட வசனம் அங்கு தான் ஆரம்பித்தது என்றார். அடுத்து மாறன் வசனம் எழுதிய அன்னையின் ஆணை திரைப்படத்தில் சாம்ராட் அசோகன் வசனம் அதே ஏற்ற இறக்கங்களோடு வந்தன. பிறகு கட்டபொம்மன் நாடகம் 99 வது முறையாக நடத்தப்பட்ட போது நடிகர் திலகத்தின் தொண்டையில் ரத்த நாளம் வெடித்து பேசும் போது ரத்தம் வந்தது, டாக்டர் சொன்னதையும் மீறி மறு நாளும் நடிகர் திலகம் நடிக்க போனதை பற்றியும் நினவு கூர்ந்த சிவகுமார் கட்டபொம்மனின் இறுதி காட்சி வசனத்தையும் பேசி காட்ட மறக்கவில்லை. கலைஞரின் எழுத்து வன்மையை புகழ்ந்த அவர் எப்படி பராசக்தியின் கோர்ட் சீன் வசனம் எப்படி முழு கதையையும் சொல்லி விடுகிறது என்பதை மொத்த வசனத்தையும் பேசி காண்பித்தே விளக்கினார். சினிமாவே அதிகம் பார்க்காத பெரியார், ராஜாஜி போன்றவர்கள் எப்படி நடிகர் திலகத்தை பாராட்டினார்கள் என்பதையும் நினைவூட்டினார். சம்பூர்ண ராமயணத்தில் கதை நாயகனாக இல்லாவிடினும் எப்படி நடிகர் திலகம் பெயர் பெற்றார் என்பத்தை சொல்லும்போது இப்போதைய தன்னுடைய விருப்ப விஷயமான கம்ப ராமயணத்தில் பரதன் கைகேயிடம் கோவித்து கொள்ளும் இடத்தில் வரும் செய்யுளை சொல்லிவிட்டு படத்தில் நடிகர் திலகம் கைகேயியாக நடித்த ஜி. வரலக்ஷ்மியிடம் பேசும் வசனத்தையும் சொன்னார். இதையெல்லாம் சொல்லி விட்டு தான் அவரோடு நடித்த சரஸ்வதி சபதம் படத்தில் நாரதராக வந்த போது நடிகர் திலகம் பேசிய முறை எப்படி மாறியிருந்தது என்பதையும் குறிப்பிட்டார். அதிலும் " நாராயண, மாதவா, கேசவா, ஸ்ரீதரா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ரிஷிகேஷா, பத்மநாபா, தாமோதரா, உன் பொற்பாத கமலங்களுக்கு என் பணிவான வணக்கம்" என்று ஸாப்டாக நடிகர் திலகம் மகா விஷ்ணுவாக நடித்த தன்னிடம் வசனம் பேசிய போது, தன்னிலை மறந்து நின்றதை அவர் அழகாக குறிப்பிட்ட போது அரங்கம் அதிர்ந்தது. இறுதியாக செவாலியே விருது நிகழ்ச்சியில் தான் பேசிய அதே பேச்சை மீண்டும் பேசிவிட்டு உரையை முடித்தார். சிவகுமாரை பொருத்த வரை அவரது நினைவாற்றலும் வசனங்களை அப்படியே பேசும் திறனும் அனைவரும் அறிந்தது தான் என்றாலும் அது மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டது. அதே நேரத்தில் பட வசனங்களை குறைத்து நடிகர் திலகத்துடன் இணைந்து நடிக்கும் போது நடந்த சுவையான நிகழ்வுகளை எடுத்து கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அடுத்து வந்தவர் கவிப்பேரரசு. இவரை அழைக்கும் போது மகேந்திரா, கவிராஜன் கதையில் வரும் "அது எப்படி எட்டயபுரத்தில் ஒரு தாயின் கர்ப்ப பை மட்டும் நெருப்பை சுமந்தது " என்ற வரியை குறிப்பிட்டார். வழக்கம் போல் தன் தமிழ் ஆசானுக்கு நன்றி சொல்லி விட்டு தொடங்கினார் கவிஞர். "சிவாஜிக்கு கிடைத்த பாராட்டுக்களிலே உச்சம் எது என்று யோசித்தேன். லதா மங்கேஷ்கருக்கு கிடைத்த உச்ச கட்ட பாராட்டு, அவர் பாடி முடித்ததும் மைக்கை கவிழ்த்தால் தேன் சொட்டும் என்ற பாராட்டு. கார்ல் மார்க்ஸ் பற்றிய உச்சகட்ட பாராட்டு அவரது எழுத்துக்களை படித்தால் எப்போதும் அவர் சிந்தித்து கொண்டேயிருந்திருப்பார் என்று தோன்றுகிறது என்று சொன்ன ஏங்கல்ஸின் வார்த்தைகள். அது போல தொலைக்காட்சியில் ஒரு சிவாஜி படம் ஓடி கொண்டிருக்கிறது. பார்த்து கொண்டிருந்தவர் மூன்று மீட்டர் தூரம் இருந்த அந்த டி.வி. பெட்டிகருகே போய் அந்த நிழலுருவத்தின் முகத்தை தடவி விட்டு நீதான்யா உலக பெரு நடிகன் என்று சொன்னாரே அந்த பாராட்டு, அந்த நண்பனின், கலைஞரின் பாராட்டு தான் உச்சகட்ட பாராட்டு" என்று கவிஞர் சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது. அடுத்து பராசக்தி படத்தில் வரும் பாடலை எடுத்துக் கொண்ட கவிஞர் அதில் வரும் "காரியத்தில் கண்ணாயிருந்தாலும் தாண்டவகோனே காசு பையில் கண் வைய்யடா தாண்டவகோனே" வரியின் போது நடிகர் திலகம் நான்கு முறை ஆலாபனை செய்யும் போது அங்கு வரும் நாடக குழுவிடம் அவர் நடத்தும் ஒரு விளையாட்டை அழகாக குறிப்பிட்டார். பராசக்தியில் அவரிடம் தெரிந்த முதிர்ச்சிக்கு அதற்கு முன் அவர் கண்ட 3000 மேடைகள், நாடக உலகில் அவர் செலவழித்த பதினேழு வருடங்கள் தான் காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விலைகளை பற்றியும் வைரமுத்து குறிப்பிட தவறவில்லை. நான்கு வருடங்கள் வீட்டிற்கு வராமல் இருந்து விட்டு, பிறகு வந்த போது தன் அண்ணன்கள் இரண்டு பேர் இறந்து போன செய்தியை தெரிந்து கொண்டது, கையில் காசில்லாத காரணத்தால் பாலக்காட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கொல்லன்கோடிலிருந்து பொள்ளாச்சி வரை ஒரு இரவு கொட்டும் மழையில் நடந்து வந்தது போன்றவற்றை கவிஞர் நினைவு கூர்ந்தார். நடிகர் திலகத்தின் சிறப்புகளில் ஒன்றை விஞ்ஞான உண்மையோடு ஒப்பிட்டார் கவிஞர். பிறக்கும் போது இருப்பதை விட ஒரு மனிதனின் எல்லா உறுப்புகளும் வளரும். ஆனால் வளராமல் பிறக்கும் போதே முழுமையாக இருப்பது ஒரு மனிதனின் கண் மட்டும் தான் என்று குறிப்பிட்ட கவிஞர் அந்த கண்களை மூன்று மில்லிமீட்டரிலிருந்து மூன்று மீட்டர் வரை திரையில் காண்பிக்க கூடியவர் நடிகர் திலகம் மட்டும் தான் என்றார். அந்த கண்கள் மூலமாக அவர் சொன்ன கதைகள் ஏராளம் என்றார். நடிகர் திலகத்தின் உடல் உறுப்புகள் மட்டுமல்ல அவற்றில் அணிந்திருக்கும் நகைகளும் நடிக்கும் என்று சொன்ன கவிஞர் அதற்கு எடுத்துக்கொண்ட உதாரணம் வணங்காமுடி. அதில் நடிகர் திலகம் அணிந்திருந்த குண்டலம் கூட நடித்தது என்றார். வணங்காமுடியில் நகை நடித்தது, திருவிளையாடல் திரைப்படத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய போது சிகை நடித்தது, புதிய பறவை படத்தில் பியானோ வாசித்து விட்டு சிகரெட்டை ஊதுவார், அப்போது அந்த புகை நடித்தது என்ற போது எழுந்த ஆரவாரம் அடங்க வெகு நேரமாயிற்று.
நடிகர் திலகத்தின் நகைசுவை உணர்வு பற்றி குறிப்பிட்ட கவிஞர் இரண்டு சம்பவங்களை நினைவு கூர்ந்தார். ஒன்று முதல் மரியாதை படத்தில் நடிக்கும் போது வாய்ப்பு கேட்டு வந்த ஒருவரிடம் நடிகர் திலகம் அடித்த கமெண்ட் "ஏம்பா உங்க ஊரிலே கண்ணாடியெல்லாம் கிடையாதா இல்லை கண்ணாடி விக்கிற வழக்கமில்லையா" . அது போல வைரமுத்து தன் மகன்கள் இருவரையும் கூட்டி கொண்டு போயிருக்கிறார். மூத்தவன் மதன் கார்க்கி நடிகர் திலகத்திடம் தான் கட்டபொம்மன் பார்த்து அழுது விட்டதாக கூற உடனே நடிகர் திலகத்தின் கமெண்ட் "ஏம்பா நான் கொஞ்சம் சுமாரா நடிப்பேன். ஆனால் நீ அழற அளவுக்கு மோசமாவா நடிச்சிருந்தேன்?" .
நடிகர் திலகத்தின் நடிப்பு எப்படி ஒருவரை பாதிக்கும் என்பதற்கு முதல் மரியாதை பார்த்து விட்டு சுத்த சைவமான நான் மீன் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது என்று சொன்ன ஒரு நடிகரை எனக்கு தெரியும் என்றார் கவிஞர். (இதை சொல்லும்போது மகேந்திராவை பார்த்துக் கொண்டே சொன்னார்).
அது போல் நடிகர் திலகம் எப்படி எதிர்ப்பிலேயே வளர்ந்தார் என்பதற்கும் ஒரு சம்பவத்தை சொன்னார். ஒரு உரக் கம்பெனியின் விழாவிற்கு நடிகர் திலகத்தை அழைத்திருந்தார்களாம். அங்கே பேசும் போது நடிகர் திலகம் சொன்னாராம் "என்னை ஏன் அழைத்தீர்கள் என்று புரியவில்லை. ஒரு வேளை தமிழ் நாட்டிலேயே மிக அதிகமாக சாணி அடிக்கப்பட்ட போஸ்டர்கள் என் முகத்தை தாங்கி வந்தவைதான் என்பதால் அழைத்தீர்கள் என நினைக்கிறேன்" என்றாராம்.
பிறகு ஒரு சோக சூழலை பற்றி சொல்ல போகிறேன் என்று ஆரம்பித்த கவிஞர் நடிகர் திலகம் மறைந்த பிறகு அவரது பூத உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வைக்கப்பட்டிருந்த போது கடைசியாக தனி அறையில் தானும் பிரபுவும் சத்யராஜும் மட்டும் இருந்த அந்த கடைசி நேரத்தை நினைவு கூர்ந்த போது அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி. கவிஞர் முகத்தை மூடியிருக்கும் துணியை விலக்கி பார்க்கிறார். "ஒரு மனிதன் இறந்து போகும் போது நான்கு பேர் இறந்து போகிறார்கள். ஒரு கணவன் இறந்து போகிறான், ஒரு தகப்பன் இறந்து போகிறான், ஒரு மாமன் இறந்து போகிறான், ஒரு மைத்துனன் இறந்து போகிறான். ஆனால் இந்த மகா கலைஞன் அங்கே கிடந்த போது சாக்ரடீஸ் இறந்து கிடப்பதை பார்த்தேன், சேரன் செங்குட்டுவன் இறந்து கிடப்பதை பார்த்தேன், கட்டபொம்மன் இறந்து கிடப்பதை பார்த்தேன், கப்பலோட்டிய தமிழன் இறந்து கிடப்பதை பார்த்தேன், அப்பர் இறந்து கிடப்பதை பார்த்தேன், ராஜ ராஜ சோழன் இறந்து கிடப்பதை பார்த்தேன், ஆக ஒரு எழுபது வருட மனித வாழ்க்கையில் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்த ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே" என்ற போது சோகமும் சந்தோஷமும் ஒரு சேர கொப்பளிக்க அரங்கமே அதில் அமிழ்ந்தது.
"நடிகர் திலகம் மறையவில்லை. அவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ஏழு ஆண்டுகள் கடந்தும் இங்கே எழும் கைதட்டல் சாட்சி. இந்த ஆரவாரம் சாட்சி. இந்த விசில் சாட்சி. இந்த எழுச்சி சாட்சி. அவர் என்றும் வாழ்வார்" என்று கவிஞர் முடித்த போது அரங்கமே ஆர்ப்பரித்தது.
தொடர்ந்து பேசியவர் இளைய திலகம். அதன் பிறகு நிறைவுரை கலைஞர். அதை பற்றி விரைவில்
அன்புடன் |
|
| Back to top |
|
 |
Murali Srinivas Seasoned Hubber
Joined: 18 Mar 2006 Posts: 1425
|
Posted: Thu Oct 02, 2008 3:36 pm Post subject: |
|
|
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி தொடர்ச்சி.
அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்த பிரபு இந்த விழாவிற்காக கலைஞரை அழைக்க சென்ற போது உடனே வருகிறேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த தேதியில் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்பு கொள்ள வேண்டாம் என்று கலைஞர் தன் உதவியாளர் சண்முகநாதனிடம் சொன்னதை குறிப்பிட்ட பிரபு, விழா காமராஜர் அரங்கிலா என்று கலைஞர் கேட்டதையும் அறிவாலயத்தில் இருந்தால் வருவீர்களா என்று வினவியதையும் ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்ட போது உங்களுக்கு பிடிக்காத இடம் ஆயிற்றே என்று கலைஞர் சொன்னதையும் குறிப்பிட்ட பிரபு நாங்கள் நன்றி மறக்காதவர்கள். எங்களுக்கு பிடிக்காத இடமாக இருந்ததாலும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடித்து எங்கள் தெய்வதிற்கு சிலை வைத்தீர்கள். அதை என்றும் மறக்க மாட்டோம் என்ற பிரபு கூட்டத்தினரை பார்த்து தம்பிகளா அடிங்கடா என்று சொல்ல அரங்கமே ஆர்பரித்தது. பிறகு திருவிதாங்கூர் சகோதரிகள் குடும்பதினருக்கும், சிவாஜி விருது பெற்ற கலைஞர்களுக்கும், சிவகுமார் மற்றும் வைரமுத்துவிற்கும் நன்றி சொன்ன பிரபு ரசிகர்கள் பக்கம் திரும்பி " எல்லாவற்றுக்கும் மேலாக எந்த பலனும் எதிர்பார்க்காமல் அப்பா மீதும் எங்கள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பாசமும் இருக்கிறதே அதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய போகிறோம், எப்படி நன்றி சொல்ல போகிறோம்" என்று உணர்ச்சி வசப்பட்ட பிரபு " நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் எங்கள் குடும்பமே வாழ்ந்து கொண்டிருக்கிறது" என்று சொல்லி விட்டு முதல்வரை பேச அழைத்தார்.
சாதரணமாக கலைஞர் பேசினால் உடன் பிறப்பே என்று சொல்லும் போது அதிக கைத்தட்டல் விழுவது வழக்கம். ஆனால் இன்று சிவாஜி ரசிகர் மன்ற பெரு மக்களே என்ற போது தான் அதிக கைதட்டல். இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் தன்னுடைய நகைச்சுவை உணர்வும் கவுண்டர் அட்டாக் செய்யும் திறனும் குறைந்து விடவில்லை என்பதை நிரூபித்தார். பிரபு பேசும் போது அடிங்கடா என்று சொன்னதை குறிப்பிட்ட கலைஞர் யாரை அடிக்க சொல்கிறார் என்று பார்த்ததாகவும் பிறகுதான் இரண்டு கைகளையும் சேர்த்து அடிக்க சொல்கிறார் என்று புரிந்ததாகவும் சொன்ன போது சிரிப்பலை. பல்வேறு படங்கள் திரையிடப்பட்ட போது அவை எந்த எந்த படங்களிருந்து எடுக்கப்பட்டவை என்பதை பிரபு சொல்லிக் கொண்டிருந்தாகவும் வேண்டாம் எனக்கே தெரியும். நான் பார்க்காத சிவாஜி படமா என்று கலைஞர் சொன்ன போது அரங்கில் ஆரவாரம். சந்தர்ப்பம் கிடைத்த போது தன் அரசியல் எதிரியை குத்திக்காட்டவும் அவர் தவறவில்லை. சிவாஜிக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதை விளக்கிய அவர் முதலில் ஒரு பெரிய நடிகர் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரை சிலர் பயமுறுத்தியதால் விலகி விட்டார் என்றும் அவருக்கு பிறகு அந்த வேடத்தை ஏற்று நடித்தவர் வி.சி.கணேசன், அதை பார்த்து விட்டு பெரியார் அவருக்கு சிவாஜி என்ற பட்டதை வழங்க கணேசன் சிவாஜி கணேசன் ஆனார் என்று சொன்னார்.
தொடர்ந்து முதல்வர் சிவாஜியும் தானும் ஒரே இலையில் சாப்பிட்டது, சான்ஸ் தேடி அலைந்தது, இயக்க நிதிக்காக நாடங்கள் நடத்தியது இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்தார். 1952 - ம் வருடத்தில் சுவாமி மலையில் நடை பெற்ற சிவாஜியின் திருமணத்திற்கு தான் தான் மாப்பிள்ளை தோழனாக இருந்ததை வெளிப்படுத்தினார். அண்ணாவிற்கும் நடிகர் திலகத்திற்கும் இருந்த உறவை குறிப்பிட்ட முதல்வர் அண்ணா சொல்படி 1950-களில் புயல் வெள்ள நிவாரண நிதிக்காக தானும் சிவாஜியும் கலை நிகழ்ச்சிகள் நடத்த சென்றதையும் நாடகம் நடத்தியவர்கள் பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிட தாங்கள் நிர்கதியாக நின்றதையும் பிறகு மோதிரத்தை விற்று குழவினரை சென்னைக்கு அனுப்பி வைத்ததையும் சொன்னார். ஆனால் ஒரு சில சுயநலவாதிகள் சிவாஜியை கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள் என்றும் ஆனால் தன் இதயத்திலிருந்து வெளியேற்ற அவர்களால் முடியவில்லை என்றார். அண்ணா அதனால் தான் கட்டபொம்மன் நாடகத்திற்கு சென்று விட்டு மேடையேறி எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்தியதையும், மார்லன் பிராண்டோவை விட சிறந்த நடிகர் சிவாஜி என்றும் குறிப்பிட்டதையும் சொன்னார்.
எத்தனை எதிர்ப்புகள் வந்த போதும் அதை முறியடித்து சிலை நிறுவியதை முதல்வர் குறிப்பிட்ட போது அரங்கம் அதை ஆமோதிக்கும் விதமாக ஆரவாரம் செய்தது. ராம்குமார் மற்றும் பிரபு பற்றி குறிப்பிட்ட முதல்வர் இவர்களை பெற சிவாஜி தவம் செய்திருக்க வேண்டும் என்று சொன்னார். மகன் தந்தைக்காற்றும் உதவியை செய்யும் இவர்களை வாழ்த்துகிறேன் என்று உரையை முடிக்க முயன்ற போது ரசிகர்கள் மத்தியிலிருந்து மணி மண்டபம் மணி மண்டபம் என்று குரல் எழுந்தது. ஆனால் அதை பற்றி ஒன்றும் குறிப்பிடாமல் முதல்வர் உரையை முடித்து விட்டார்.
நாட்டுப்பண் இசைக்கப்பட விழா இனிதே நிறைவுற்றது.
இரண்டு விஷயங்கள் தெளிவாக வெளிப்பட்டன.
ரசிகர்களில் பெரும்பாலானோர் மணி மண்டபம் இன்னும் அமைக்கப்படாததில் கோபம்/வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
நடிகர் திலகத்திற்கு இப்போதும் இருக்கும் ரசிகர்கள் அவர்களது ஆர்வம் பலருக்கும் புதிய செய்தியாக இருந்தது. குறிப்பாக மேடையில் அமர்ந்தவர்கள் (இதில் முதல்வரும் அடங்கும்). அதை வைரமுத்து போன்றவர்கள் வெளிப்படையாக சொன்னார்கள். அங்கே வந்திருந்த அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு ஒரே ஆச்சரியம். பொது மக்களாக வந்திருந்தவர்களும் இதை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.
பலரையும் வியப்பில் ஆழ்த்திய விழா இனிதே நிறைவுற்றது.
அன்புடன் |
|
| Back to top |
|
 |
Nerd Diamond Hubber

Joined: 25 Mar 2005 Posts: 8957
|
Posted: Thu Oct 02, 2008 8:47 pm Post subject: |
|
|
கலைஞர் தொலைக்காட்சியின் செய்தித்தொகுப்பில் இடம்பெற்ற நடிகர் திலகத்தின் எண்பதாவது பிறந்த தினத்தை பற்றிய செய்தி. கலைஞர், வைரமுத்து, சிவகுமார் பேச்சின் சில பகுதிகள் உள்ளன.
http://video.yahoo.com/watch/3628197/10001596
இதை மிகவும் ரசித்தேன்: கலைஞரின் விரல், சிவாஜியின் குரல்  _________________ எனக்கு சனா வேணும் DOT |
|
| Back to top |
|
 |
joe Diamond Hubber

Joined: 21 Oct 2004 Posts: 8222 Location: Singapore
|
Posted: Thu Oct 02, 2008 9:19 pm Post subject: |
|
|
| Nerd wrote: | கலைஞர் தொலைக்காட்சியின் செய்தித்தொகுப்பில் இடம்பெற்ற நடிகர் திலகத்தின் எண்பதாவது பிறந்த தினத்தை பற்றிய செய்தி. கலைஞர், வைரமுத்து, சிவகுமார் பேச்சின் சில பகுதிகள் உள்ளன.
http://video.yahoo.com/watch/3628197/10001596
இதை மிகவும் ரசித்தேன்: கலைஞரின் விரல், சிவாஜியின் குரல்  |
Nerd
Sivakumar was emotional  _________________ செம்மொழி  |
|
| Back to top |
|
 |
rangan_08 Seasoned Hubber

Joined: 08 Feb 2008 Posts: 1296 Location: Per andam
|
Posted: Thu Oct 02, 2008 11:54 pm Post subject: |
|
|
Murali sir, thanks for the excellent coverage. It was like watching the function live.
Nerd, thanks for the clipping. _________________ NAMBIKKAI, Nangooram pola. Kelvi ketkadha nambikkai. Kelvi ketpadhu sila velai imsai - Sujatha |
|
| Back to top |
|
 |
Bhoori Regular Hubber
Joined: 13 Feb 2008 Posts: 106
|
|
| Back to top |
|
 |
groucho070 Veteran Hubber

Joined: 07 Jun 2006 Posts: 3595 Location: Malaysia
|
Posted: Fri Oct 03, 2008 3:48 am Post subject: |
|
|
Murali-sar,
You are aware that you have also become our personal special correspondence for NT functions? Your report puts us right smack in the middle of the audience.
Vairamuthu's observation during the final moment is spot on! Here thousands of years of personality passed on, with the passing of a 70 year old man.
Thank you sar, reading this and reading your write up on Pasa Malar song confirms a NT filled weekend for me. _________________ Recalling a piece on NT last birthday |
|
| Back to top |
|
 |
|
|
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2009 phpBB Group
|
|