Nanbargale.. summa nam oruthar ezhudha matravar vimarsippadhai vida koncham pottiya ezhuthina nalla irukkumnu thonudhu.. Adhavadhu .. oruthar padal aarambithu adhai mudikkum varthai allaldhu mudippavar tharum vartha kondu matravar kavidhai thodanga vendum. ( Same like pattukku pattu.. But here you have to use your own poems not some one else). Ithu ellorudaya thirmayai valarkum adhe samayam arokyamana potty nilavuvadhal arumayyana pala kavidhagal kidaikkum enna sollgireergal??
Kavidhai edhai patri vendumanalum irukkalam
Idho naan thodangi vaikkiren..
Moola kanaldiyo moondezhundha velaiyile
kaama punaladhinal moolamadhu azhiyudhu par
Moola kanlezhuppi munne unai niruthi
kmamam azhithidave kannama vazhiyondrum ariyane
------
Thodanga vendiya varthai aridhal ( arivu, aryamai eny thing relates to that)
Let us try have great fun
Hope you also enjoy this .. Muyarchi seyyungalen
Anbudan Iya
| RSS Feed
| Email me when a reply is posted
Responses:
- Full Thread
-
பாத்துக்க நல்லா ஒரு தரம்
நிச்சயம் நாளை காட்சி மாறும்
சாட்டையில்லாத இந்த பம்பரம்
சுழலும் வேகம் ரொம்ப அதிகம்
-
அதிகம் இந்த புரட்சி
பெண்ணை புரட்டும் கட்சி
பெறாதே என்னும் உத்தி
எங்கே போச்சு புத்தி
வரமெது புரியாத மூடகம்
விலங்கென்று சொல்லுது ஊடகம்
விடுதலை இதுவா யோசித்துப்பார்
படுகுழியில் விழாது விழித்துக்கொள்
-
விழித்தே விடிந்த இரவுகள்
அழுது வற்றிய விழிகள்
களவும் கொலையும்
திருட்டும் புரட்டும் தாண்டி
வேரொர் முகம் தாங்கி
வேரோடு உயிர் உருவும் விஷமிகள்.
தனியோரு நம்பிக்கையை தீவிரமாய் ஆதரிப்பவன்.
அவன் ஒரு தீவிரவாதி.
மனித நேயம் மறுக்கும் இவற்றை
தீவிரமாய் வெறுப்பவன்
நானும் ஒரு தீவிரவாதி.
-
தீவிரவாதியானேன் எப்படி
சொல்லடி என் இதயத் திருடி
குழந்தையை தூக்கி கொஞ்சாதே
குமரன்களுடன் சிரித்து பேசாதே
கிழவனுக்கும் கை குடுக்காதே
என்னை மட்டும் நேராய் பாரடி
எனக்கு மட்டும் நீயென கூறடி
காற்று உன் குழல் தொடுவதேனடி
சூரியன் உனை தழுவலாமோடி
சிறை வைக்க மன துடிக்குதடி
உன் செல்ல நாயுமென் எதிரியடி
ஆவியாய் உனை மாற்றுவேனடி
என் ஆவிக்குள் உனை வைப்பேனடி
எனை வாட்டுவதேனடி இப்படி
-
இப்படித் தான் ஆரம்பித்தது
தயங்கித் தலையசைத்து
வியர்த்து முகம் வெளறி
கெட்டிமேளம் முழங்கிய பின்னும்
தவித்து தடுமாறி
அழுது இடம்மாறி
வருடங்கள் ஓடியும் யோசிக்கிறேன்.
எப்படி சாத்தியம்?
உனக்குள் நான்!
ஏன் மாறினேன் ?
உன்னவளாய் நான்
இப்படித் தான் ஆரம்பித்தது...
-
ஆரம்பித்தது பெரும் பாரதப் போர்
மைத்துனனை எள்ளி அன்று பாஞ்சாலி
உதிர்த்த ஒரு சிறு சிரிப்பு விதையிலே
மண்ணை முட்டி முளைத்த ஆலமரம்
கூனி முதுகில் மண்ணுருண்டை அடித்து
வில் விளையாடிய சிறுவன் ராமனின்
விதி விளையாடியது வாழ்வு முழுக்க
துன்பம் துயரம் போர் பிரிவெனவே
காவியம் அனைத்தும் கண்ணாடி
இல்லங்களிலெல்லாம் கண் முன்னாடி
விளைவறியாதுதிர்த்த ஒரு பொறி
பற்றியெரியுமே ஒரு ரோமாபுரி
-
ரோமாபுரியே தீக்குளிக்கும் போது
உணர்வின்றி ஒருவன் இசையின் மடியில்.
சுற்றிலும் இயக்கம் அத்தனையும்
பிறழாது சுழலினும்,
என்னுள் கட்டிய ரோமாபுரி
திகுதிகுவென பற்றி எரிகிறது.
நானும்...
அசைவின்றி செயலின்றி இலக்கின்றி
உணர்வும் அற்று இசையின் மடியில்.
-
மடியில் பூனையை கட்டிக்கொண்டு சகுனம் பார்க்கவோ
கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியவோ
ஒரு விரலை சுட்ட மூன்று விரல் எனை சுட்டுதே
வீட்டில் உலகம் இருக்குது உன்னில் மானிடம் அடங்குது
வீட்டின் சுத்தம் மனதின் வெளிச்சம் போதும்
சகுனம் பாராது சத்தமிலாது நடக்கும் நல்லது
-
நல்லதா இல்லையா என்ற பட்டிமன்றத்தில் இஷ்டமில்லை.
பூக்களும் அர்த்தமற்ற அட்டைகளும் அலுத்தே விட்டது
நொடிப்பொழுதும் என்னுள் காதலாய் முகிழ்த்திருக்கும் உனக்கு
ஒற்றை நாளுக்கென்று என்ன கவிதை புனைவது?
-
புனைவது பொய்யென்று உனக்கும் எனக்கும் தெரியும்
பொழுதை இனிதாக்கும் நல்ல துவக்கங்கள்
பொழுதுக்கும் நினைத்திருக்கும் மயக்கங்கள்
இளமையோடு முடிந்துபோகாத பழக்கங்கள்
இடைவெளியை குறைக்கும் பழைய தந்திரங்கள்
பாராட்டில் பார் மகிழ்ந்து கொண்டாடுது பாருங்கள்
| RSS Feed
| Email me when a reply is posted
Want to post a response?
(Hello Guest, you need to
Login
to post a response. Are you a New User?
Register
first.)
Back
to Poems / kavidhaigaL forum