திருப்பங்களுடன் `செல்லமே'
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``செல்லமே'' தொடர், திருப்பங்களுடன் கூடிய காட்சிகளுடன் தொடர்கிறது.
செல்லம்மாவாக மென்மையான குடும்ப பாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ராதிகா கதாபாத்திரம், வரும் வாரங்களில் மிகப்பெரிய மனமாற்றத்துடன் தன் மீது பாயும் கணைகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் புரட்சிப்பெண் பாத்திரமாக மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது.``செல்லம்மாவின் தம்பி மணியரசுக்கு வேறு ஒரு பெண்ணான கவிதாவை (மகாலட்சுமி) திருமணம் செய்ய முடிகிறது. ஆனால் மணியரசுவை வெறித்தனமாக காதலிக்கும் அமுதாவோ (நீலிமாராணி) மணியரசைத் தனக்கே மணமுடித்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அவளுக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதரவு செல்லம்மா தான்! ஆனால் செல்லம்மா கணவர் வடமலையோ, இத்திருமணத்தை எதிர்க்கிறார். இந்த நிலையில் இரு இளம் பெண்களில் மணியரசு யாருக்கு மாலை சூட்டி மணம் முடிக்கப் போகிறான்? உண்மையில் செல்லம்மாவின் ஆதரவு யாருக்கு? என்பது கதை ஓட்டத்தில் அடுத்து வரும் மிகப்பெரிய திருப்பமாக இருக்கும்'' என்கிறார் ராடன் டிவியின் கிரியேட்டிவ் ஹெட்டான ராதிகா சரத்குமார்.
50-வது எபிசோடை கடந்து தொடரும் இந்த தொடரில் டெல்லிகணேஷ், எம்.ஆர்.ராதாரவி, ரவிக்குமார், வாசுவிக்ரம், சாக்சிசிவா, ஜார்ஜ், விச்சு, அஸ்வின், மாளவிகா, கிருத்திகா, சினேகா நம்பியார், சோனியா, வந்தனா, லதாராவ், சுபாஷினி நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு: ரமேஷ் அழகிரி. பின்னணி இசை: கிரண். இயக்கம்: ஜவஹர். தயாரிப்பு ராடன் நிறுவனம்.
|