|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
TV tid bits
| Topic started by aanaa on Fri Aug 15 23:38:25 2008. | [Full View] |
| Quote: |
|
அவர் வேறு யாருமில்லை. விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்தான். அவர் தமிழராகவும் இருக்கலாம். ஆண், பெண் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். இது தான் யார் அவர் நிகழ்ச்சி. மக்கள் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு நேரலை நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. நேயர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தொகுப்பாளரிடம் கேள்விகள் கேட்கலாம். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவரா? உயிருடன் இருக்கிறாரா? இப்படி ஆம், இல்லை என்று பதில் வரக் கூடிய 15 கேள்விகள் மட்டும் தான் தொகுப்பாளரிடம் கேட்கலாம். அதற்குள் போட்டியாளர் சரியான பதிலைக் கண்டு பிடித்து தொகுப்பாளரிடம் சொன்னால் பரிசு. இந்த நிகழ்ச்சியை சொல்விளையாட்டு கார்த்திகா தொகுத்து வழங்குகிறார். |
| From: aanaa on Mon Nov 2 18:07:34 2009. | [Full View] |
| From: R.Latha on Wed Nov 11 3:51:03 2009. | [Full View] |
| From: aanaa on Wed Nov 11 20:07:27 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:16:01 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:17:04 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:22:06 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:22:38 2009. | [Full View] |
| From: aanaa on Thu Nov 19 21:23:27 2009. | [Full View] |
| From: aanaa on Sat Nov 21 14:28:10 2009. | [Full View] |
| Quote: |
|
செல்போன்... 150 ரூபாய்... சீரியல்களில் இப்போதெல்லாம் கதையை விடவும் சீரியசான விஷயம் செல்போன்கள். டைரக்டர் காட்சியை விவரித்து நடிகை நடிக்கத் தயாராகிவிடுவார். டைரக்டர் `ரோல்' என்று குரல் கொடுக்கும் நேரத்தில் சரியாக நடிகையின் கையில் உள்ள செல்போன் குரல் கொடுக்கும். உடனே நடிக்கும் மூடில் இருந்து மாறுபடும் நடிகை, டைரக்டரிடம் `ஒரு நிமிஷம் சார்' என்று சொல்லி விட்டு சற்றுத் தள்ளிச் சென்று பேசுவார். பேசுவார்..பேசிக்கொண்டேயிருப்பார். நடிகை இப்படி பேசிக்கொண்டிருப்பதில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டுமே... அதற்காக இரண்டு உதவி இயக்குனர்கள் நடிŰகையின் பார்வையில் படுகிறமாதிரி நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் நடிகை அவர்களை கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ள மாட்டார். `தானுண்டு தன் செல்லுண்டு' என்று பேசுவதை தொடர்ந்து கொண்டிருப்பார். நடிகை ஒருவழியாக பேசிமுடித்து ஷாட்டுக்கு வரும்நேரத்தில் நடிகையுடன் அந்தக்காட்சியில் நடிக்கவேண்டியவர்கள் மட்டுமின்றி இயக்குனரும் சோர்ந்து போய் விடுவார். நடிகைகள் என்றில்லை., சிலநடிகர்களும் செட்டுகளில் இயக்குனருக்கு `செல்போன் டென்ஷன்' கொடுத்தபடி இருக்கிறார்கள். இதை முதன்முதலில் சரி செய்த பெருமைக்குரியவர் நடிகை குஷ்பு. அவர் தயாரித்து நடித்த தொடர்களில் யாராவது படப்பிடிப்பு நேரத்தில் செல்லில் பேசினால் உடனடியாக 150 ரூபாய் அங்கேயே வசூலிக்கப்படும். இதனால் குஷ்புவின் செட்டில் செல்போன் சத்தத்தையே கேட்கமுடியாத நிலை ஏற்பட்டது நிஜம். தயாரிப்பாளர் `சத்யஜோதி' தியாகராஜன் தயாரிக்கும் தொடர்களின் படப்பிடிப்பு செட்களிலும் செல் ஒலி கேட்பதில்லை. இயக்குனரே படப்பிடிப்புக்கு வந்ததும் முதல்வேலையாய் செல்லை அணைத்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகி விடுகிறார். தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக குஷ்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபல தயாரிப்பாளர்களின் குமுறலும் இந்த செல்போன் தொல்லை பற்றியது தான். இதற்கு பதிலளித்த குஷ்பு தனது தொடர்கள் நடக்கும் செட்களில் செல்போன் பேசுவோருக்கு பைன் போட்ட கதையை விலாவாரியாக விவரித்தார். ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதே ரூட்டில் போனால் `செல்போன் தொல்லை செட்டுக்குள் இல்லை' என்ற நிலை வந்துவிடும் என்று தலைவர் குஷ்பு சொன்னபோது தயாரிப்பாளர்களிடம் இருந்து எழுந்தது பலத்த கரகோஷம். |
| From: aanaa on Sat Nov 21 14:35:51 2009. | [Full View] |
| Quote: |
|
. நடிகர்-நடிகை தேர்வில் மோசடி சிறந்த நடிகை விருதை திருப்பி அனுப்பினார் நடிகை ராதிகா சென்னை, நவ.19- சிறந்த டி.வி. நடிகர்-நடிகைகள் தேர்வில் மோசடி நடந்து இருப்பதாக கூறி, தனக்கு வழங்கப்பட்ட விருதை நடிகை ராதிகா திருப்பி அனுப்பினார். சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சீரியலில் சிறந்த நடிகர்- நடிகை மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் அரசி சீரியலில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை ராதிகாவுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கப்பட்ட பின்னணியில் இருந்த அணுகுமுறை தனக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்று கருதிய ராதிகா, அந்த விருதை சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கே திருப்பி அனுப்பி விட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மனதை பாதித்த விருது கடந்த 14-ந் தேதி மாலை சென்னை காமராஜர் அரங்கில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு (பெஸ்ட்) சார்பில் நடந்த விருதுகள் வழங்கும் விழாவில் பல சங்கடமான நிகழ்வுகள் நடந்தேறின. அது சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் மனதையும் பெரிதும் பாதித்துள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், கதை, வசனகர்த்தா வரிசையில் பல திறமைசாலிகளின் பெயர்கள் பரிசீலிக்கப்படவே இல்லை. என்ன காரணத்துக்காக அவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டன என்பதும் தெரியவில்லை. தகுதியும் திறமையும் படைத்த யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் விழாவிற்கு வரவழைப்பதற்காகவே பலரையும் அழைத்து, அதை படம் பிடித்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் காட்ட முனைவது தவறான முன்னுதாரணமாகவே அமையும். திருப்பி அனுப்புகிறேன் எனவே, தகுதி, திறமையின் அடிப்படையில் எனக்கு விருது வழங்கப்பட்டு இருந்தாலும், இதேபோல் திறமை வாய்ந்த பல பேர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை ஏற்றுக்கொள்ள என் மனசாட்சி இடம் தரவில்லை. இந்த தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும், சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் எதிர்கால நலனை கருதியும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் எனக்கு வழங்கிய விருதை உங்களிடம் திருப்பி ஒப்படைக்கிறேன். மேற்படி விருது வழங்கிய நிகழ்ச்சியில் நான் இடம் பெறும் எந்த ஒரு புகைப்படம் அல்லது படக்காட்சிகள் உள்ளிட்ட எவையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் இடம் பெறுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ராதிகா கூறியிருக்கிறார். |
| Quote: |
![]() சிறந்த சின்னத்திரை நடிகையாக ராதிகா தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு சின்னத்திரைக் கலைஞர்கள் கூட்டமைப்புடன் விஷன் புரோ மற்றும் காஸ்மிக் டவுன் நிறுவனங்கள் இணைந்து 2008-ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை கடந்த சனிக்கிழமை வழங்கியது. இதில் சிறந்த நடிகைக்கான விருது "அரசி' தொடருக்காக ராதிகாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருது "திருமதி செல்வம்' தொடருக்காக சஞ்சய்க்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக குமரன் தேர்வு செய்யப்பட்டார். "திருமதி செல்வம்' தொடருக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதை "கோலங்கள்' திருச்செல்வம் பெற்றார். இசையமைப்பாளருக்கான விருது இமானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த வில்லி நடிகைக்கான விருது நடிகை வடிவுக்கரசிக்கும், வசனகர்த்தாவுக்கான விருது பாஸ்கர் சக்திக்கும், நகைச்சுவை நடிகருக்கான விருது ஜெயமணிக்கும், ஒளிப்பதிவாளருக்கான விருது வசீகரனுக்கும் வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் நடிகை எஸ்.என்.வரலட்சுமிக்கு வழங்கப்பட்டது. விழாவில் நடிகர்கள் ஜீவா, பாக்யராஜ், டெல்லி கணேஷ், நடிகைகள் குஷ்பு, தேவயானி, சங்கீதா, அபிதா, இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்கள |