|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
KASTURI IN SUNTV
| Topic started by mokshani on Mon Nov 13 22:22:35 2006. | [Full View] |
| Quote: |
| Kasthuri- Title song |
| From: aanaa on Sun Feb 3 15:30:35 2008. | [Full View] |
| From: Devar Magan on Sun Feb 3 16:35:57 2008. | [Full View] |
| From: aanaa on Wed Feb 6 10:02:48 2008. | [Full View] |
| From: mokshani on Fri Feb 8 12:01:10 2008. | [Full View] |
| aanaa wrote: |
| Mokshani
waiting for your updates |
| From: aanaa on Fri Feb 8 15:07:27 2008. | [Full View] |
| From: aanaa on Sat Aug 16 15:28:13 2008. | [Full View] |
| Quote: |
|
மும்மொழி'யிலும் வரவேற்பு பெற்ற கஸ்தூரி ஒரு நல்ல படைப்பு மொழிகளைக் கடந்தும் ஜெயிக்கும் என்பதற்கு சமீபத்திய சின்னத்திரை உதாரணம், கஸ்தூரி தொடர். பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பான இந்த தொடர், தமிழில் சன் டி.வி.யில் 500 எபிசோடை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் 450 எபிசோடுகளை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கில் 800 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும், மலையாளத்திலும் இந்த தொடருக்குப் பெயர் `கல்யாணி' தமிழ் கஸ்தூரி தொடரில் நாயகியாக ஈஸ்வரிராவ் நடிக்கிறார். தெலுங்கில் இந்த கேரக்டரில் `மெட்டி ஒலி' காயத்ரி நடிக்கிறார். மலையாளத்தில் புதுமுக நடிகை நடிக்கிறார். கிராமத்துப் பெண்ணான கஸ்தூரி, நகரத்து இளைஞனுக்கு வாழ்க்கைப்படுகிறாள். அப்பாவி மனைவியை புறக்கணிக்கும் கணவன், அவளை உதாசீனப்படுத்துவதையே கொள்கையாக வைத்திருக்கிறான். அத்தனையையும் பொறுமையே வடிவாய் தாங்கிக் கொள்ளும் கஸ்தூரிக்கு அடுத்த கட்ட சோதனை வருகிறது. கஸ்தூரி இருக்கும் போதே வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக் கொள்கிறான் கணவன். பொறுமையின் சிகரம் கஸ்தூரி, கணவனால் தனது எதிர்காலம் சிதைக்கப்பட்டது தெரிந்ததும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறாள்? அடுத்துவரும் எபிசோடுகள் கஸ்தூரியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. இந்த தொடரின் வெற்றி குறித்து பாலாஜி டெலிபிலிம்சின் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் சந்திரமோகன் நாக் கூறியதாவது:- ``கஸ்தூரி தொடருக்கு வரவேற்பை நாங்கள் எதிர்பார்த்தது உண்மை, ஆனால் இந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை விழா எடுத்து விரைவில் கொண்டாட இருக்கிறோம். தொடர்ந்து புதிய சீரியல்கள், சினிமாக்கள் தயாரிப்பிலும் எங்கள் நிறுவனம் ஈடுபட இருக்கிறது. அதற்காக நடிப்பு ஆர்வம் கொண்ட புதியவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைக்கிற பட்சத்தில் புதுமுகங்கள் அதிகம் இடம் பெறும் தொடர்களும், சினிமாக்களும் உருவாகும்.'' |
| From: aanaa on Sat Nov 8 10:36:04 2008. | [Full View] |
| mokshani wrote: |
| hey guys! this is mokshani... got very busy, couldnt come on the hub. so, how r u all doing? whats new with "mayyam.com" ? Keep in touch guys... i will update kasturi soon, its getting interesting now..... |
| From: aanaa on Sat Nov 8 10:36:20 2008. | [Full View] |
| Quote: |
|
கஸ்தூரியில் முன்னணி நடிகை சன் டிவியில் கஸ்தூரி தொடர் 600 எபிசோடுகள் தாண்டியிருக்கிறது. சமீபத்தில் இந்த தொடருக்கான காட்சிகள் சிங்கப்பூரில் படம் பிடிக்கப்பட்டன. பகல் நேர தொடர்களில் முதன்முதலாக சிங்கப்பூரில் படமாக்கப் பட்ட தொடரும் இதுதான். வரும் வாரங்களில் இந்த சிங்கப்பூர் காட்சிகளை காணலாம். இந்த புதிய காட்சிகளில் இருந்து நடிகை நியா அறிமுகமாகிறார். தொடரில் சிமி என்ற கேரக்டரில் இவர் வருகிறார்.இவர் வருÛகையைத் தொடர்ந்து கதையின் போக்கிலும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மலையாளப் படஉலகில் முன்னணி நடிகையான நியா, தொடரில் நடிக்கவருவதும் இதுவே முதன்முறை. தொடருக்கு திரைக்கதை வசனம்: குரு சம்பத்குமார். ஒளிப்பதிவு: சரவணன். இயக்கம்: தவ.கார்த்திக். கிரியேட்டிவ் ஹெட்: சந்திரமோகன் நாக். |
| From: R.Latha on Mon Jan 5 3:27:44 2009. | [Full View] |
| From: aanaa on Tue Oct 13 12:27:57 2009. | [Full View] |
| Quote: |
|
கஸ்தூரி தொடரில் மீண்டும் `ஈஸ்வரி ராவ்' சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் கஸ்தூரி தொடர் 800-வது எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது. இதில் கஸ்தூரியாக நடித்த ஈஸ்வரிராவ், இடையில் சில காலம் நடிக்காமல் இருந்தார். இப்போது மீண்டும் கஸ்தூரியாக தன் நடிப்பைத் தொடர்கிறார். கதைப்படி கஸ்தூரியைக் கொல்ல திட்டமிடப்பட்ட சதியால் கஸ்தூரி தனது முகத்தை தொலைக்க நேர்ந்தது. முக மாற்றம் நேர்ந்த பிறகு கஸ்தூரி கேரக்டரில் ஈஸ்வரிராவுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க வேண்டியதாயிற்று.. இப்போது விதி கஸ்தூரி வாழ்வில் மீண்டும் விளையாட, இந்த விளையாட்டின் ஒரு நன்மையாக மருத்துவ வல்லுனர்களால் கஸ்தூரிக்கு அவளது முகமே மீண்டும் கிடைக்கிறது. `திரும்பக் கிடைத்த தனது முகத்தோடு பழைய பிரச்சினைகள் மீண்டும் துரத்த, கஸ்தூரியின் போராட்டம் தொடர்கிறது. ஒரு பக்கம் திரும்பக் கிடைத்த பழைய முகம், மறுபுறம் தன்னை மன்னித்து ஏற்கும்படி உருகி நிற்கும் முன்னாள் கணவன், இன்னொரு புறத்தில் தொலைந்துபோன இந்நாள் கணவன் என போராட்டங்கள் கஸ்தூரியின் வாழ்வில் தொடர்கிறது. "மீண்டும் ஈஸ்வரிராவே கஸ்தூரியாக வருவதால், உணர்வு ரீதியாக கஸ்தூரியுடன் தொடர்ந்து பயணப்பட்டு வரும் ரசிகர்கள் அவரது உணர்ச்சி பூர்வமான நடிப்பில் உருகி நிற்கப்போவது உறுதி!'' என்கிறார், பாலாஜி டெலிபிலிம்ஸின் தென்னிந்திய கிரியேட்டிவ் ஹெட் சுபாவெங்கட். கதை: ஏக்தா கபூர், திரைக்கதை: குருசம்பத், வசனம்: தவமணி வசீகரன், இயக்கம்: கே. ஷிவா. தயாரிப்பு: ஏக்தாகபூர், ஷோபாகபூர். |