|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Mekala By:The Metti Oli Team
| Topic started by sahana6 on Mon Aug 6 20:48:53 2007. | [Full View] |
| Quote: |
| Mekala - Title song |
| From: aanaa on Mon Apr 7 11:27:47 2008. | [Full View] |
| From: R.Latha on Sun May 4 22:28:05 2008. | [Full View] |
| From: R.Latha on Fri May 30 3:40:29 2008. | [Full View] |
| From: aanaa on Fri May 30 19:37:22 2008. | [Full View] |
| From: aanaa on Sat Aug 16 15:14:01 2008. | [Full View] |
| Quote: |
|
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடர் 300 எபிசோடை எட்டிப் பிடித்திருக்கிறது. முதலில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கிய இந்தத்தொடர், அதன்பிறகு 8 மணிக்கு மாறியது. சமீபகாலமாக அதிலும் மாற்றம் நேர்ந்து இப்போது மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தின் எந்தவொரு பிரச்சினையானாலும் அது மேகலாவின் தலையீட்டில் தீர்த்து வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு கேரக்டருமே தனித்தனி முக்கியம் வாய்ந்தவை. அவரவர் எதிர்கொள்ளும் போராட்டங்களில் நீந்தி கரை கடக்க மேகலா அவர்களின் பக்கத்துணையாய் இருக்கிறாள். மேகலாவின் சகோதரிகள் சக்தி, கண்மணி இருவரின் பிரச்சினைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்த நேரத்தில், மேகலாவின் பிளாஷ்பேக், அதில் மேகலாவுக்குள் இருந்த காதல் என கதை பயணிக்கிறது.மேகலாவின் காதலன் விஸ்வம் இப்போது ஜெயிலில் இருக்கிறான். அவர்கள் ஒன்று சேர்வார்களா? இல்லையா? என்ற கேள்விக்குப் பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ் நிற்கிறது. மேகலாவின் தங்கை சக்தி இப்போது தனது காதல் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விட்டாள். அங்கே அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிற மாதிரி ஒரு சம்பவம் அமைகிறது. சக்தி வேலையில் சேர்ந்த ஆபீசின் 45 வயது பேச்சிலர் மேனேஜர்தான் இந்தப் பிரச்சினையின் நாயகன். இப்போது மேகலா குடும்பத்தின் ஒரே வாரிசான கடைசித் தம்பியின் கதைக்குள் தொடர் வந்திருக்கிறது. அவன் ஒரு தவறான முடிவெடுத்து விடுகிறான். அவர்கள் குடும்பத்துக்கு ஆகாத குடும்பத்துப் பெண்ணொருத்தி மேல் காதலானவன், அந்தப்பெண்ணை மணந்து வீட்டோடு மாப்பிள்ளையாகி தங்கள் குடும்பத்தை அதிர வைக்கிறான். இதில் வெடிக்கும் பிரச்சினைகள் மேகலா குடும்பத்துக்குள் எந்த மாதிரியான பூகம்பத்தை உருவாக்கி வைக்கிறது என்பது இனிவரும் பரபரப்பான காட்சிகளாக இருக்கும் என்கிறார், இயக்குனர் விக்ரமாதித்தன். தொடரில் மேகலாவாக காயத்ரி, சக்தியாக பாவனா, கண்மணியாக ஸ்ரீவித்யா நடிக்கிறார்கள். தயாரிப்பு: சித்திக். தொடர்பற்றி அவர் கூறும்போது, "குடும்பப்பாங்கான தொடர்கள் உணர்வுபூர்வமாகவும்அமைந்துவிட்டால் ரசிகர்கள் தொடரோடு ஒன்றி விடுவார்கள் என்பதற்கு எனது தயாரிப்பில் வந்த மெட்டி ஒலி தொடர் உதாரணம். இப்போது மேகலா தொடரும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது. தொடர் ஒளிபரப்பாகும் நேரம் 6 மணிக்கு மாற்றப்பட்ட பிறகும் கனமான கதையால் 8 மணிக்கு ஒளிபரப்பானபோது இருந்த அதே ரேட்டிங்கை தொடர் தக்கவைத்திருக்கிறது.'' என்கிறார். |
| From: aanaa on Sun Jan 4 11:04:01 2009. | [Full View] |
| Quote: |
|
மேகலா-400 திங்கள்முதல் வெள்ளிவரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடர், இப்போது 400 எபிசோடை நிறைவு செய்திருக்கிறது. தனது குடும்பத்தினரின் ஒவ்வொரு தேவைக்கும் தன்னை வருத்திக் கொள்ளும் மேகலா கேரக்டர், பெண்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாகி இருக்கிறது. தொடரில் மேகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? தொடரின் இயக்குனர் விக்ரமாதித்தனிடம் கேட்டபோது... "தொடரில் இப்போது இடம் பிடித்திருக்கும் அன்பு கேரக்டர் மேகலாவின் வாழ்க்கையில் எப்படி இடம் பிடிக்க முயற்சிக்கிறான் என்பது அடுத்துவரும் பரபரப்பு காட்சிகளாக இருக்கும். இந்த அன்பு ஒரு பிரபல நிறுவனத்தில் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருக்கிறான். தனது சின்ன வயதில் நேர்ந்த பெரும்பாதிப்பு காரணமாக திருமணத்தை தவிர்த்து வருகிறான். தற்செயலாக ஒரு பத்திரிகையில், அடுத்து டிவியில் என்று முகம் காட்டும் மேகலா அவனைக் கவர்கிறாள். அவளை இப்படி ஊடகங்களின் வழியாக அவன் காணநேர்ந்த நாட்களில் அவனுக்கு ஏதாவது நல்லது நடக்கிறது. எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அவளையே மணப்பது என்ற முடிவில் இருக்கும் நேரத்தில், அவனது கம்பெனிக்கே வேலைக்கு வருகிறாள் மேகலா. அவளை தனது நேரடி உதவியாளராக நியமித்துக்கொண்டு காதலை சொல்ல தருணம் பார்க்கும் நேரத்தில், மேகலாவின் கடைசித் தங்கை கீர்த்தனா ஒரு பிரச்சினையில் சிக்குகிறாள். இந்தப் பிரச்சினைக்கு மேகலா குடும்பமே செய்வதறியாது பதறும் சூழலில், அன்பு தனது செல்வாக்கு மூலம் அந்த பிரச்சினையை சரி செய்கிறான். மேகலாவின்குடும்பத்தினரிடம் தன்னை நல்லவனாக காட்டிக்கொண்டு அவளை தன் மனைவியாக்க வேண்டும் என்பதுதானே அவன் திட்டம். எல்லாம் கூடி வரும்வேளையில், அன்புவை உள்ளூற நேசிக்கும் மேகலாவின் தோழி அனிதா மேகலாவை சந்திக்கிறாள். "நீ நினைத்தால் அன்புவை எனக்கு பேசி முடிக்கலாம்'' என்கிறாள். இப்போது மேகலாவே தன் தோழியின் விருப்பம் குறித்து அன்புவிடம் பேசவேண்டிய கட்டாயம். அன்பு அதை எப்படி எடுத்துக்கொள்வான்? இதற்கிடையில் மேகலாவின் காணாமல்போன தந்தையை தனது பாதுகாப்பில் அடைத்து வைத்திருப்பவன் அன்பு தான் என்ற உண்மையும் அவளை நெருங்கி வரப்போகிறது. மேகலா மனதில் இப்போதும் காதலனாக வாழ்ந்து கொண்டிருக்கும் விஸ்வம் ஒரு கைதியாக ஜெயிலில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான். இந்த விஸ்வம் யாரென்று தெரிந்தால் அன்புவால் அவன் என்னமாதிரியான பிரச்சினைகளை சந்திக்க நேரும்? இப்படி கேள்விகளுக்கு விறுவிறுப்பான பதிலாய் மேகலா விரைகிறாள்.'' தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக். |
| From: aanaa on Fri Feb 6 20:54:26 2009. | [Full View] |
| From: aanaa on Sat May 9 8:46:10 2009. | [Full View] |
| Quote: |
|
DHEEPAN CHAKRAVARTHY COMES BACK TO MEGALA SERIAL AFTER A YEAR'S TIME For the last one year, the mega-serial Megala has been running without the character Kalaiyarasu being done by Dheepan Chakravarthy. As per the story line, Kalaiyarasu, is the building contractor and head of the family is kidnapped by a gang. The story remains suspense over the whereabouts of the Kalaiarasu. His family consists of elder sister Vadivukarasi, wife Sankarabaranam fame Rajalakshmi, their three daughters - Gayathri, Sri Vidya, Revathy Priya and Bhavana Kalaiarasu are faced with a lot of problems when Kalaiarasu was dumped in a dark room. Meghala which has crossed nearly 500 episodes now, is again inttroducing Dheepan Chakravarthy as if he escapes from the imprisoned room of the goondas. But in reality, he seeks asylum in a car to escape after getting away from the room. But the very same goons take him to another place and when they tried, the car meets with an accident. In the end, Kaliarasan losts all his previous happenings and has become like a child getting admitted to a hospital. Last week, when the hospital scene was shot at the ARS Gardens, the director of the serial Vikramadityan and his two of his associates Kannan and Dinesh wanted to give the real picture of the hospital and hence had chosen the ARS. In the hospital scene real tablets brought from a pharmacy and all of them were B complex with some syringes and injection tubes. Nearly 40 to 50 junior artistes were hired with bandages to give a good look of the hospital. They were supplied eatables like biscuit pockets, fruits like bananas and organge and bread too. For each and every shot, both the associate directors of Vikramaditya were careful about the delivery of the dialogues in which an artist Sekar, who took recently VRS from a nationalised bank to deliver the dialogues. In the scene, Kalaiarasan ( who is in a mental state of forgetfullness) begs two of the unknown visitors of the hospital to remind him who he was. Meghala, according to many viewers, has a lot of female artistes than male artistes. It has Vadivukarasi, Sankarabaranam Rajalakshmi, Sri Vidya, Bhavana, Revathy Priya, Bhanumathy, 'Sethu' fame Bharathi, Sri Lekha, besides the leading artistes like Rajakanth, Raj Madan, Yugendran. The serial was initially introduced to be telecast around 8 PM to 8.30 PM through the Sun TV Channel was changed to 6 PM to 6.30 PM. Since, the election date is nearing the Cine Times are making out possible effort to produceas much episode as it could do for telecast in the Sun TV Channel. |
| From: aanaa on Sat Sep 26 11:37:26 2009. | [Full View] |
| Quote: |
|
இவரல்லவா நடிகர்! சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மேகலா தொடரில் முக்கிய கேரக்டரில் யுகேந்திரன் நடித்து வந்தார். இப்போது அவர் நடித்த கேரக்டரில் விஜயசாரதி நடித்து வருகிறார். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரை இன்னொரு நடிகர் ஒப்புக்கொள்ளும்போது அந்த கேரக்டரை அவர் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கேரக்டர் சோபிக்கும். அதைப் புரிந்து கொண்டு டைரக்டர் விக்ரமாதித்தன் விஜயசாரதியிடம் அந்த கேரக்டரின் தன்மை பற்றி விளக்க முற்பட்டார். ஆனால் விஜயசாரதியோ நீங்கள் அந்த கேரக்டரில் என்னை நடிக்க கேட்டபோதே இன்டர்நெட்டில் தொடரை பார்த்து அந்த கேரக்டரை ஸ்டெடி பண்ணிக்கொண்டேன். அதனால் நாளைக்கே படப்பிடிப்பு என்றாலும் நான் ஓ.கே. என்று சொல்லியிருக்கிறார். நடிகரின் இந்த இன்வால்வ்மென்ட்டில் ஒருகணம் பிரமித்துப் போயிருக்கிறார், இயக்குனர். |
| From: aanaa on Sat Oct 17 9:12:11 2009. | [Full View] |
| Quote: |
|
மேகலா-600 திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மேகலா தொடர் 600 எபிசோடை கடந்திருக்கிறது. கடன் தொல்லையை சமாளிக்க முடியாத மேகலாவின் தந்தை கலையரசு ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே ஓடிப் போகிறார். போகிற இடத்தில் ஒரு விபத்தில் சிக்கி பழைய நினைவை அறவே இழந்து விடுகிறார். இப்போது அவருக்கு தான் யார் என்பது கூட நினைவில் இல்லை. பழசையெல்லாம் மறக்கவைத்து கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் காலம், கடைசியில் அவரை அவரது கடைசிப்பெண் திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது. கல்யாண வீட்டில் சமையல்காரர்களில் ஒருவராக அவரைப்பார்த்து அதிர்ச்சிஅடைகிறாள் அவரின் அக்கா சண்முகவடிவு. அக்கா மூலம் பிரிந்த குடும்பம் மீண்டும் அவருக்கு கிடைக்கிறது. தொழிலதிபராக கொடிகட்டிப்பறந்த அன்றைய கால கட்டத்தில் அவருக்கு அக்கா வடிவு பேச்சு தான் வேதம். அக்கா பேச்சை கண்ணை மூடிக்கொண்டு கேட்டவர் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் வெறுப்புக்குரியவரானார்.அக்கா பேச்சைக் கேட்டே மூத்தமகள் மேகலாவை வீட்டை விட்டு துரத்தினார். இப்படி வீட்டில் இருந்த அந்த நாளில் குடும்பத்துக்கே சிம்மசொப்பனமாக இருந்துவந்த அந்த கலையரசன், இப்போது எல்லாம் மறந்தவராய் எதுவும் நினைவில் இல்லாதவராய் மீண்டும் அந்த குடும்பத்திற்குள் வந்திருக்கிறார்.ஆனால் அதிரடியான மாற்றம், எல்லாரிடமும் அன்பைப் பொழிகிறார். தன் கோபக்கார தம்பி பாசமிகு தம்பியாக திரும்பி வந்திருப்பதில் அக்கா வடிவுக்கு மட்டும் அதிர்ச்சி. குடும்பத்தவரை பற்றி அக்கா பழைய நினைப்பில் ஏதாவது குறை சொல்லப் போக, அதற்காக அவர் அக்காவை கண்டிக்கும் அளவுக்குப் போகிறார். இது அக்காவை இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.. அன்பு, மேகலா குடும்பத்தில் நல்லவனாக நடித்தபடி தன் நாடகத்தை தொடர்ந்த காலம் உண்டு. அவன் நோக்கம் மேகலாவை திருமணம் செய்துகொள்வது. அதற்காக பெயருக்கேற்றபடி அத்தனை அன்பை அந்தக் குடும்பத்தில் கொட்டுகிறான். அத்தனை சாமர்த்தியமாக காய் நகர்த்தி மேகலாவைத் தவிர அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த அன்புக்கும் உரியவனாகி விட்ட அன்புவால் மேகலாவை திருமணம் செய்யமுடியுமா? மேகலாவின் அப்பா கலையரசனுக்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டால் இப்போது அவர் பாசத்தை பொழிந்து கொண்டிருக்கும் மேகலாவை மறுபடியும் துரத்தி விட்டுவிடுவாரா? மேகலாவின் தங்கை கண்மணி வாழ்வில் அவள் கணவனாக வந்த பூபதி ஒரு அதிர்ச்சிப்புயல். குடிபோதையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி மனைவியை அத்தனை நோகப்பண்ணினவன் இப்போது அதிக போதையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான ஒருநோயாளி. அதுவும் மரணத்தின் நாட்கள் எண்ணப்படும் ஒரு நோயாளி. அவன் போகிற காலத்துக்குள் அதுவரை தன்னால் சுகப்படாத தன்மனைவி கண்மணிக்கு ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துவிட நினைக்கிறான்.அவன் எண்ணம் ஈடேறியதா? தொடரும் காட்சிகள், தொடரை தொடர்ந்து சுவாரசியப்படுத்தும்'' என்கிறார், இயக்குனர் விக்ரமாதித்தன். மேகலாவாக காயத்ரி நடிக்கிறார். மேகலாவின் தந்தை கேரக்டரில் தீபன்சக்ரவர்த்தியும் அத்தை கேரக்டரில் வடிவுக்கரசியும் நடிக்கிறார்கள்.மற்றும் பாவனா, ஸ்ரீதேவி, ஸ்ரீ, சஞ்சீவ், சந்திரபோஸ், ராஜலட்சுமி, கவுதமி, ராஜ்காந்த், ஸ்ரீகுமார், வின்சென்ட்ராய் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை: முத்துச்செல்வன். வசனம்: பாஸ்கர் சக்தி. இசை: இளங்கோ. இயக்கம்: விக்ரமாதித்தன். தயாரிப்பு: `மெட்டிஒலி' சித்திக். ![]() |