|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Raj TV
| Topic started by aanaa on Mon May 5 9:13:53 2008. | [Full View] |
| From: aanaa on Fri May 22 20:56:29 2009. | [Full View] |
| Quote: |
|
என் பார்வையில் ராஜ் டிவியில் திங்கள் தோறும் மாலை 6.30 மணிக்கு `என் பார்வையில்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. திரையில் உணர்வு பூர்வமாய் கதை சொல்லும் இயக்குனர்கள், தங்கள் சினிமா சாதனைகளை `மனம் திறந்து' பேசுகிறார்கள். |
| From: aanaa on Fri May 22 20:57:15 2009. | [Full View] |
| Quote: |
| தினம் தினம்
ராஜ் டிவியில் வியாழன் தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி `தினம் தினம்' மக்கள் மேடை' மருத்துவர்கள், கல்வியாளர்கள், வணிகர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் பல துறை வல்லுநர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்கள். |
| From: aanaa on Sat May 30 10:53:19 2009. | [Full View] |
| Quote: |
|
என்றும் இனியவை தமிழ்த்திரை வரலாற்றில் என்னதான் மேற்கத்திய இசையின் தாக்கம் இருந்தாலும் பழைய பாடல்களை ரசிக்கும் ரசனை என்றுமே குறைவதில்லை. கேட்கத் தெவிட்டாத பழைய பாடல்களின் தொகுப்பாக ``என்றும் இனியவை'' நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது ராஜ் டிவி. ராஜ் டிஜிட்டல் பிளஸ்ஸில் திங்கள் தோறும் காலை 7.30 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சியை காணலாம். |
| From: aanaa on Sat Jun 6 10:03:02 2009. | [Full View] |
| Quote: |
|
எஸ்.பி.பி. திரைக் காவியங்கள் ராஜ் டிவியில் இம்மாதம் முழுவதும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்த படங்கள் இடம்பெறுகின்றன. இன்றளவும் தமிழ் திரை இசை வரலாற்றில் தனது மதுரக்குரலால் நீங்காத முத்திரையைப் பதித்தவர், ஒரு கட்டத்தில் நடிகராகவும் முத்திரை பதித்தவர். குறிப்பாக கேளடி கண்மணி, சிகரம் போன்ற படங்களில் தேர்ந்த குணசித்ர நடிகராகவும் வெளிப்பட்டவர். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 1.30 மணிக்கு எஸ்.பி.பி. நடித்த படங்களை காணலாம். |
| From: aanaa on Sat Jun 6 10:04:09 2009. | [Full View] |
| Quote: |
| கோடைக் கொண்டாட்டம்
ராஜ் டிவி நடத்திவரும் கோடை சிறப்பு நிகழ்ச்சிகளில் ``கோடைக் கொண்டாட்டம்'' நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாகி இருக்கிறது. திருவண்ணாமலை, மதுரை போன்ற இடங்களில் நடந்து முடிந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து இப்போது திருச்சியிலும் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெறும் ``கோடைக் கொண்டாட்டம்'' இசை நிகழ்ச்சியின் தொகுப்பு, நாளை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. |
| From: aanaa on Sat Jul 18 15:53:31 2009. | [Full View] |
| Quote: |
|
புத்தம் புது காலை ராஜ் டிவியில் தினமும் காலை 6.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ``புத்தம் புது காலை'' இதில் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும் யோகக் கலையை ``நலம் வாழ'' பகுதியின் வாயிலாக எளிய முறையில் எடுத்துரைப்பது சிறப்பு அம்சம். அதோடு உடற்பயிற்சி பற்றிய செயல்முறை விளக்கங்களும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. |
| From: aanaa on Sat Jul 25 10:30:34 2009. | [Full View] |
| Quote: |
|
ராஜகீதம் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ``ராஜகீதம்'' ஒன்பது வருடங்களாக இசை நேயர்களை கவர்ந்த நிகழ்ச்சி. நான்கு தொடர்களை முடித்து இப்போது ஐந்தாவது தொடரில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல இடங்களில் குரல் தேர்வு நடந்தது. இந்த முதல்சுற்றில் நேயர்களே நடுவர்களாக இருந்து சிறந்த பாடகர்களுக்கு வாக்களிப்பது குறிப்பிடத்தக்கது. |
| From: aanaa on Sat Jul 25 10:32:18 2009. | [Full View] |
| Quote: |
| ஆலிவுட் திரைத்திருவிழா
ராஜ் டிவியில் சனிக் கிழமை தோறும் ஆலிவுட் படங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை கவரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படங்கள், குழந்தைகளை கவரும் நகைச்சுவை மற்றும் மாயாஜால தந்திர காட்சிகள் நிறைந்த படங்கள் ஒளிபரப்பாகின்றன. |
| From: aanaa on Sat Aug 1 11:53:15 2009. | [Full View] |
| Quote: |
|
ஆத்ம சங்கமம் ராஜ் டி.வி.யில் இப்போது சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி "ஆத்ம சங்கமம்'' இதில் ஸ்ரீராஜ சுவாமிகள் வழங்கும் ஆன்மீக அறிவுரைகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது. |
| From: dev on Wed Aug 5 9:50:06 2009. | [Full View] |