|
| The Hub : TV,TV Serials and Radio | Hello Guest, Login to post. |
Kalaignar TV?
| Topic started by R.Latha on Mon Aug 6 4:43:55 2007. | [Full View] |
| From: aanaa on Sat Jul 18 16:14:23 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 19 17:34:20 2009. | [Full View] |
| From: aanaa on Sun Jul 19 17:35:08 2009. | [Full View] |
| From: R.Latha on Fri Jul 24 2:38:00 2009. | [Full View] |
| From: aanaa on Sat Jul 25 10:39:20 2009. | [Full View] |
| Quote: |
|
தங்கமான புருஷன்-200 கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை ஒளிபரப்பாகி வரும் ``தங்கமான புருஷன்'' 200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. கலைமாமணி சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார். தொடரில் தங்கமான புருஷனாக நடிப்பவர் பிரேம்சாய். சேது பட நாயகி அபிதா நாயகி. இவர்களுடன் பூஜா, பாத்திமா பாபுவும் நடிக்கிறார்கள். எவர்ஸ்மைல் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஈ.ராமதாஸ் தயாரித்து வழங்குகிறார். கல்யாண்-ராசி மனமொத்த தம்பதிகள். இவர்கள் இல்லற வாழ்வில் நெருஞ்சி முள்ளாய் குறுக்கிடுகிறாள் தாரா. இவள் கல்யாணை ஆரம்பம் முதலே நேசித்து வருபவள். ஆனால் தன் காதலை கல்யாணிடம் சொல்லத் தருணம் பார்த்திருந்த இடைவெளிக்குள் அவன் ராசியின் தங்கமான புருஷனாகி விடுகிறான். ஆனாலும் தாராவால் கல்யாணை மறக்க முடியவில்லை. எப்பாடு பட்டாவது அவனை அடையும்விதமாக காய்களை நகர்த்துகிறாள். அதனால் கல்யாண் மட்டுமின்றி அவன் மனைவி ராசியும் பாதிக்கப்படுகிறாள். தாராவின் மறைமுக தாக்குதலை கல்யாணும் ராசியும் எதிர்கொண்டு மீண்டு வரமுடிகிறதா என்பது பிற்பகுதி கதை. கதையை விவரித்த டைரக்டர் சுந்தர்.கே.விஜயன், தொடரில் சில புதிய கேரக்டர்கள் இனி வரப்போகிறார்கள் என்றும் தெரிவித்தார். `அலைகள்'ராணி, பானுமதி, பொள்ளாச்சி பாபு, லதாராவ் ஆகியோர் இந்த புதிய பட்டியலில் இருக்கிறார்கள்.
|
| From: aanaa on Sat Jul 25 10:39:55 2009. | [Full View] |
| Quote: |
| `வைர' விருது
ஏவி.எம். தயாரித்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வைரநெஞ்சம் தொடர்,, 450 எபிசோடுகள் ஒளிபரப்பாகி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஏவி.எம். ஏ.சி. அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்குகலைஞர் தொலைக்காட்சி நிர்வாகிகள் அமிர்தம், ராம.நாராயணன் தலைமையேற்று, தொடரின் இயக்குனர் ஆர்.கே., தயாரிப்பாளர்கள் எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அபர்ணா குகன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கேடயங்கள் வழங்கினார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பேசும்போது `வைர நெஞ்சம்' தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர் மன்றம் வைத்து கடிதங்கள் எழுதியவர்களை பாராட்டினார். தயாரிப்பாளர்களின் சார்பில் கலைஞர் டிவிக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள். அதை அமிர்தம், ராம.நாராயணன் பெற்றுக் கொண்டனர்.
|
| From: R.Latha on Tue Jul 28 3:28:13 2009. | [Full View] |
| From: aanaa on Sat Aug 1 12:01:13 2009. | [Full View] |
| Quote: |
|
மைதிலி-100 கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மைதிலி தொடர் 100 எபிசோடுகளை தாண்டியிருக்கிறது. நடைமுறை வாழ்க்கையை இயல்பாக சொல்லிவரும் இந்த தொடரில் அழுகை கிடையாது பழிவாங்கல் கிடையாது. கதையின் போக்கில் ஏற்படும் சம்பவங்களே கதையை இயல்பாகவும் பரபரப்பாகவும் நகர்த்திப் போகிறது. ஜனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் எந்த விஷயமும் இப்படியான தொடர்கள் மூலம் மக்களுக்குப் போய்ச்சேரும்போது அது மாபெரும் மாற்றத்தை உண்டு பண்ணி விடுகிறது. அப்படியொரு விழிப்புணர்வு விஷயம் மைதிலி தொடரில் கதையோடு கலந்து சொல்லப்பட்டதால் இந்த தொடருக்கு எதிர்பார்த்ததைவிடவும் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது'' என்கிறார், தொடரின் இயக்குனர் டி.மாறன். தொடருக்கான திரைக்கதை வசனமும் இவரே. தொடரில் அஜய்யும் சுஜிதாவும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இதையும் பெருமையாக பகிர்ந்த கொண்டார், இயக்குனர். ![]() |
| From: R.Latha on Wed Oct 21 5:30:34 2009. | [Full View] |
| From: R.Latha on Wed Nov 11 3:45:31 2009. | [Full View] |