|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
MAKKAL TV
| Topic started by subanrao on Fri Nov 30 0:26:59 2007. | [Full View] |
| From: aanaa on Sat Jun 6 10:11:56 2009. | [Full View] |
| Quote: |
|
பட்டாம் பூச்சி 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நேரலையில் விளையாடும் கலகலப்பான விளையாட்டு நிகழ்ச்சி, `பட்டாம் பூச்சி'. கிராமங்களில் குழந்தைகள் இன்றும் விளையாடும் பிரசித்தி பெற்ற விளையாட்டுகளில், `கோழி பற பற, கொக்கு பற பற' விளையாட்டும் ஒன்று. இந்த விளையாட்டை நிகழ்ச்சித் தொகுப்பாளரோடு குழந்தைகள் விளையாடுவார்கள். எருமை என்பார் தொகுப்பாளர். `பற பற' என்று சொன்னால் தவறு. போட்டியிலிருந்து வெளியேற வேண்டும். அடுத்து வினோத உருவம் சுற்று. இரண்டு உருவங்கள் இணைந்து ஒன்றாக இருக்கும். அது எந்தெந்த உருவங்கள் என்று சரியாக சொல்ல வேண்டும். அடுத்து கட்டத்துக்குள் மறைந்திருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடித்து சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால் கைக்கடிகாரம், குறுந்தகடு, பள்ளி பை, தண்ணீர் குடுவை என்று பல பரிசுகளை வெல்லலாம். திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ``பட்டாம்பூச்சி'' சிறகடிக்கும். |
| From: aanaa on Sat Jun 6 10:12:54 2009. | [Full View] |
| Quote: |
| முகவரி
சிறு வணிகர்களும், குறு வணிகர்களும் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு மக்கள் தொலைக்காட்சி அமைத்து தந்திருக்கும் களம் `முகவரி'. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30 க்கு ஒளிபரப்பாகிறது. பெரிய நிறுவனங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தொகையை விளம்பரத்துக்காக மட்டும் செலவிடுகின்றன. ஆனால் சிறு வணிகர்களுக்கும், குறு வணிகர்களுக்கும் அத்தனை பெரிய தொகையை முடக்குவது இயலாத காரியம். அதே நேரத்தில் சந்தையில் தங்கள் பொருளையும் சந்தைப்படுத்த வேண்டிய கட்டாயமும், பெரிய நிறுவனங்களின் போட்டியில் தாக்குப் பிடிக்க வேண்டிய அவசியமும் உண்டு. இப்படிப்பட்ட சூழலில் - சிறு வணிகர்கள் விளம்பரம் செய்து பயனடைவதற்கான களம்தான் ``முகவரி''. |
| From: aanaa on Sat Jun 27 9:03:06 2009. | [Full View] |
| Quote: |
| வேலைவாய்ப்புத் தகவல்கள்
இன்றைக்கும் படிக்கும் மாணவர்களிடம் வேலை என்றதும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலை மட்டும்தான் கண்முன் விரிகிறது. ஆனால் அதையும் தாண்டி ஆயிரம் வேலை இருக்கிறது. பறக்கும் விமானம், தண்ணீரில் போகும் கப்பல், ஹோட்டல், தோல்பதனிடுதல், அச்சுத்துறை என்று பல துறைகள். ஒவ்வொரு துறையிலும் எப்போதும் திறமையான ஆட்களுக்கான தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. எந்த வேலைக்கு நாட்டிலும், உலக அளவிலும் தேவை அதிகமாக இருக்கிறது... முதுநிலை பட்டப் படிப்பு படித்தவர்களும் கூடுதலாக எதைப் படித்தால் வேலை கிடைப்பது சுலபமாகும் என்று கல்வியாளர்கள் பங்கேற்று நேரலையில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி ``வேலைவாய்ப்புத் தகவல்கள்''. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார் சிங்காரம். வியாழன் தோறும் காலை 11 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம். |
| From: aanaa on Sun Jul 5 8:46:23 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 5 8:50:53 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 12 7:44:12 2009. | [Full View] |
| Quote: |
| மருத்துவ நேரம்
மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நேரலை நிகழ்ச்சி, `மருத்துவ நேரம்'. எல்லோருக்குமே ஆரோக்கியமாக வாழ ஆசை இருக்கிறது. ஆனால் பல்வேறு வியாதிகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறோம். ஏன் வியாதி வருகிறது... உணவு முறையில் ஏற்பட்ட பிரச்சினையா? அல்லது சுற்றுச்சூழலா? அல்லது பரம்பரை வியாதியா? இப்படி பல்வேறு ஐயங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. அந்த ஐயங்களை தெளிவுபடுத்துவதற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் `மருத்துவ நேரம்' துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் நேரலையில் தோன்றி, நேயர்களின் நோய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார்கள். |
| From: aanaa on Sun Jul 12 7:45:04 2009. | [Full View] |
| Quote: |
|
தந்திர மாலை சனிக்கிழமைதோறும் இரவு 7 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `தந்திரமாலை.' மேஜிக்கில் கின்னஸ் சாதனை செய்த நடிகர் அலெக்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார். விதவிதமான மேஜிக்கை பார்க்கும் போது `இது எப்படி சாத்தியம்...' என்ற வியப்பு நம்மில் பலருக்கும் ஏற்படுகிறது, இந்த மேஜிக் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை இரண்டு துண்டாக வெட்டிக் காட்டுவது... தலையை தனியே பிரிப்பது... பூவிலிருந்து பூனை வரவைப்பது.. மெழுகுவர்த்தியை புறாவாக்குவது என்று விதவிதமான மாயா ஜாலங்களை செய்து காட்டுகிறார், அலெக்ஸ். |
| From: aanaa on Sat Jul 18 15:54:26 2009. | [Full View] |
| Quote: |
|
திசைகள் மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `திசைகள்'. இது தடுப்பூசி, கடுதாசி, பொய்திகள், சல்லடை, விடாது கருப்பு, ஒலி பெருக்கி, அன்று என அரை மணி நேரத்தில் விறுவிறுப்பாக ஏழு பகுதிகளாக வருகிறது. அன்றாட நாட்டு நடப்புகளை சிந்தனையை தூண்டும் விதத்தில் சுவாரசியமாக அலசுகிறது, இந்த திசைகள். அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளை புதிய பரிமாணத்தில் காணலாம். |
| From: aanaa on Sat Jul 25 10:45:50 2009. | [Full View] |
| Quote: |
|
தொழில் வளம் வீணை உருவாக்குவது எப்படி... காதுக்கு இனிய நாதம் எழுப்பும் வீணை எந்த மரத்தில் எப்படி உருவாகிறது... ஆலய மணி எப்படி செய்யப்படுகிறது... வாசனைப் பொருட்கள் எப்படி தயாராகிறது... செய்முறை விளக்கத்தோடு ஒவ்வொரு தொழிலையும் சொல்லித் தரும் நிகழ்ச்சி. அறிவுக்கு விருந்து. காண்பதற்கு வியப்பு. வளமான தொழில் உள்ள நாடு வல்லரசு. அதை உரக்கச் சொல்லும் நிகழ்ச்சி. இன்று இரவு 7.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை காணலாம். |
| From: aanaa on Sat Aug 1 12:03:26 2009. | [Full View] |
| Quote: |
|
உரிமைக்குரல் மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் `உரிமைக்குரல்' நிகழ்ச்சி வித்தியாசமான குரலாக ஒலிக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்குச் சென்று மக்களின் மனங்களை பதிவு செய்யும் இந்நிகழ்ச்சியை பிரபல பேச்சாளரும், பேராசிரியருமான ராமச்சந்திரன் இயக்குகிறார். சமூக பொருளாதார பண்பாட்டு ரீதியான பிரச்சினைகள், அவற்றில் அன்றாடம் குடும்பங்களில் பிரதிபலிக்கும் பிரச்சினைகளை விவாதப் பொருளாக்குகிறது இந்நிகழ்ச்சி. பங்கேற்பாளர்கள் வாதத்திறமையுடன் நகைச்சுவை ததும்ப தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இறுதியாக நிகழ்ச்சியின் நடுநாயகர் பிரச்சினைகளின் தன்மைக்குத்தக்கவாறு இறுதிக்கருத்தை எடுத்துரைக்கிறார். ஞாயிறு தோறும் காலை 10.30 மணிக்கு இந்நிகழ்ச்சியை காணலாம். |