|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
new serial/program
| Topic started by aanaa on Thu Mar 1 12:08:14 2007. | [Full View] |
| From: aanaa on Sat Jan 30 15:15:11 2010. | [Full View] |
| Quote: |
|
கருணமஞ்சரி ராஜ் டிவியில் திங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கவிருக்கும் புதிய தொடர் `கருணமஞ்சரி.' தொழில்அதிபர் கருணாகரனுக்கு 4 மகள்கள். கருணாகரன் வேலை பார்க்கும் இடத்தில் நடந்த ஒரு சம்பவம் அவரது பெண்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக இதில் கருணாகரனின் இரண்டாவது மகள் மஞ்சரி தான்அதிகம் பாதிக்கப்படுகிறாள். மஞ்சரியின் அக்கா சுதா திருமணமாகி கணவருடன் இருக்கிறாள். ஐ.டி.யில் வேலை பார்க்கும் கணவர், 7 வயதில் மகன் என சின்னக் குடும்பமாய் மகிழ்ச்சியாய் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் குடும்ப நண்பர் வடிவில் பிரச்சினை கிளம்புகிறது. இந்தக் குடும்பத்தின் மூன்றாவது பெண் பணக்கார இளைஞனை விரும்புகிறாள். அதுவே பிரச்சினையாகிறது. கடைக்குட்டி ஷப்னம் காதுகேட்காத வாய் பேசமுடியாத பெண். இவளைத் தேடியும் ஒரு பிரச்சினை வருகிறது. இதற்கிடையே சகோதரிகளில் இண்டாமவரான தொடரின் நாயகி மஞ்சரியை அவள் அத்தைமகன் மனோகர் விரும்புகிறான். ஆனால் மஞ்சரிக்கோ அவன் மீது எந்தவித ஈர்ப்பும் இல்லாததால் அவன் காதலை புறக்கணிக்கிறாள். அதேநேரம் அவள் அப்பாவின் முதலாளி மகன் ராஜாவுக்கும் மஞ்சரி மேல் காதல். மஞ்சரி இந்த இருவரில் ஒருவரை மணக்கிறாளா? அல்லது மஞ்சரிக்கென்றே ஒரு மணாளன் வரப் போகிறானா? தொடரில் சகோதரிகள் நால்வரும் அவரவர் பிரச்சினைகளில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது சுவாரசிய முடிச்சு. மஞ்சரியாக புஷ்பலதாவும் அவரது அக்காளாக நடிகை சுதா சந்திரனும் வருகிறார்கள். தயாரிப்பு, யக்கம்: பிரபுநேபால்.
|
| From: aanaa on Sat Jan 30 15:16:27 2010. | [Full View] |
| Quote: |
|
தேடல் சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், ஞானிகளின் வரலாற்றை பதிவு செய்யும் முற்றிலும் மாறுபட்ட புத்தம் புதிய ஆன்மிக நிகழ்ச்சி `தேடல்'. ஞாயிறு தோறும் காலை 8.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த `தேடல்' நிகழ்ச்சியில் முதல் இரண்டு வாரங்கள் வடலூர் அருட்பிரகாச ராமலிங்க வள்ளலார் பற்றிய அரிய கருத்துக்கள் ஒளிபரப்பாகிறது. மகான்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் சொன்ன உண்மைக் கருத்துக்கள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் என அரிய தகவல்களை தொகுத்து சுவைபட வழங்குகிறார்கள். இதுவரை மிகக் குறைந்தவர்கள் மட்டுமே ஆராய்ந்து சித்தர் பாடலின் உண்மைகளை கண்டறிந்துள்ளனர். அதில் திரண்ட கருத்துக்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. |
| From: aanaa on Sat Jan 30 15:18:32 2010. | [Full View] |
| Quote: |
|
அசத்தப் போவது யாரு-150 சனிக்கிழமை தோறும் இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `அசத்தப்போவது யாரு' நிகழ்ச்சி, இன்று 150-வது சிறப்பு விழாக் கொண்டாட்டத்துக்கு வந்திருக்கிறது. இந்த சிறப்புநிகழ்ச்சியில் விருந்தினராக டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கலந்து கொள்கிறார். "நகைச்சுவை நடுவர்களாக மதன்பாப்- சிட்டிபாபு நகைச்சுவைக் கலக்கல் செய்யும் இந்த நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமாரும் தனக்கே உரிய காமெடி கண்ணோட்டத்தில் நிகழ்ச்சியை சிறப்பாக்குகிறார்'' என்கிறார், நிகழ்ச்சியின் இயக்குனர் ராஜ்குமார். தயாரிப்பு: அர்ச்சித்.
|
| From: aanaa on Sat Jan 30 15:19:50 2010. | [Full View] |
| Quote: |
|
ஜோடி நம்பர் ஒன்-4 சீரியலில் மட்டும் பார்வையை பதித்துவந்த சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை கொஞ்சம் திசைமாற்றிய பெருமை விஜய் டிவியின் `ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சிக்கு உண்டு. சின்னத்திரை நட்சத்திரங்கள் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் தேர்ந்தவர்கள் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது இந்த நிகழ்ச்சி. தொடர்ந்து மூன்று சீசன்கள் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சி இப்போது நான்காவது சீசனாக தொடர்கிறது. 8 நட்சத்திர ஜோடிகள் இந்த நான்காவது சீசனில் வந்து தங்களின் நடன திறமையை நிரூபிக்க உள்ளனர். பிரேம்கோபால்-பிரேமிலி, கீத்தன் பிரிட்டோ - திவ்யா, அருண்-பிரியா, வோங்கா-சுனிதா கோகாய், சுரேஷ்-ஜெயலட்சுமி ஆகிய ஜோடிகள் களத்தில் இறங்க உள்ளனர். நன்கு நடனம் தெரிந்த இந்த ஜோடிகளிடையே பரபரப்பான போட்டி நிலவும் என்பது நிச்சயம். இந்த ஜோடிகளுடன் ஷெரிப், சதீஷ், ரஜினி, சாய்பிரமோதித்தா ஆகியோரும் பங்குபெற உள்ளனர். இரவு 10 மணிக்கு இந்த நடன நிகழ்ச்சியை காணலாம். |
| From: aanaa on Sun Feb 7 11:38:08 2010. | [Full View] |
| Quote: |
| வாடகை வீடு
கலைஞர் தொலைக்காட்சியில் வரும் திங்கள் முதல் தினமும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் புதிய தொடர், வாடகை வீடு. இன்று 80-க்கும் மேற்பட்ட சதவிகிதத்தினர் வாடகை வீட்டில்தான் கஷ்டப்பட்டு காலம் கழிக்கின்றனர். அவர்களின் இதயக் குமுறல்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வருவதுதான் `வாடகை வீடு' தொடர். ரெட்டியார் வீடு சென்னையில் உள்ள 10 குடித்தனங்கள் குடியிருக்கும் பழைய வீடு. ஓடுகள் சரிந்தும், செங்கல் உதிர்ந்தும், சென்னையின் இரைச்சல்களில் அதிர்ந்தும் வயதான கிழவன் போலிருக்கும் வீடு. ஆனாலும் அதனுள் குடியிருக்கும் மக்களின் அன்பு, பாசத்தால் உறுதியாய் நிற்கும் வீடு. வீட்டின் ஓனர் மாதம் ஒருமுறை வாடகை வசூலிக்க மட்டுமே இந்த வீட்டிற்கு வருபவர். வீட்டில் உள்ள எந்தக் குறையையும் கண்டு கொள்ளாதவர். ஏன் வீடே விழுந்தால்கூட கவலைப்படமாட்டார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. ராஜன்-லட்சுமி தம்பதிகள் ரெட்டியார் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராஜன்-லட்சுமி தம்பதிகள். ராஜனுக்கு பலராமன், ரகுராமன் என்று இரண்டு மகன்கள். பிரியா, ஜானகி என்று இரு மகள்கள். இவர்கள் அனைவரையும் ராஜன் தன் வருமானத்தின் மூலம் காப்பாற்றி வருகிறார். வாடகை வீடு போதாமல் அனைவரும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் நிலையில் அவர் எப்போதோ வாங்கிப்போட்ட சென்னையின் ஒதுக்குப்புறமான இடத்தில் கஷ்டப்பட்டு வீட்டை கட்டி குடிபோகிறார். ஆனால் எந்தவித சவுகரியமும் இல்லாத இடத்தில் வீடு இருப்பதால் பல கஷ்டங்களுக்குப் பிறகு பழைய வாடகை வீட்டிற்கே அவர் திரும்பி வருகிறார். உமா ஒரு காலத்தில் மிகவும் உயர்ந்த நிலையில் வாழ்ந்தது உமாவின் குடும்பம். உமாவின் தந்தையின் தவறான போக்கால் சொத்து சுகமிழந்து மிச்சமிருக்கும் ஒரே சொத்தை மீட்க கோர்ட்டு கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறது உமாவின் குடும்பம். பரத் சென்னைக்கு நடிக்கும் ஆசையில் வந்து தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பவன். உமாவின் பார்வையில் மட்டும் எப்போதும் தவறாகவே தெரிபவன். இந்த குடித்தனத்தில் இன்னும் இவர்களுடன் `லா பாயிண்ட்' லட்சுமணன், மாது, அம்பி என்று பலர் இருந்து வருகிறார்கள். இந்த வீட்டிற்கு ரெட்டியார் வாயிலாக ஒரு பிரச்சினை எழுகிறது. ரெட்டியார் அந்த வீட்டை விற்றுவிட முடிவு செய்கிறார். அதற்காக அந்த வீட்டில் இருப்பவர்கள் காலி செய்ய பலவித தந்திரங்களை கையாளுகிறார். இந்த நிலையில் பரத், பூஜா என்ற பெண்ணை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றி ரெட்டியார் வீட்டில் குடி வைக்கிறான். பூஜா தான் யார் என்ற விவரமே தெரியாமல் அம்னிஷியாவில் பாதிக்கப்பட்ட நிலையில் ரெட்டியார் காம்பவுண்டு மக்களோடு வாழத் துவங்குகிறாள். ஒருநாள் அவளுக்கு சுயநினைவு திரும்ப, தான் குடியிருப்பது தன் சொந்த வீட்டில்தான் என்பதும், ரெட்டியார் அதன் ஓனர் என்று பொய் சொல்லி அதை விற்க சதி செய்யும் விவரமும் தெரியவருகிறது. அது மட்டுமில்லாமல் தான் பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி என்றும் தனக்கு பிளட் கேன்சர் இருப்பதாகவும் தெரியவருகிறது. தன்னை யாரென்று தெரியாத நிலையிலும், தன்னை பாசத்தோடு பாதுகாத்த அந்த குடியிருப்பு மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என பூஜா துடிக்கிறாள். அதை செய்ய முடிந்ததா? பூஜா ஜெயித்தாளா? அல்லது ரெட்டியார் ஜெயித்தாரா? இல்லையேல் விதி ஜெயித்ததா? என்பதை சொல்வதுதான் `வாடகை வீடு' தொடரின் கதைப்பின்னணி. தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக தீபா வெங்கட், சந்தோஷி, திவ்யா, அப்ஸர், `ஹார்லிக்ஸ்' முரளி, டெல்லி கணேஷ், சிலோன் மனோகர், அடடே மனோகர், டைப்பிஸ்ட் கோபு, மானேஜர் சீனா நடிக்கிறார்கள். ஸ்ரீகாமாட்சி விஷன் சார்பாக ஸ்ரீராம் வேதம் தயாரிக்கிறார். தலைமை நிர்வாகத்தை வி.ஆர்.சந்திரசேகரனும், தயாரிப்பு வடிவமைப்பை பிரேம் சேகரும் கவனிக்க, படப்பிடிப்பு நிர்வாகம் `மதிஒளி'குமார். கதை -பாடல்கள்: வி.ராஜன். இசை: எஸ்.பி.வெங்கடேஷ். டைட்டில் பாடல்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஒளிப்பதிவு: சுரேஷ்; வசனம், திரைக்கதை, இயக்கம்: பாலமுருகன். ![]() |
| From: aanaa on Sun Feb 7 11:40:38 2010. | [Full View] |
| Quote: |
|
அன்பே வா விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் `அன்பே வா' தொடர், காதலை மட்டுமே மையமாகக் கொண்டது. கொலைகாரனை திருமணம் செய்து கொண்ட தேவி, ஜனாவின் உண்மையான காதலை புரிந்து கொண்டிருக்கிறாள். வேறொருவருடன் மணமான நிலையில் தான் காதலித்த ஜனாவை தேவியால் மறுமணம் செய்ய இயலுமா? தனக்கு விருப்பமான காதலியை ஆதி மணந்தாலும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நிலவி வந்த பிரச்சினைகள் தீருமா? இருவருக்குமிடையே முளைவிட்டுள்ள கருத்து வேறுபாடு முடிவடையுமா? சந்தியாவை திருமணம் செய்தாலும் பிரியாவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் ஜீவா இறுதியில் யாருடன் சேர உள்ளார்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு வரும் வாரங்களில் விடை கிடைக்கும். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு தொடரை காணலாம். |
| From: aanaa on Sun Feb 7 11:42:16 2010. | [Full View] |
| Quote: |
|
பொதிகை தொலைக்காட்சியில் வெள்ளிதோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குறுந்தொடர் `மூன்றாம் கண்.' பணம், பதவி, அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு, தன் அழகிற்கு சற்றும் பொருத்தம் இல்லாத ஒரு பெண்ணை மணந்து கொண்ட யோகேஷ், தற்போதைய தனது அந்தஸ்துக்கு ஏற்ற அழகிய நாகரீகப் பெண் செக்ரட்டரி அனிதாதான் என்று முடிவெடுக்கிறான். அவளை தனது மனைவியாக அடைய முயற்சிக்கிறான். `முதல் மனைவி தெய்வானையை விவாகரத்து செய்து விட்டு வரமுடியுமா?' என்ற கேள்வியை எழுப்பி அதிர வைக்கிறாள் அனிதா.ஏதோ ஒரு முடிவுடன் காலை 10 மணி முதல் 11 மணி வரை யோகேஷ் ஆபீசுக்குள்ளேயே இருப்பது போன்ற ஒரு அலிபியை உருவாக்கி விட்டு, ஒருவருக்கும் தெரியாமல் காரில் வீட்டிற்கு சென்று தனது மனைவியை கொலை செய்துவிட்டு திரும்பி விடுகிறான். ஆனால் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, போக்குவரத்து விதிகளை கண்காணித்த கேமரா என்ற `மூன்றாம் கண்' அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. கதாநாயகனாக ஹரிகுமாரும், கதாநாயகிகளாக லாவண்யாவும், ஸ்ருதியும் நடிக்கிறார்கள். திரைக்கதை, வசனம்: கஸ்தூரி ராஜேஷ், எபிசோட் டைரக்டர்: எஸ்.பி.ராஜாராம். கதை, இயக்கம்: எஸ்.சி.மவுலி. தயாரிப்பு: ஆஸ்டர் மீடியா சார்பில் கணேஷ். |
| From: aanaa on Sun Feb 7 11:44:13 2010. | [Full View] |
| Quote: |
|
நட்சத்திரங்களின் ஆலயமும் - ஓவியமும் `ஜீ' தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது, `நட்சத்திரங்களின் ஆலயமும் ஓவியமும்' நிகழ்ச்சி. பிரபல திரைப்பட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களின் குலதெய்வங்கள் இருக்கும் ஊர்களுக்குச் சென்று அந்த தெய்வங்களின் உருவங்களையும், கோவில்களையும் ஓவியங்களாக வரைகிறார் நடிகரும், ஓவியருமான `சின்னத்தம்பி' மார்த்தாண்டன். பிறகு அந்தந்த குல தெய்வங்களைப்பற்றி சம்பந்தப்பட்ட கலைஞர்கள் உணர்ச்சிபூர்வமாக அவரிடம் பேசுகிறார்கள். இவர் சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்தம்பி, ஒரு வீடு இரு வாசல், பாளையத்து அம்மன், வால்டர் வெற்றிவேல், பரட்டை என்கிற அழகுசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர். இப்போது பெரியதிரை, சின்னத்திரை இரண்டிலும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் நடிகை மனோரமா, பிரபு, எஸ்.வி.சேகர், கே.பாக்யராஜ், சார்லி, செந்தில் என்று பலரின் குலதெய்வங்களை நடிகர் மார்த்தாண்டன் வரைவதையும், அதுபற்றிய பிரபலங்களின் வியப்பையும் பதிவு செய்திருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கான எண்ணம், எழுத்து, ஓவியம், இயக்கம் அனைத்தும் நடிகர் மார்த்தாண்டன். இவர் மன்னார்குடியில் சிவாஜிகணேசன் கோவில் கட்டி வழிபட்ட பெரியாச்சி அம்மனையும் வரைந்திருக்கிறார். மும்பையில் பிரபலமான ஓவியர் சி.மோகன் என்பவரிடம் முறைப்படி சினிமா சம்பந்தப்பட்ட ஓவியங்களையும் மற்றும் ஓவிய நுணுக்கங்களையும் கற்று வந்தவர் மார்த்தாண்டன். சிவாஜி முதல் சிம்பு வரையில் அவர்கள் ஓவிய முகத்தை அவர்களிடம் கொடுத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தியவர் மார்த்தாண்டன். அந்த கலைப்பணியை இன்றும் செய்து வருகிறார். அந்த அடிப்படையில் அவர்களின் நட்பு கிடைத்தபோதுதான் இந்த குலதெய்வம் கான்செப்ட் இவருக்கு உதயமாகி தெய்வ ஓவியங்கள் வரைவது தொடர்கிறது. |
| From: aanaa on Sun Feb 7 11:45:45 2010. | [Full View] |
| Quote: |
| `அணு அளவும் பயமில்லை' சீசன்-3
விஜய் டி.வி.யில் இளம் பெண்கள் தங்களது மன தைரியத்தை நிரூபிக்கும் விதமாக அமைந்திருநëத சாகச நிகழ்ச்சியான `அணு அளவும் பயமில்லை' நிகழ்ச்சி, இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைக்க உள்ளது. ஏழு பெண்களின் தைரியத்தை சோதிக்கும் வகையில் பலவித பலப்பரீட்சை சாகசங்கள் இரண்டு சீசன்களிலும் இருந்தன. முதல் சீசனில் பூஜாவும், இரண்டாவது சீசனில் மகாலட்சுமியும் வெற்றியாளர்கள். இப்போது இதே சூட் டோடு சீசன்-3ம் துவங்க இருக்கிறது. மலைப்பிரதேசம் ஒன்றில் சென்று மலை ஏறுதல், மேடு பள்ளம் நிறைந்த பாதையில் காலை கீழே வைக்காமல் சைக்கிள் ஓட்டுதல், பாறை ஏறுதல் என ஜோடிகள் சேர்ந்து செய்கிற பல புதிய சாகச நிகழ்ச்சிகள் இந்த மூன்றாம் சீசனில் இடம் பெற உள்ளன. தொகுப்பாளர் கிரேக் தொகுத்து வழங்குகிறார். வரும் 12-ந் தேதி வெள்ளிக்கிழமையும், மறுநாளும் இந்த நிகழ்ச்சியை காணலாம் |
| From: aanaa on Sun Feb 7 11:48:42 2010. | [Full View] |
| Quote: |
|
சூடுபிடிக்கும் `விசாரணை' கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராஜேஷ்குமாரின் `விசாரணை' தொடர், டிவி நேயர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 10.30 மணிக்கு `விசாரணை' முடிந்ததும் அவருடைய செல்போனும், வீட்டு டெலிபோனும் நள்ளிரவு 12 மணி வரைக்கும் அலற ஆரம்பித்து விடுகிறது. கதையில் துப்பறியும் நிபுணராக வரும் விவேக்கும் அவருடைய மனைவி ரூபலாவும் கடந்த 25 வருடங்களாக வாசகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள். விவேக் - ரூபலா கற்பனை பாத்திரங்கள் என்பதை வாசகர்களில் பலர் ஒப்புக்கொள்வது இல்லை. அவர்களுக்கு ராஜேஷ்குமார் கற்பனையாக திருமணம் செய்து வைத்தபோது நூற்றுக்கணக்கான வாசகர்கள் மணியார்டர்கள் மூலமாக `மொய்' பணம் அனுப்பி வைத்தது ஹைலைட்டான விஷயம். தற்போது விசாரணை தொடரில் விவேக்காக `சாக்ஷி' சிவாவும், ரூபலாவாக சாந்தி ஷியாம் கணேஷும் நடித்து வருகிறார்கள். அதேபோல் விவேக்கின் உதவியாளராக விஷ்ணு பாத்திரத்தில் நடிப்பவர் ஷ்யாம். அவர் ஒரு ஜொள்ளு பார்ட்டியாக தோன்றி அமர்க்களம் செய்கிறார்.தொடரை இயக்கும் டைரக்டர் பிரபு ராஜேஷ்குமாரின் கதையை சிதைக்காமல் இயக்கி இருப்பது, ரசிகர்களின் கூடுதல் சந்தோஷம். தயாரிப்பு: விஜயகுமார், சுவிசாவ்லா. |