|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Vasanth TV
| Topic started by aanaa on Sun Jun 22 10:36:29 2008. | [Full View] |
| From: aanaa on Sat Jun 6 10:06:07 2009. | [Full View] |
| Quote: |
|
இம்சை அரசன் 23-ம் எலிகேசி ``இம்சை அரசன் 23-ம் எலிகேசி'' என்ற பெயரில் ஒரு புதிய நகைச்சுவை தொடர் வசந்த் டிவியில் வரவிருக்கிறது. நாட்டு நடப்பை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிற இந்த தொடரில், வடிவேல் சேகர், அந்தோணி, சுருளி மனோகர், கலைவாணி, ஜெனிப்பிரியா, சத்யா, ரீனா, மாலா, கலாரஞ்சினி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த தொடரில் கலந்து கொண்டு நகைச்சுவை வழங்குகிறார். கதை-வசனம் எழுதி இயக்குபவர் கே.ஜெயமணி |
| From: aanaa on Sat Jun 6 10:06:59 2009. | [Full View] |
| Quote: |
|
மெய்யா, பொய்யா! வசந்த் டி.வி.யில் சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி; `மெய்யா, பொய்யா.' சமூகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ - மாணவிகள், சமூக சேவகர்கள், மனித உரிமை கழக பிரதிநிதிகள், தனியார் நிறுவன அலுவலர்கள் என பல்துறை அறிஞர் பெருமக்களும், பெண்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய சிறந்த விமர்சனங்களை எழுதுவோருக்கு `மெய்யா பொய்யா' நிகழ்ச்சி நடைபெறும் மேடையிலேயே பரிசுப் பொருட்களை வழங்குகிறார்கள். இயக்கம்: எஸ்.ஏ.விஜயகுமார். |
| From: aanaa on Sun Jul 5 8:44:34 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:56:26 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 12 7:49:04 2009. | [Full View] |
| Quote: |
|
ஆலய தரிசனம் வசந்த் டி.வி.யில் காலை 7.05 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் `ஆலய தரிசனம்' நிகழ்ச்சி 100 எபிëசோடை எட்டியிருக்கிறது. ஆலயத்தின் வரலாறு, உருவான பின்னணி, மகிமைகள், அருள் பாலிக்கும் கடவுளின் தோற்றம் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களை இந்த நிகழ்ச்சியில் காணலாம். இயக்கம்: இ.மணிபாரதி. |
| From: aanaa on Sun Jul 12 7:54:28 2009. | [Full View] |
| Quote: |
|
தமிழ் முழக்கம் தமிழ் இலக்கிய வளத்தை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி `தமிழ் முழக்கம்'. இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் தொடக்க உரை நிகழ்த்தி துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியில் கவிக்கோ அப்துல் ரகுமான், பெரியார்தாசன், வாணியம்பாடி அப்துல் காதர், திருச்சி கல்யாண ராமன்உள்ளிட்ட பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள். ஞாயிறு தோறும் காலை 11.30 மணிக்கு வசந்த் டிவியில் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியை காணலாம். |
| From: aanaa on Sun Jul 12 7:55:33 2009. | [Full View] |
| Quote: |
|
தமிழுக்கு மரியாதை வசந்த் தொலைக்காட்சியில் வர இருக்கும் ``தமிழுக்கு மரியாதை'' என்னும் புதிய அறிவுத்திறன் போட்டி நிகழ்ச்சி, பிற மொழிகள் கொஞ்சமும் கலப்படம் இல்லாமல் தயாராகிறது. தமிழ் இலக்கண, இலக்கியங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லி, பரிசு பெறலாம். எஸ்.ஏ. விஜயகுமார் எழுதி இயக்குகிறார். தயாரிப்பு: வசந்த் தொலைக்காட்சி. |
| From: aanaa on Sat Jul 18 15:50:02 2009. | [Full View] |
| Quote: |
|
லவகுசா வசந்த் டிவியில் நாளை முதல் ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. `லவகுசா' புராணத் தொடர். ராமாயணத்தில் சுந்தரகாண்டத்திற்கு பிறகு வரும் காண்டம் உத்திரகாண்டம். இது சிறப்பானதொரு காண்டமாகும். இந்த காண்டத்தின் நிகழ்வுகள் லவகுசாவில் இடம் பெறுகின்றன. ராமனின் மகன்கள் லவன், குகன் போன்றோரின் கதைகளையும், சீதையின் பெருமைகளையும், சீதையின் வாழ்க்கைப் பாதையின் பெருமைகளையும் சொல்லும் தொடர் இந்த லவகுசா. தொடரில் சீதா பிராட்டியாக யுவராணி நடிக்கிறார். கவுரிமனோகர் தொடரை இயக்குகிறார். தேவநாராயணன் கதை, வசனம் எழுதுகிறார். தயாரிப்பு: டி.எஸ்.சேதுராமன். |
| From: aanaa on Sat Jul 25 10:42:35 2009. | [Full View] |
| Quote: |
|
பெண்கள் அரங்கம் ஞாயிறு தோறும் வசந்த் டிவியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `பெண்கள் அரங்கம்'. பெண்களின் பிரச்சனைகளை அலசும் இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு பெண்கள் விவாதிக்கிறார்கள். இயக்கம் இ.மணிபாரதி. |
| From: R.Latha on Wed Nov 11 3:46:50 2009. | [Full View] |