|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
SUNTV
| Topic started by aanaa on Fri Sep 1 12:30:12 2006. | [Full View] |
| From: R.Latha on Mon Apr 6 4:22:20 2009. | [Full View] |
| From: aanaa on Mon Apr 13 13:26:07 2009. | [Full View] |
| Quote: |
| செந்தூரப்பூவே...
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``செந்தூரப்பூவே'' தொடர் 150 எபிசோடுகளைக் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. "பாசப்போராட்டத்திற்கு புதிய பரிமாணம் தரும் தொடர் இது. கதையின் நாயகியான புனிதா முதலாளி துரைராஜின் தொழில் ரீதியான தில்லுமுல்லுகளை அவரது பார்ட்னர் சூர்யாவிடம் தெரிவிக்கிறாள். இதனால் துரைராஜின் மாமியாரும் சூர்யாவின் அம்மாவுமான பொன்னம்மாளின் கோபத்திற்கு ஆளாகிறாள். இதையே காரணமாக வைத்து இனி வீட்டு சொந்தக்காரி பொன்னம்மாள் புனிதாவிற்கு என்னென்ன பிரச்சினைகளை ஏற்படுத்தப்போகிறாளோ என்பது ஒருபுறமிருக்க, சபலபுத்தியில் இருக்கும் துரைராஜிடம் இருந்து புனிதா எப்படி மீளப் போகிறாள் என்பது மறுபுறம். புதிதாக அறிமுகமாகியிருக்கும் தொழிலதிபர் கருணாகரன் குடும்பத்தைச் சுற்றியுள்ள பின்னணி என்ன? ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் வளர்மதிக்கு இன்னொரு சோதனை. கருணாகரனின் மகன் விவேக்கிற்கு பெண்பார்க்கும் படலம் அவளால் தடைபட்டுப் போகிறது. அதற்கு பரிகாரம் செய்ய வளர்மதி நினைக்கிறாள். அது அவளுக்கு வெற்றியாய் அமைகிறதா? அல்லது அதுவே அவளுக்கு பெரும் பாதகமாய் அமையப்போகிறதா?இதற்கிடையில் ஈஸ்வரியின் அரசியல் பிரவேச வெற்றிக்கு பிறகு தாதா தீனதயாளன் அவளை எதிர்கொள்ள முடியாமல் தன்னிடம் வேலைக்காரனாக இருந்த அவளது தம்பிக்கு தன் மகளை மணமுடித்து வைக்கப்போகிறானா? அல்லது ஈஸ்வரியின் சதித்திட்டங்களை முறியடிக்கப்போகிறானா? யதார்த்தமான கதையமைப்பு, இயல்பான கதாபாத்திரங்கள், விறுவிறுப்பான காட்சிப்படுத்தல் இவையே தொடரின் சுவாரஸ்யத்திற்கு காரணம்'' என்கிறார் ராடன் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் ஹெட் ஆப் கிரியேட்டிவ்சுமான ராதிகா சரத்குமார். திரைக்கதை: முத்துச்செல்வம். வசனம்: வசுபாரதி. இயக்கம்: சக்தி பரமேஸ்வர். |
| From: R.Latha on Mon May 4 6:13:52 2009. | [Full View] |
| From: aanaa on Sun May 17 8:33:07 2009. | [Full View] |
| Quote: |
|
ஆவியை துரத்தப்போய்... சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடரில் சமீபத்தில் போலி சாமியார்பற்றிய காட்சி ஒளிபரப்பானது. அதில் செத்துப்போன விஜியின் ஆவி இருப்பதாக பயந்த வீட்டுக்காரர்கள் ஆவியை துரத்த மந்திரவாதி ஒருவரை அழைத்து வருகிறார்கள். வந்தவர் போலி ஆசாமி என்பது தெரியாமல் "ஆவியை என்ன பரிகாரம் செய்தால் விரட்டலாம்?''என்று கேட்கிறார்கள். அவரோ தனது வீட்டுக்குத் தேவையான அந்த மாத மளிகை ஜாமான்களை வாங்கிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார். ரசிகர்களிடம் பெருவாரியான வரவேற்பைப்பெற்ற இந்த காட்சி நல்லதொரு விழிப்புணர்வு பிரசாரமாகவும் அமைந்தது. இதுபற்றி தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தனிடம் கேட்டால், "மக்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பி விடுகிறார்கள். ஆவிகள் விஷயத்தில் இன்னும் நம்பி ஏமாந்து போகிறார்கள். இல்லாத ஆவியை இருப்பதாக நம்பும் மக்கள்இருப்பதுதான் தொடர்ந்து ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. தொடரை பார்த்த பிறகாவது இதுமாதிரியானவர்கள் திருந்தினால் சரி'' என்கிறார். |
| From: aanaa on Sun Jun 21 17:34:53 2009. | [Full View] |
| Quote: |
| 200TH EPISODE OF SENTHURAPOOVAE
It is the story of love between four sisters. Punitha comes to city and she gets Rathnavel’s support and she stays in Ponnatha’s house. Punitha always expects good things to happen in her life but Ponnatha’s son-in-law Durai Raj madly falls in love with Punitha. Surya who comes from Singapore comes to know through Punitha about Durairaj swindling money from the business runs by Surya. In the meanwhile Surya decides to marry Punitha. On coming to know the decision of Suseela decides to commit suicide because she loves him. On knowing this, Punitha takes a vow to stay in a temple till the problems are settled down.The story goes around whether Punitha and Surya unites together. The Story and direction are done by Sakthi Manohar. The serial is being telecast on all Mondays to Fridays at 1.30 PM through Sun TV Channel. http://1.bp.blogspot.com/_zxFZ5P8Mv-E/Sjm2gk1n3iI/AAAAAAAADAQ/iCt-smuwjh0/s1600-h/senthoorapoove.jpg |
| From: aanaa on Sun Jul 5 8:34:50 2009. | [Full View] |
| From: R.Latha on Wed Oct 21 5:36:56 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Nov 2 3:13:56 2009. | [Full View] |
| From: R.Latha on Mon Nov 2 3:16:38 2009. | [Full View] |
| From: R.Latha on Wed Nov 11 3:48:15 2009. | [Full View] |