|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Kaverree Maangal - Jaya tv - Mon to Fri 8:30pm
| Topic started by ridz on Fri Feb 27 4:52:36 2009. | [Full View] |
| Quote: |
| Kaaveri Maankal - Title song |
| From: ridz on Sat Mar 14 3:56:28 2009. | [Full View] |
| From: ridz on Sat Mar 14 3:57:11 2009. | [Full View] |
| From: ridz on Sat Mar 14 3:57:41 2009. | [Full View] |
| From: ridz on Sat Mar 14 3:58:16 2009. | [Full View] |
| From: ridz on Sat Mar 14 4:00:12 2009. | [Full View] |
| From: aanaa on Sat Mar 14 9:29:54 2009. | [Full View] |
| From: aanaa on Sat Mar 14 9:45:16 2009. | [Full View] |
| Quote: |
|
மண்டேலாவைக் கவர்ந்த "கவரி மான்கள் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் "கவரிமான்கள்' மெகா தொடர், நேயர்களின் ஆதரவோடு 50-வது எபிúஸôடைக் கடந்துள்ளது. சித்தாரா, பிர்லாபோஸ், நிர்மல், உமா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் தொடரைத் தயாரித்து இயக்குபவர் பிரபு நேபால். குடும்பத்தில் பெண்களின் முக்கியப் பங்கு, அவர்களுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை சென்டிமெண்ட் கலந்து சுவாரஸ்யமாகக் கூறுகிறது இந்தத் தொடர். தென் ஆப்பிரிக்காவைப் பூர்விகமாகக் கொண்ட இயக்குநர் நேபால் "கவரி மான்கள்' தொடரை ஆங்கில சப் டைட்டிலோடு தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு கடந்த மாதம் திரையிட்டுக் காண்பித்தார். தொடரால் வெகுவாகக் கவரப்பட்ட மண்டேலா ஒட்டுமொத்த யூனிட்டையும் பார்க்க விரும்புவதாக பிரபு நேபாலிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து ஒட்டுமொத்தக் குழுவும் கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ளது. தற்போது அங்கு "கவரி மான்கள்' தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நெல்சன் மண்டேலா விருந்தளித்து கெüரவிக்கவுள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. "கவரி மான்கள்' தொடரின் 100-வது எபிúஸôடு ஒளிபரப்பாகும் நாளில் சென்னை அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்துக் குழுந்தைகளுக்கும் தங்க மோதிரங்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. |
| From: ridz on Mon Mar 16 6:02:41 2009. | [Full View] |
| From: aanaa on Fri Apr 24 19:59:51 2009. | [Full View] |
| Quote: |
| கவரி மான்கள்
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் `கவரி மான்கள்' தொடர் 100-வது எபிசோடை தாண்டியிருக்கிறது. தொடர் இனி எப்படிப்போகும்? இயக்குனர் பிரபுநேபாலைக் கேட்டால்... "வெங்கடேஷின் பாசமான குடும்பத்தில் உறவுகள் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த நேரத்தில் விஜி தான் மருமகளாக வரவேண்டுமென சாரதா பிடிவாதம் பிடிக்கிறாள். மாதவியை சந்தியா அருணுக்கு மனைவியாக்க நினைக்க, சாரதா இதை எதிர்க்க, விளைவு மாமியார்-மருமகள் மோதலில் முடிகிறது. முத்துப்பாண்டி விரித்த சதி வலையில் விழுந்த விஜி, அவர் மகன் விக்ரமனால் கெடுக்கப்படுகிறாள். இதனால் தன் தங்கையாக இருந்தாலும், பிள்ளைபோல் கருதும் மச்சினன் அருணுக்கு விஜி வேண்டாம் என்று சந்தியா சொல்ல, குடும்பத்தில் பிளவு தொடங்குகிறது. மறுபடியும் மாதவியே அருணுக்கு மனைவியாகட்டும் என்ற பேச்சு வர, விவேக் - காயத்ரி, மாதவியிடம் போய் பேசுகிறார்கள். சந்தியாவை வெறுக்கும் மாதவி இதை மறுப்பாளா? இல்லை பழி உணர்ச்சியில் ஏற்றுக்கொள்வாளா? மாதவி மருமகளாக வந்தால் சாரதாவால் ஜீரணிக்க முடியுமா? சாரதா - சந்தியா மோதல் என்னவாகும்? விஜியை கெடுத்துவிட்டு, அவளைக்காப்பாற்றி நாடகமாடும் முத்துப்பாண்டியின் மகன் விக்ரமின் அடுத்தகட்ட நாடகம் என்ன? முற்றிலும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்களை, முடிச்சுகளை, உணர்வுகளை சித்தரிக்கும் மாறுபட்ட தொடர் இது'' என்கிறார், தொடரை இயக்கும் பிரபுநேபால். நடிகர்கள்: சித்தாரா, உமா, நிர்மல், பிர்லா, ராஜா, சுஹாசினி, வினோத்ராஜ். திரைக்கதை: தேவிபாலா. தயாரிப்பு - இயக்கம் -பிரபுநேபால். |
| From: aanaa on Sat Jun 27 9:04:21 2009. | [Full View] |
| Quote: |
| இருமுனை தாக்குலில் சந்தியா
ஜெயா டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் கவரிமான்கள் தொடர் 150-வது எபிசோடை எட்டவிருக்கிறது. சாரதாம்மாள் குடும்பத்தில் மூத்த மருமகள் சந்தியா வந்த பிறகு அவள் வைத்தது தான் சட்டம். ஆனால் இது அதிகார சட்டமல்ல. அன்புச்சட்டம். தன் அன்பாலும் பொறுமையாலும் குடும்பத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்களையும் தன் வசப்படுத்தி விடும் சந்தியாவை அவள் மாமியார் சாரதாவுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது. இதனால் இளைய மகன் அருணுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தபோது சந்தியாவின் தங்கைதான் தன் மருமகளாக வர வேண்டும் என்று விரும்புகிறாள். சாரதாவின் உறவினர் முத்துப்பாண்டிக்கு இது பிடிக்கவில்லை. விஜியும் அந்த வீட்டு மருமகளாகிவிட்டால் சந்தியாவின் செல்வாக்கும் கூடிவிடும் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தன் மூத்த மகனை விட்டு விஜியை கெடுக்கச் செய்கிறார். கொடுமையிலும் கொடுமையான இந்த சம்பவம் சந்தியாவின் மாமியார் சாரதாவுக்கு தெரியவருகிறது. அவள் மருமகள்சந்தியாவிடம், "நடந்தது ஒரு விபத்து மாதிரி இருந்து விட்டுப் போகட்டும். இப்போதும் உன் தங்கை விஜி என் இளைய மருமகளாக வரத் தடையேதும் இல்லை'' என்கிறாள். ஆனால் சந்தியாவோ "எனக்கு ஒரு தம்பி இருந்து இப்படி கெட்டுப் போன பெண் என்று தெரிந்தால் திருமணம் செய்து வைப்பேனா? என் தங்கை இனி இந்த வீட்டு மருமகளாக வரத் தகுதியில்லாதவளாகி விட்டாள்'' என்கிறாள். இதனால் மாமியாருக்கு கோபம். சந்தியாவிடம் சண்டை போடுகிறாள். சந்தியாவோ "ஏற்கனவே உங்கள் மூன்றாவது மகனுக்கு பேசி வைத்து அப்புறமாய் திருமணக் கனவுடன் நின்றுபோன மாதவியை உங்கள் இளைய மகனுக்கு பேசி முடிப்போம்'' என்கிறாள். ஆனால் மாமியார் சாரதா விடுவதாக இல்லை. "மாதவி என் மருமகளாக வரக்கூடாது. யார் தடுத்தாலும் விஜி தான் என் மருமகள்'' என்று சொல்லி விடுகிறாள். சந்தியாவுக்குத்தான் தர்மசங்கடம். தன்தங்கை விஜி தங்கள் குடும்பத்துக்கு மருமகளாக வரக்கூடாது என்று முடிவு செய்திருந்த அவள், ஏற்கனவே மாதவியை சந்தித்து தன் இளைய கொழுந்தனை மணந்து கொள்ள கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது அவளே போய் தன் மாமியாருக்கு பிடிக்கவில்லை என்று கூற வேண்டிய கட்டாயம். மாதவி இதை எதிர்பார்க்கவில்லை. மகள் மாதவிக்கு ஏற்கனவே அந்தக் குடும்பத்தில் சம்பந்தம்பேசி நின்று போயிருந்ததால் கவலையில் இருந்த மாதவியின்அம்மா, இப்போது மறு படியும் மகள் திருமணம் கேள்விக்குறியானதில் மாரடைப்பு வந்து உயிரிழக்கிறாள். இதனால் மாதவியின் கோபம் சந்தியாமீது திரும்புகிறது. இப்போது சந்தியா-மாதவிக்குள்ளான போராட்டம் ஆரம்பமாகிறது. இதற்கிடையே முத்துப்பாண்டியும் சந்தியாவை மாமியார் சாரதாவிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்க காய் நகர்த்துகிறார். இந்த இருமுனை தாக்குதலில் இருந்து சந்தியாவால் மீள முடிந்ததா? கேள்விக்கு பதில்அடுத்தடுத்த திருப்புமுனைக்காட்சிகள்'' என்கிறார், தொடரின்இயக்குனர் பிரபு நேபால். தொடரில் சந்தியாவாக நடிப்பவர் நடிகை சித்தாரா. |