|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Mega TV
| Topic started by R.Latha on Mon Mar 23 3:08:28 2009. | [Full View] |
| From: R.Latha on Tue May 12 2:43:02 2009. | [Full View] |
| From: Shakthiprabha. on Tue May 12 2:51:21 2009. | [Full View] |
| From: aanaa on Fri May 15 17:11:27 2009. | [Full View] |
| Quote: |
|
மெகா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "சிரிப்போம் சிந்திப்போம்' நகைச்சுவை நிகழ்ச்சி, நேயர்களின் ஆதரவோடு 475 எபிúஸôடுகளைக் கடந்துள்ளது. இதில் பலர் அறியாத பல அரிய தகவல்கள் நகைச்சுவையுடன் வழங்கப்படுகின்றன. திரைப்படங்களில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் அந்தக் காட்சிகளோடு தொடர்புடைய புதிய தகவல்களைத் தருவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் அனுமோகன் சிறப்பாகத் தொகுத்து வழங்குகிறார். |
| From: aanaa on Sun May 17 8:36:42 2009. | [Full View] |
| Quote: |
|
மெல்லிசை அனுபவங்கள் தமிழ் சினிமாவில் நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே பகிர்ந்து கொள்கிறார். மெகா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும், சனி இரவு 8 மணிக்கும் "என்றும் எம்.எஸ்.வி'' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி. |
| From: aanaa on Sun May 17 8:38:39 2009. | [Full View] |
| Quote: |
| மெல்லிசை அனுபவங்கள்
தமிழ் சினிமாவில் நடிப்பிலும், பாட்டிலும், இசையிலும் சகலகலா வல்லவராக திகழ்ந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் அந்த காலத்தில் தாம் இசையமைத்த திரைப்படங்கள் உருவான விதம், பாடல்கள் உருவான விதம், அதற்கான கால சூழ்நிலைகள், சம்பவங்கள் குறித்து தமது இசை அனுபவங்களை மெகா தொலைக்காட்சி நேயர்களிடையே பகிர்ந்து கொள்கிறார். மெகா டிவியில் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும், சனி இரவு 8 மணிக்கும் "என்றும் எம்.எஸ்.வி'' என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது, இந்த நிகழ்ச்சி. |
| From: aanaa on Fri May 22 20:51:05 2009. | [Full View] |
| Quote: |
|
புதிய கோணங்கிகள் புதுக்கோட்டை பூபாளம் கலைக்குழுவினர் வழங்கும் மக்கள் தொலைக்காட்சியின் `புதிய கோணங்கிகள்' நிகழ்ச்சி தனித்துவம் வாய்ந்தது. கலைவாணரின் வழியில், பட்டுக்கோட்டையின் வழியில் உரத்த சிந்தனைகளை நையாண்டி கலந்து சுவைபட கூறுவது நிகழ்ச்சியின் சிறப்பு. இக்குழுவினரின் நடுவே பிரகதீசுவரன் மற்றும் செந்தில் ஆகிய இரண்டு கலைஞர்கள் தரும் கருத்துச் செறிவுள்ள உரையாடல்கள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறது. ஆடல், பாடல், நையாண்டி என கலந்து கட்டும் இந்த நிகழ்ச்சியை நாளை காலை 8.30 மணிக்கு மக்கள் டிவியில் காணலாம். |
| From: aanaa on Fri May 22 20:51:58 2009. | [Full View] |
| Quote: |
|
புதுப்பொலிவுடன் `சரிகம' மெகா டிவியில் ஒளிபரப்பாகி வரும் `சரி கம' இசை நிகழ்ச்சி, கர்நாடக இசைக்கும், திரை இசைக்கும் இசைப்பாலம் அமைக்கும் முயற்சி. ஒருபுறம் கர்நாடக இசைப்பாடல்கள், மறுபடியும் அதற்கு நிகரான திரை இசைப்பாடல்கள் என கர்நாடக சங்கீதமும், திரை இசைப்பாடல்களும் பின்னிப்பிணைந்து உறவு கொண்டாடுவதை உணர்த்தும் இந்த இசை நிகழ்ச்சி, தற்பொழுது புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது. ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் இந்த இசை நிகழ்ச்சியை காணலாம். |
| From: aanaa on Fri May 22 20:55:40 2009. | [Full View] |
| Quote: |
|
சிரிப்போம் சிந்திப்போம் தினமும் இரவு 10 மணிக்கு மெகா டிவியில் ஒளிபரப்பாகும் `சிரிப்போம் சிந்திப்போம்' நிகழ்ச்சி 475-வது பகுதியை கடந்து தொடர்கிறது. நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் ஒவ்வொரு நகைச்சுவை காட்சிகளுடன் நாம் அறிந்தும் அறிந்திடாத ஆச்சரியமூட்டும் அரிய பல தகவல்களையும் தருகிறார்கள். நகைச்சுவை நடிகர் அனுமோகன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். |
| From: aanaa on Sat Jul 25 10:34:00 2009. | [Full View] |
| Quote: |
|
அமுதகானம் மெகா டிவியில் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த தேனிசைப் பாடல்கள் `அமுதகானம்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி 600 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாடலினூடே ஒரு கருத்தினை மையப்படுத்தி அந்த கருத்தோடு தொடர்புடைய சுவையான சம்பவங்களை சுவாரசியமாக தமிழ் நயத்துடன் எடுத்துரைக்கிறார். திரைப்பட இயக்குநர் ஆதவன். தினமும் காலை 8 மணிக்கும், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி இது. |
| From: aanaa on Sat Aug 1 12:05:17 2009. | [Full View] |
| Quote: |
| சந்திப்போமா...
ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு மெகா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `சந்திப்போமா' நிகழ்ச்சி 85-வது வாரத்தினை எட்டியுள்ளது. பல்வேறு துறைகளில் புகழ்பெற்றவர்கள் தங்கள் வாழ்வில் சாதிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றியும், சந்திக்க நேரிட்ட தோல்விகள் பற்றியும், பசுமையான நிகழ்வுகள் பற்றியும் பேசுகிறார்கள். இதுவரை வெளி வராத பல தகவல்களையும் இந்த நிகழ்ச்சியில் படம் பிடித்து காட்டுகிறார்கள்.அதோடு நேயர்கள் அறிந்தும் அறிந்திடாத பல அற்புத விசயங்களையும் நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.சின்னத்திரை நடிகை ஐஸ்வர்யா தொகுத்து வழங்குகிறார். |