|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
JAYA TV
| Topic started by subanrao on Sun Dec 2 21:25:03 2007. | [Full View] |
| From: aanaa on Sun Jun 21 17:19:59 2009. | [Full View] |
| Quote: |
| Monday to Friday, everyday morning 6.30 , you can watch Americas in Jaya TV. The program is the recorded version AND A RETELECAST of Cleveland Thyagaraja Utsavam, an yearly event in AMERICA. RENOWN ARTISTE LIKE Smt. Sudha Raghunathan, Kunnakkudi Sri M. Balamuralikrishna, Neyveli Santhanagopalan, O.S.Thyagarajan, M.S. Sheela, Lalgudi GJR Krishnan and Vijayalakshmi. The year 2009 is the Aradhana's 32nd year[ APRIL 9TH TO APRIL 19TH] {ALREADY SUDHA RANGANTHAN, SOWMAYA, RAVIKIRAN AND SOME GLIMPSES OF usA have been TELECAST last week) |
| From: aanaa on Sat Jun 27 9:05:36 2009. | [Full View] |
| Quote: |
|
திரும்பிப் பார்க்கிறேன் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு `ஜெயா தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பாகி வரும் `திரும்பிப் பார்க்கிறேன்' சிறப்பு நிகழ்ச்சியில் இந்த வாரம் திரைப்பட நடிகை ராஜசுலோசனா குறித்த நினைவலைகள் ஒளிபரப்பாகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் போன்ற அன்றைய பிரபல நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை ராஜசுலோசனா. இவரது தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் உச்சரிப்பில் வல்லவர். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். நடனம் கற்றவர். அன்றைய இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர். கதாநாயகியாகவும், நகைச்சுவையாகவும் குணசித்திர பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது கணவர் ஒரு புகழ்மிக்க திரையுலக இயக்குனர். நிகழ்ச்சியில் இளம் வயது முதல் கலையுலக வாழ்வில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த நிகழ்வுகளை ராஜசுலோசனா பட்டியலிடுகிறார். நிகழ்ச்சியினூடே அவர் நடித்த காட்சிகள், மற்றும் பாடல்களும் ஒளிபரப்பாகிறது. |
| From: aanaa on Sat Jul 4 8:58:51 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:43:37 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:51:32 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:51:48 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 12 7:51:31 2009. | [Full View] |
| Quote: |
|
இதயம் தொட்ட கதைகள் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, `இதயம் தொட்ட கதைகள்'. இதில் பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாரம் ஒரு கதையாக வெளிவருகிறது. சின்னத்திரை முன்னணி நடிகர்- நடிகைகள் ரசிகர்களின் இதயத்தை வசப்படுத்த வருகிறார்கள். பிரபல எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை' எனும் தொடர்முதலில் வெளிவருகிறது. தொடர்ந்து சுவாரஸ்யமான கதையம்சங்களுடன் கூடிய பல வித்தியாசமான படைப்புகள் வெளிவரவுள்ளன. முக்கிய கதாபாத்திரங்களாக வேலு பிரபாகரன், சாந்தி ஜீவா யுவராஜ், பிரியன் நடிக்கிறார்கள். செந்தில் குமார் இயக்குகிறார். |
| From: aanaa on Sun Jul 12 7:56:58 2009. | [Full View] |
| Quote: |
|
`ஹாசினி பேசும் படம்' ஜெயா டி.வி.யில் நடிகை `சுஹாசினி' தொகுத்து வழங்கும் `ஹாசினி பேசும் படம்' நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்துள்ள `நாடோடிகள்' திரைப்படத்தை விமர்சனம் செய்கிறார்கள். படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி, கதாநாயகன் சசிகுமார் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். நாளை மதியம் 1.30 மணிக்கு இந்த |
| From: aanaa on Fri Jul 17 21:42:31 2009. | [Full View] |
| Quote: |
| திரும்பிப் பார்க்கிறேன்
ஜெயா டிவியில் அன்றைய திரைக்கலைஞர்கள் பங்கேற்று வரும் `திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரபல திரைப்பட நடிகை ஜெயந்தி பங்கேற்கிறார். கன்னட மாநிலத்தில் பிறந்த ஜெயந்தியின் இயற்பெயர் கமலா குமாரி, நடன கலைஞராக ஆகவேண்டும் என்று தாயாரின் விருப்பத்திற்கிணங்க நடனப்பள்ளியில் பயின்றார். இளம் வயதில் சில தமிழ், தெலுங்குப்படங்களில் துணை நடிகை வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் அறிமுகமான முதல் படம் மங்கையர் உள்ளம் மங்காத செல்வம். பிரபல நடிகை அஞ்சலிதேவியால் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, இதுவரை வெளிவராத, மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும், சக நடிகர்கள் - நடிகைகளுடனான அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் நடித்த படங்களிலிருந்து பாடல்களும், காட்சிகளும் இடையிடையே இடம்பெறும். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த நிகழ்ச்சி. |
| From: aanaa on Sat Jul 18 15:43:27 2009. | [Full View] |
| Quote: |
| அரையிறுதிப் போட்டியில் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்'
ஜெயா டிவியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வழங்கும் `என்னோடு பாட்டுப்பாடுங்கள்' நிகழ்ச்சியில் இளம்பாடகர், பாடகிகள் திருமணமான இல்லத்தரசிகள், டூயட் சீரிஸ் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் 4 பகுதிகளாக அரங்கேறியது. அதனை தொடர்ந்து 30 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கும் வகையில் `சீனியர் சீரிஸ்' எனும் பகுதி ஒளிபரப்பாகிறது. இந்த வாரம் முதல் `அரை இறுதி' போட்டி தொடங்கவுள்ளது. பின்னணி பாடகர் மனோ பங்கேற்கிறார். இந்த அரை இறுதி சுற்று தொடர்ந்து 2 வாரங்கள் ஒளிபரப்பாகவுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவியில் காணலாம். |